HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நான் ஒரு கறுப்பி

நான் ஒரு கறுப்பி, 

ஆம் நான் ஒரு கறுப்பி அதனால் என் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும் என்று என் பெற்றோர் பயந்து பயந்தே என்னை முடித்துக் கொடுப்பவனுக்குக் கொடுக்க என்று வாயையும் வயிற்றையும் கட்டி பணம், நகை, வீடு என்று சேர்த்துக் கொண்டிருந்த காலம் அது.

சிவப்பாக அதை பூசு, இதை பூசு என்று கிரிம்களுடன் உள் ஊர் ஐஸ்வரியா ராய்கள் ஒரு பக்கம், மஞ்சலை பூசு, மிளகாயை பூசு என்று ஆயுர்வேத அழகிகள் இன்னும் ஒரு பக்கமுமாக ஒவ்வொன்றையும் கூறி கூறி செய்வித்து எதுவுமே பலன் இன்றிப் போய் கடைசியாக " ஒண்டுக்குமே ரிஸால்ட் காட்டுது இல்லையே என்ற கதைகள் காதில் கேட்டு " வெறியில் அழுது புலம்பிய காலம் அது...

யும்னா, 
என் தோழி, பாடசாலை காலம் முதல் நிறம் குறைந்ததால்,  ஒதுக்கப்பட்ட எம்  #கருப்பிகள் கூட்டணியில் மிகவும் நிறம் கூடியவள், அழகனவள் அவள் தான், 

சேர்த்து வைத்த சீதனத்தைக் கொடுத்து, எப்படியோ அவளுக்கு ஒரு கல்யாணத்தை செய்து கொடுத்து ஆறு மாதம் ஆகவில்லை, 
அவளது சொத்து, நகை அனைத்தையும் சுட்டுக் கொண்டு அவள் கருப்பு இவளுடன் வாழ முடியாது என்று அவளை தினமும் உள ரீதியாக கொடுமை படுத்தி படுத்தியே விவாகரத்து செய்து 
விட்டான் ஒருத்தன்.

இந்த சம்பவம்
பணம், நகை, சொத்து என அனைத்தையும் கொடுத்து விட்டால் ஒரு #கருப்பியால் கூட கல்யாணம் செய்து கொள்ளளாம், 
நாமும் குடும்பமாக மகிழ்ச்சியாக பிள்ளை குட்டிகளோடு வாழலாம் என்ற என் கற்பனை கோட்டையை தகர்த்து துவம்சம் செய்து போட்டு விட்டது. 

எதிர்கலமே கேள்விக் குறி,  நம்மலுக்கும் கணவன் கிடைப்பானா?கல்யாணம் நடக்குமா?  மணம் முடித்தாளும் வாழ்க்கை நிலைக்குமா? என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விக்கனைகள் என் மனதை தினமும் தைத்து வதைத்த காலம்..

28வயது,
ஓய்வு நேரத்தில் ஸ்டாப் ரூமில் (Staff Room)  இருக்கையில்,
தமக்கு சிவந்த மேனி, தனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது என்ற பெருமையில் பெண் ஆகப் பிறந்தும் என் உணர்வுகளை மதிக்காது,

அவர்கள் கை நிறத்தோடு என் கை நிறத்தை ஒப்பிட்டு  "நீங்க அவ்வளோ கருபில்ல, உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்" அப்படி இப்படி என ஆறுதல் செல்வதைப் போல் சுற்றி இருந்தவர்கள், சேர்ந்து தொழில் செய்தவர்கள் எல்லாம் கதைத்து கதைத்து,

என் இதயம் கருகிப் போய், அவர்கள் சொல்வதற்கு சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல்,கண்ணீரை கட்டுப்படுத்தி கவலையை உதட்டில் ஒரு மெல்லிய புண்ணகைக்குள் புதைத்துப் போடுவதற்கு பழக்கப்பட்டு போன காலம் அது,

அன்றும் அப்படித்தான்,
அடிக்கடி பொண்ணு பார்க்க வந்து போகும் மாப்பிள்ளை போல்  ஒருத்தர் வர இருப்பதால், வீடு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது,

இந்த மாப்பிள்ளையேனும் "சரி " சொல்லிவிட வேண்டும் என்று வீடு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேலை,

பொண்ணு இலச்சனமாக இருக்க வேண்டும் என்று கண்டதையும் முகத்தில் அப்பி சாம்பல் நிறத்திற்கு என்னை மாற்றி, 
சிம்ரான் (அந்தக் காலத்து ஹீரோயினி) அந்தப் படத்துல போட்ட சல்வாராம் என்று எனக்கு சிறிதும் பொருந்தாத ஒரு நிறத்தில் சல்வாரையும் போட்டு சோடித்து வைத்திருந்தனர்.

