♥நீண்ட கூந்தல் இருக்கும் பெண்களை சுற்றிவரும் கண்கள்..
நீண்ட கூந்தல்.. நல்லதா?? கெட்டதா ??
♥பொதுவாக ஆண்களுக்கு கூந்தல் நீளமாக உள்ள பெண்களை தான் பிடிக்குமாம். ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.
♥#புராணம்
புராணம் முதலே பெண்கள் என்றால் அவர்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும் அது அவர்களுடைய அழகின் மணிமகுடம் என்பது போல உவமை கூறி சென்றுவிட்டனர். இதிலிருந்து வெளியே வர தமிழ் ஆண்களின் மனம் கொஞ்சம் தடுமாற தான் செய்யும். உண்மையில் நீண்ட கூந்தல் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை தான் காட்டுகிறது....
♥#மணம்
பெண்களின் கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது இந்திரன் காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை நீடித்துக் கொண்டே தான் போகிறது. ஆனால், அவரவருக்கு பிடித்த பெண்களின் கூந்தல் மணம் ஆண்களின் நாசியிலே குடியிருக்கும் என்பது காதல் மன்னர்களுக்கு மட்டுமே தெரியும். இயற்கை மணமா செயற்கை மணமா என இன்றுவரை யாராலும் விடை கூறமுடியவில்லை.....
♥#அலங்கார_மாளிகை
பெண்களின் கூந்தல் அழகு மட்டுமல்ல, அலங்கார மாளிகையும் கூட. நீளமான கூந்தல் இருக்கும் பெண்களுக்கு தான் பூக்களை வைத்து நிறைய சிகை அலங்காரம் செய்ய முடியும். இன்று நீளமான கூந்தலை கடையில் வாங்கி தலையில் செருகி திருமணம் செய்யும் பெண்களின் பரிதாபம் தான் பொறாமையின் வடிவம்....
♥#அலங்கார_மாளிகை
இப்போதெல்லாம், திருமணத்தின் போது மட்டும் சவுரி முடியில் பிளாஸ்டிக் பூக்களை சூடிக் கொண்டு சில மணிநேரத்தில் கட்டி எழுப்பி அந்த அலங்கார மாளிகையை இடித்து நொறுக்கி விடுகிறார்கள்.
♥#பொறாமை
தங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீளமான கூந்தல் இருந்தால் அழகு என்பதையும் பெருமையாகவும் நினைக்கும் ஆண்கள் தான் 90%. ஆனால் அதையும் தாண்டி, மாமியார் மற்றும் கணவனின் கட்டைமுடி சகோதரிகள் என பத்து பேர் வயறு எரியும் என்பதும் ஓர் செய்தி. பொதுவாக ஓர் பெண்ணுக்கு நீளமாக கூந்தல் இருந்தால், அது மற்ற பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று பொறாமைப்படுவார்கள்... இதற்காகவே பெண்களுக்கு நீளமான கூந்தல் இருந்தால் கணவணிற்கு கேடு என ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டு.... கணவனின் மனதையும் கலங்க வைக்கும் மாமியார்கள் தான் இன்று உள்னனர்....
♥#ஆரோக்கியம்
உடலும் உள்ளமும் சிறந்த ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே கூந்தல் நீளமாக வளரும் என்பதுதான் உண்மை... இதற்காக தான் அறன்றைய புராணங்கள் ஒரு சிறந்த பெண்ணை பற்றி கூறுகையில் அவளின் கூந்தலை நீளமாக விபரித்து அவள் சிறந்த ஆரோக்கியமான பெண் எனவும் கூறினர்...
♥#இன்று
ஆனால் இன்று பலருக்கு கடையில் விற்பனையாகும் வாடகை முடிதான் ஆரோக்கியம் அழகு என்று படுகிறது...
0 Comments
Thank you