♥பெண்களின் கன்னித்தன்மை குறித்த
புரளிகளும் உண்மையும்
( விழிப்புணர்வு பதிவே .யாரையும் காயப்படுத்த இல்லை)
#கன்னித்தன்மை
♥ஒரு பெண் உடலுறவை அனுபவித்தது இல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பில் உள்ள கன்னித் திரை கிழியாமல் இருக்கும், இப்படி கன்னித் திரை கிழியாமல் இருந்தால் தான் அவள் கன்னி. இதுதான் கன்னித் தன்மைக்கு இந்த காலத்தில் உதாரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், பழங்காலங்களில் எந்த ஓர் ஆணையும் திருமணம் மற்றும் வேறு வகையிலும் சாராமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.
♥ஆங்கிலத்தில் கன்னி என்பதற்கு ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வர்கோ என்ற வார்த்தையிலிருந்து வர்ஜின் வந்தது. யாரோடும் சேர்ந்திருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் சக்தி வாய்ந்த பெண் என்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தம்.
♥ஆனால் பெண்ணிடம் கன்னித்தன்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய பல்வேறு சோதனைகள் செய்யபடுகின்றன. என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் பெண் கன்னி தன்மையோடு தான் இருக்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றபடுகின்றன, அவை என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்,
#ஹைமென்_திசு
♥பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ளே ஹைமென் என்கிற திசு உள்ளது. ஹைமென் திசு மிக மெல்லிய திசு. இது கிழிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது விளையாடினாலோ, சைக்கிள் ஒட்டினாலோ, அதிக வீட்டு வேலையின் காரணமாகவோ இந்த திசு எளிதில் கிழிந்து விடும். இந்த திசு கிழிந்தாலே பெண் கன்னி தன்மை அற்றவள் என்ற மனப்போக்கு பலரிடம் உள்ளது.
♥ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு பெண் கன்னி தன்மை இழந்து விட்டார் என்பதை இதை வைத்து கண்டு பிடிக்க இயலாது.
#சுயஇன்பம்
♥சுய இன்பம் காண்பதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. பெண்கள் சுய இன்பம் செய்வதால் பல நன்மைகள் உண்டாகிறது என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி இருக்க பெண்கள் சுய இன்பம் கண்டால் அவர்களின் கன்னி தன்மை போய் விடும் என நம்புகின்றனர். ஆனால் இதுவும் மூடநம்பிக்கையே.
#பெண்ணின்_பிறப்புறுப்பு
♥பெண்ணின் பிறப்புறுப்பு மிருதுவாக இருந்தாலோ அல்லது அளவில் பெரிதாக இருந்தாலோ அந்த பெண் கன்னித்தன்மை அற்றவள் என பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், பெண்கள் ஆண்டுகணக்கில் உடலுறவில் ஈடுபட்டால் கூட அவர்களின் பிறப்புறுப்பு எளிதில் பெரிதாகாது. பிறப்புறுப்பு சுருங்கி விரியும் தன்மை உடையது ஒரு சிலருக்கு பிறப்பிலே பெரிதாக இருக்கும். இதனால் அந்த பெண் கன்னி தன்மை அற்றவள் என கருத கூடாது.
#வலி_இரத்தம்
♥திருமணம் முடிந்து ஆண்-பெண் உறவு கொள்ளும் போது பெண்ணுக்கு இரத்தமும், வலியும் இருந்தால்தான் தான் அப்பெண் கன்னி தன்மையுடன் இருக்கிறார் என பலர் நம்புகிறார்கள். ஆனால், இதுவும் பொய்யே. பெண்களின் உடல் நிலையை பொருத்து இது வேறுபடும். அன்றைய காலத்தில் பெண்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்ததால் இது சாத்தியமானது.
#இறுக்கம்
♥இன்று கண்டதையும் படித்து தவறாக சில முடிவுகளை இளைஞர்கள் தமக்குள் வைத்துள்ளார்கள்... அதில் முதல் தடவை உறவு கொள்ளும்போது பெண் உறுப்பு மிக இறுக்கமாக இருக்கும் என்பது.... இதுவும் தவறே... பெண் உறுப்பை ஒரு பெண் தன் உணர்வுகளால் இறுக்கி விலக்க முடியும்... மற்றபடி இறுக்கம் தொய்வு என்று ஏதும் இல்லை...
♥ஒரு சில பெண்களுக்கு முதல் முறை வலியும் இரத்தமும் ஏற்படலாம். ஆனால் பல பெண்களுக்கு வலியும், ரத்தமும் உண்டாகாது. அதனால் உறவில் ஈடுபடும்போது ஏற்படும் வலியை வைத்து கன்னி தன்மை இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது.
#கற்பு
♥மொத்தத்தில் ஆண் பெண் கற்பு என்பது நமக்கு நாமே உருவாக்கி கொண்ட ஒன்று தான். எதுவாக இருந்தாலும் உங்கள் துணை உங்களிடம் உண்மையாக இருக்கிறார்களா? என்பதை பொருத்தே கன்னி தன்மையை உங்களால் அறிய இயலும்.
#ஆண்களுக்கு_கன்னி_தன்மை #உள்ளதா?
♥கற்பு, கன்னி தன்மை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மட்டும் தானா..? என்ற கேள்விக்கு இல்லை என்றே கூறலாம். பெண்களை போல ஆண்களுக்கும் கன்னி தன்மை உள்ளது.
♥ஆனால், பெண்களுக்கு சற்று எளிய பரிசோதனைகளின் மூலம் கன்னி தன்மை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம். ஆனால், ஆண்களின் கன்னித்தன்மையை கண்டறிவது கடினமான விஷயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
♥மருத்துவ ரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான்( பத்தில் நான்கு) முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித் திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அல்லது முன்பே சொன்னது போல விளையாடினாலோ, வேலை செய்தாலோ இந்த கன்னித்திரை கிழிய வாய்ப்பு உண்டு.
♥உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவை உறவின்போது இது கிழியவும் கிழியாது, இரத்தக் கசிவும் ஏற்படாது, வலியும் இருக்காது. தடய அறிவியல் நிபுணர்கள் இதைக் மெய்ப்பித்துள்ளனர். இனியும் கன்னி தன்மை குறித்து பெண்களை சந்தேகப்படதீர்கள்
♥உங்கள் துணையை நீங்கள் நம்புவதுதான் உன்மையான கற்பு. கற்பு என்பது உடலில் இல்லை. மனதில் தான் உள்ளது.
0 Comments
Thank you