புதிதாய் என்ன நடக்க போகிறது,
"வீட்டுக்கு போய் பதில் சொல்கிறோம்" என்ற வழமையான பதில் தான் வரும். என்று எந்த எதிர்பார்பும் இல்லாமல் நான் இருக்க, மாப்பிள்ளையும் வந்து சேர்ந்தார்.

என்னைப் பார்த்து விட்டு 
"எனக்கு சம்மதம், உங்களுக்கு சம்மதமா?" 
என்று கேட்ட கேள்வி என் காதுகளை நம்ப முடியவில்லை. 

கருப்பிக்கு கல்யாணம் சரி வந்தாம்,
"மாப்புள்ளக்கி என்ன சரி நோயோ? என்ன சரி குறையோ, வேற கல்யாணம் கில்யானம் செய்திருப்பாரோ" என்று
அல்லசல் வீடு முதல் உறவுகளின் வீடுகள் வரை  இரகசிய உளவுத் துறை ஆராய்ச்சிகள் பேச்சோடு பேச்சாக கலந்து எம் கதைகளையும் வந்து சேர்ந்து கொண்டிருக்க..

( இவர்கள் இப்படித்தான் கல்யாணம் நடக்காது போனாலும் கதைப்பர், நடந்தாலும் கதைப்பர் 😀)

எந்தக் கவலையும் இல்லாமல், எதுவும் பேச கதைக்க  கூட நேரம் இல்லாமல் அந்த 29 வயது ஆசிரிய மாப்பிள்ளையோடு சரியாக பத்தாவது நாள் எனக்கு  கல்யாணம் முடிந்து,

அந்த இரவும் வந்தது.
மனதில் புதைத்து வைத்திருந்த கேள்வியை அவரிடமே கேட்டு விட்டேன்,

" ஏன் எனக்கு சம்மதம் தெரிவித்தீர்கள், என்னைவிட அழகி ஒருத்தியை..... "

நான் பேசி  முடிக்க முன் அவர் சொன்னது,

" ஒன்ன விட அழகா எனக்கு வேறு யாரும் தெரியவில்லை " 

அந்தக் கணம்,
வாழ்க்கையில் நானும் ஒரு அழகி என்று முதல் தடவையாக என் காதுகள் பொய்கள் இன்றி கேட்ட அந்தக் கனம்,
என் கண்களில் இருந்து வந்தது ஆனந்தக் கண்ணீரா, கவலைக்  கண்ணீரா நான் அறியேன்!
அன்று வந்த அந்தக் கண்ணீரின் பின் இந்த நிமிடம் வரை என் கண்கள் கண்ணீரை கண்டதில்லை.
.

என்னைப் போன்ற #கருப்பிகளே!
என் சகோதரிகளே நான் கூறும் இதனை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

₹ ஒரு ஆணாக என் கணவன் எனக்கு கூறிய அறிவுரைகள் இது தான்.

₹ ஒரு ஆண் என்ன தான் பெண்ணுக்கு  நல்ல மனம் வேண்டும் குணம் வேண்டும் அது தான் அவளது அழகு என்று கதை அளந்தாலும்,

₹ அவர்கள் அந்தப் பெண்ணிடம் உடல் அழகை, நிறத்தின் அழகையும் எதிர்பார்கிறான் என்பது தான் உண்மை. இதை எவராலும் மறுக்க முடியாது. 

₹ சிவப்பு நிறம் தான் அழகு, வெள்ளை நிறம் தான் அழகு என்று 
அழகுக்கு எம் நாட்டில் கொடுக்கப்பட்ட வரைவிளக்கனமும், அதன் பின்னால் நீங்கள் ஓடுவதும் தான் தவறானதே தவிற ஆண்கள் தேடும் அந்த அழகில் எந்த தவறும் கிடையாது.
ஏன் என்றால்..

₹ ஒரு ஆணுக்கு சிவப்பு பிடிக்கும், இன்னும் ஒருவனுக்கு பொது. நிறம் பிடிக்கும், இன்னும் ஒருவனுக்கோ கருப்பு நிறம் தான் பிடிக்கும். என்ற உண்மையை விளங்கிக் கொள்.

