HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

உணவுக்குழாய்ப் புற்றுநோய்... சில உண்மைகள்..! அறிகுறிகள்... தீர்வுகள்...

♥உணவுக்குழாய்ப் புற்றுநோய்... சில உண்மைகள்..! அறிகுறிகள்... தீர்வுகள்...

♥மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது உணவுக்குழாய்ப் புற்றுநோய். இது மரணத்தை உண்டாக்கக்கூடிய புற்றுநோய் வரிசையில் முன்னிலையில் இருந்துவருகிறது.

♥#உப்பால்_வரலாம் 
உணவுக் குழாய் அழற்சிக்கு (ரிஃப்ளக்ஸ்) அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினை, உணவுக்குழாய்ப் புற்றுநோய். ‘ரிஃப்ளக்ஸ்’ பிரச்சினையில் வரக்கூடிய பாதிப் பிரச்சினைகள் இதிலும் உள்ளன. இது வம்சாவளியாக வரக்கூடிய பிரச்சினை அல்ல. மிகவும் குறைந்த அளவில்தான் வம்சாவளியாக உணவுக்குழாய்ப் புற்றுநோய் வருகிறது. 

♥#இந்தப்புற்று_ஏன்_ஏற்படுகிறது?
“மனிதனின் பழக்கவழக்க மாற்றங்களால்தாம் இந்தப் புற்றுநோய் அதிகம் வருகிறது. இரைப்பையிலும் உணவுக்குழாயிலும் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணமே, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதுதான்.

♥இது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதுமட்டுமல்ல; பழங்களே சாப்பிடாதவர்களுக்கும் உப்பு உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
ஊறுகாய், 
கருவாடு, 
 போன்ற உணவுப் பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

♥புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் பாக்கு வெற்றிலை பழக்கமும் உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளின் ஒன்று” என்கிறார்  குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன்.
 
♥இந்த உணவுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும்கூட உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் பல மடங்கு அதிகம். இதுவும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

#அலட்சியம்
♥உணவை விழுங்குவதில் சிரமமா?
‘ரிஃப்ளக்ஸ்’ இருப்பவர்களுக்கு எப்படி நெஞ்செரிச்சல் இருக்கிறதோ அதுபோலவே உணவுக்குழாய்ப் புற்றுநோய் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை உணர்த்துவது விழுங்குதலில் உள்ள பிரச்சினைதான். புற்று வளர்வதால் உணவுக்குழாய் சுருங்கிவிடுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குக் கடின உணவான சப்பாத்தியோ பரோட்டாவையோ பிட்டையோ சாப்பிடும்போது அது இரைப்பைக்குச் செல்லாது. தண்ணீர் குடித்தால்தான் உள்ளே செல்லும். இல்லையென்றால் அப்படியே உணவுக் குழாயிலேயே தங்கியிருக்கும். 

♥#இதுபோன்ற_ஒருநிலை_ஏற்படும்போது #என்ன_செய்யவேண்டும்?
“உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். எண்டாஸ்கோப்பி மூலம் நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், என்னுடைய அனுபவத்தில் சப்பாத்தி, பரோட்டாவைச் சாப்பிடக் கஷ்டமாக இருந்தால், எளிய உணவான இட்லி, தோசைக்கு மாறிவிடுபவர்கள் ஏராளம். இட்லி, தோசையும் சாப்பிட முடியாமல் போனால், கஞ்சிக்கு மாறிவிடுவார்கள். கஞ்சியும் குடிக்க முடியாமல் போனால், நீராகாரத்துக்கு மாறிவிடுவார்கள். மருத்துவரையே பார்க்காமல் தவிர்த்துவிடுவார்கள். இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும்போது இடைப்பட்ட காலத்தில் புற்று நன்றாக வளர்ந்துவிடும்.

♥அதனால்தான் நம் ஊரில் ஆரம்ப காலத்திலேயே உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. உணவு விழுங்கக் கஷ்டப்படத் தொடங்கிய பிறகு நான்கு மாதங்கள் கழித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே அதிகம். இதையும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். இது இரைப்பை, உணவுக் குழாய் இரண்டுக்குமே பொருந்தக்கூடியது தான்” என்கிறார் சந்திரமோகன்.

♥#அறிகுறிகள் உஷார்
அலட்சியத்தால் மருத்துவரைச் சந்திக்காமல் தள்ளிப்போடுவதால் புற்று இதர உறுப்புகளுக்கும் பரவிவிடும். புற்றை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதால், சிகிச்சை முறையும் சிக்கலாகிவிடுகிறது. எப்போதும் மருத்துவத்தில் புற்றுநோய் வந்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் ஆராய்வது வழக்கம். 

♥ஆனால், பரவிய நிலையில் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும்போது அதற்கான வாய்ப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்தால், எளிய சிகிச்சையின் மூலம் உணவுக்குழாய்ப் புற்றுநோயைக் குணப்படுத்த வழி இருக்கிறது. 
உணவுக்குழாய்ப் புற்றுநோய்க்கு விழுங்குவதில் ஏற்படும் தொந்தரவு மட்டுமே அறிகுறி அல்ல. 

♥புளித்த ஏப்பம், 
பசிக்குறைவு, 
நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், 
உடல் எடை குறைதல் 
போன்ற அறிகுறிகளும் இருக்கும். இந்த அறிகுறிகள் உணவுக்குழாய், இரைப்பைப் புண்ணிலும் காணப்படும் பொதுவான அறிகுறிகள்தாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகும்போதுதான் உணவுக்குழாயில் புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு பிரச்சினை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

♥பொரித்த உணவு வகைகள், உப்பு அதிகம் கலந்த உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகள், மது, புகை ஆகியவற்றைக் கைவிட்டால், உணவுக்குழாயில் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

♥நாற்பத்தைந்து வயதுக்கு மேல் உணவை விழுங்குவதில் கஷ்டம், நெஞ்சில் அடைப்பு, ஏப்பம், பசியின்மை, அஜீரணம், எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உணவுக் குழாயில் புற்றுநோய் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

♥இந்த புற்றுநோய் யாருக்கு அதிகம் வருகிறது என்றால், கருகலாக பொறித்த, வறுத்தெடுத்த உணவை உண்பவர்களின் உணவுக்குழாயில் இந்தக் கருகல் ஹைட்ரோ கார்பன் ரசாயனமாக மாறி படிந்து விடுகிறது. இந்த படிவு தசைகளின் செல்களில் மறுவிளைவை உண்டாக்கும்போது, செல்கள் பன்மடங்காக தேவையின்றி பெருகி, புற்றுநோயை உண்டாக்குகிறது.

♥ஊட்டச் சத்துக்களான தாதுப் பொருட்கள் பற்றாக்குறை, உயிர்ச்சத்து குறைவு, பல் மற்றும் வாய் சுத்தமின்மை, டீ முதலிய பானங்களை மிகச் சூடாக அருந்துதல் ஆகியவை உணவுக் குழாய் புற்று நோய் உண்டாக காரணங்களாக அமைகின்றன.

♥வழிவழியாக வரும் பரம்பரை வியாதியான 'டைலோசிஸ் உள்ளவர்களுக்கும் இப்புற்றுநோய் உண்டாகலாம்.

♥எண்டோஸ்கோப்பி மூலம் இந்த நோயின் பிரச்னையை கண்டுபிடித்து, உணவு விழுங்குவதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பதும், அறுவை சிகிச்சை மூலமாக விழுங்கிய பொருள் உள்ளே செல்ல, குழாய் மூலம் உணவுக்குழாயையே செயற்கையாக உருவாக்கிக் கொடுப்பதும், ஆரம்பநிலையில் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பதும் நவீன சிகிச்சையால் சாத்தியம்.

♥வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்ட செரிமானம் நடந்து  கூழ்போல் ஆனதும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பதுதான் உணவுக் குழாயின் முக்கிய வேலை. இதில் சிறிதும் பெரிதுமாக பல உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்றாலும், நெஞ்செரிச்சல், உணவுக் குழாய் புற்றுநோய் என்ற இரண்டு நோய்கள்தான் அதிகம் சிரமப்படுத்தும்

♥உணவுக் குழாயின் அடிப்பகுதியில் பிறவிச் சுருக்கம், இரைப்பை ஏற்றம், ரத்தசோகை, ‘டைலோசிஸ்’(Tylosis), ‘அக்கலேசியா கார்டியா’ (Achalasia cardia) போன்ற பரம்பரை நோய்களும், மரபணுக் கோளாறுகளும் இந்தப் புற்றுநோய்க்குக் காரணமாகலாம்.

♥இவற்றில் உடல் எடை குறைவது தவிர மற்ற அறிகுறிகள் எல்லாமே சாதாரணமாக இரைப்பைப் புண்ணிலும் காணப்படும். ஆகையால், இந்த நோயாளிகள் இரைப்பைப்  புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் அறிகுறிகள் தற்காலிகமாக மறையும்.

♥என்றாலும், புற்றுநோய் மறையாது. பிறகு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்போதுதான் இந்த நோய் உள்ள விவரம் தெரியவரும்.