₹ ஒருத்தனுக்கு ஒள்ளியாக பிடிக்கும், இன்னும் ஒருவனுக்கு நடுத்தரமான பெண்ணைப் பிடிக்கும், இன்னும் ஒருவனுக்கு கொழுத்து இருந்தால் தான் அவள் பெண்ணாகவே அவன் கண்களுக்கு தெரிவாள்.😊

₹ஆக ஒரு பெண்ணின் அழகை நிறத்தில் மாத்திரம் அல்ல, தலை முடி முதல் உள்ளங்கால் வரையில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு விதமாக பிடிக்கும் என்பதை புரிந்து கொள்.

₹ அவள் வெள்ளை, இவள் சிவப்பு என்று நீங்களும் அவளைப் போல் மாற நினைத்து கண்ட கண்ட கிரீம்களை அப்பியும், ட்ரீட் மெண்ட்களை செய்தும் ஏமாந்து போகாமல், மன உளைச்சல் படாமல்,

₹உங்களுக்கு என்று ஒரு அழகு இருக்கும், உங்களுக்கு என்று ஒரு ஸ்பெஷல் உங்களோடு சேர்ந்தே வந்திருக்கும், வெள்ளைத் தோலுக்கு கொடுத்த முக்கியத்துவம் எம் உடலின் ஏனைய அழகுகலை மழுங்கடித்து இருக்கும். அது எது என்பதை தேடி கண்டு பிடியுங்கள்.

₹ உங்களுக்கு என்று ஒரு கூந்தல் இருக்கும், உங்கள் முகத்திற்கு பொருந்தக் கூடிய கூந்தல் முறை (Hair style)  இருக்கும் அது எது என்பதை தேடி அதை மெருகு படுத்துங்கள்.

₹ தமன்னா உடுத்த உடை திரிஷா போட்ட ஷல்வார் என்று தேடி தேடி கண்டதையும்  போடாமல், கிளியோபாட்ரா ரேஞ்ச் இற்கு கடைக்காரன் கதை அளந்து தலையில் கட்டிவிடும் உடைகளை வாங்கி வந்து ஏமாந்து போகாமல்,

₹ அதிக விலை கொடுத்து வாங்கினால் தான் அழகான உடையாக இருக்கும், அப்போது தான் மதிப்பார்கள் என்று பணத்தை செலவு செய்து, அசிங்கப்படாமல்,

₹  குறைந்த விலையில் இருந்தாலும் உங்கள் உடலுக்கும், நிறத்திற்கும் பொருத்தமான  விதத்தில், பொருத்தமான நிறத்தில்,  இருக்கும் ஆடைகளை தேடி அணிந்து பாருங்கள், கண்ட  கண்ட கிரீம் மூலம் ஜொலிக்காத உன் அழகு இப்பொழுது கண்ணாடி முன் ஜொலிக்கும்.

₹ இப்படி சிம்பிள் ஆக, மிகச் சிறிய விடயங்களை செய்து பாருங்கள், நீங்கள் தான் " #சிம்பிள்_எண்ட்_பியூட்டி"  ஆக ஜொலிப்பீர்கள்.

₹ உள்ளூர் வெள்ளைக்காரிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், உங்களை கிண்டல் பண்ணலாம், அட்வைஸ் என்று வரலாம், குத்திக் கூட காட்டலாம், who cares அதை கணக்கில் எடுகவும் வேண்டாம், காதில் போடவும் வேண்டாம், 
#உன்_கணவன்_கண்களுக்கு_கண்_நிறைந்த_அழகியாக_நீ_இரு அது போதும்.

₹கணவன் முன்னால் ஒரு மனைவி அழகாக இருப்பது கூட  உங்கள் அழகினை கணவன் அனுமதியுடன்,  மெருகேற்றிடுங்கள். அதில் எந்த பிழையும் கிடையாது.

₹ இன்னும் நம்பிக்கை வரவில்லையா? அப்படி என்றால் வெள்ளை நிறத்திற்கு போட்டியாக வரும் கருப்பு அழகிகளின் அழகினை
ஹாலிவூட் படங்கள், பாடல்களில் (பார்க்க முடியாத அளவு மோசமாக இருக்கும் உதாரணத்திற்கு மாத்திரமே கூறுகிறோம்) 
ஒரு தடவை பார்த்தால் புரியும், கருப்பும் அழகு தான் என்று.

உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள், அடுத்தவரோடு உங்களை ஒப்பிடாமல், உங்களுக்காக உங்களிடம் இருக்கும் சிறப்புகளை மெருகேற்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
சீதனம் கொடுக்காமல்,
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி, 
அழகிய கணவனுடன் சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்.
என் கணவனின்
#கருப்பு_அழகி.


Post a Comment

0 Comments