♥#மற்ற_அறிகுறிகள்: 
எதைச் சாப்பிட்டாலும் தொண்டையில் ஏதையும் அடைப்பது போல் இருக்கும். 

♥போகப்போக உணவு, தண்ணீர் எதையும் விழுங்க முடியாது. 

♥வாந்தி வரும். வாந்தியில் ரத்தம் வரலாம். 

♥உணவை விழுங்கும்போது - உணவுக் குழாயில் புற்று உள்ள இடத்தை  உணவு கடக்கும்போது - நெஞ்சில் வலி ஏற்படும். 

♥பொதுவாக இந்த நோய் உள்ளவர்களுக்கு நடு  நெஞ்சில் வலி நிரந்தரமாக இருக்கும்.

♥#எங்கெல்லாம்_பரவும்?
இது நேரடியாகவோ, ரத்தம் வழியாகவோ அல்லது நிணநீர் மூலமோ உடலில் பிற இடங்களுக்குப் பரவக்கூடிய தன்மை உடையது. 

♥பொதுவாக உணவுக் குழாய்க்கு அருகில் உள்ள நுரையீரலுக்கும் மூச்சுக் குழலுக்கும் நேரடியாகவே பரவிவிடும். 

♥ரத்தத்தின் மூலம் கல்லீரல், நுரையீரல், எலும்புகள் ஆகியவற்றுக்குப் பரவும். 

♥நிணநீர் மூலம் கழுத்து, மூச்சுக்குழல், வயிறு ஆகிய பகுதிகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு நோய் பரவும்.

♥#என்ன_பரிசோதனை?
பேரியம் மாவைக் குடிக்கச் செய்து எக்ஸ்-ரே எடுப்பது பழைய முறை. இப்போது ‘ஈஸோபேஜியல் கேஸ்ட்ரோ டியோடினோஸ்கோப்பி’ (oesophago-gastro - duodenoscopy) மூலம் உணவுக் குழாயில் உள்ள புற்றுநோயை மருத்துவரே நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். 

♥மேலும், இந்தப் பரிசோதனை செய்யப்படும் போதே புற்றுள்ள பகுதியிலிருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துத் ‘திசு ஆய்வு’ (Biopsy) செய்து, நோயை உறுதி செய்வது இந்த நோய்க்
கணிப்பில் உள்ள நடைமுறை.

♥#என்னென்ன_சிகிச்சைகள்?
உணவுக் குழாய்  புற்றுநோய்க்கு அதன் தன்மை, வகை, பரவியுள்ள நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து 
அறுவை சிகிச்சை, 
கதிர்வீச்சு சிகிச்சை, 
மருத்துவ சிகிச்சை 
என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

♥#ஆரம்பநிலையில் உள்ள உணவுக் குழாய் புற்றுநோயை குணப்படுத்துவது எளிது.

♥1.#அறுவை_சிகிச்சை:  
உணவுக் குழாயில் புற்று பாதித்துள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, பெருங்குடல் பகுதியிலிருந்து சிறு பகுதியை எடுத்து உணவுக் குழலுக்கு மாற்றாகப் பொருத்திவிடுவது ஒரு வழி. இந்த சிகிச்சையை நோயின் ஆரம்பநிலையில் மட்டுமே செய்ய இயலும்.

♥புற்று முற்றிய நிலையில் இதை மேற்கொள்ள இயலாது. அப்போது ஒரு மாற்று வழி செய்யப்படும். அதாவது, நோயாளி உணவு உட்கொள்ள மட்டும் வழி செய்வதற்காக, வாய் வழியாக ஒரு செயற்கைக் குழாயை உணவுக் குழலுக்குள் செலுத்தி, அதைப் புற்று உள்ள பகுதியைக் கடக்கச் செய்து, இரைப்பைக்குள் பொருத்திவிடுவார்கள். இதன் மூலம் நோயாளி உணவைச் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு தற்காலிக ஏற்பாடுதானே தவிர நிரந்தரத் தீர்வல்ல.

♥2.#கதிர்வீச்சு_சிகிச்சை 
(Radiotherapy): இந்த நோய் வந்துள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சைதான் தரப்படுகிறது. ‘லீனியர் ஆக்ஸிலேட்டர்’ அல்லது கோபால்ட் கருவிகள் மூலம் எக்ஸ் கதிர்களை உணவுக் குழலுக்குச் செலுத்தும் போது புற்றுநோய்த் திசுக்கள் சுருங்கி நோய் குணமாகிறது.

♥3. #மருத்துவ_சிகிச்சை : ரத்தம் மூலமும் நிணநீர் மூலமும் உடலில் மற்ற இடங்களில் பரவியுள்ள புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை தரப்படும். 

Post a Comment

0 Comments