வினோத் அன்று விரைவாக வீடு திரும்பி தனது மனைவிக்காக காத்திருந்தான் .விமான நிலையத்திற்கு வராத கணவன் மீது செல்லமான கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த அனிதா "என்ன அவசரம் சீக்கிரமா வான்னு சொன்னீங்க ?ஏர் போர்ட் கூட வரல?என்ன விஷயம் ?"என்றதும் வினோத் தன் கையில் இருந்த ரிப்போர்ட் அனைத்தையும் அவளிடத்தில் கொடுத்தான்.அனிதா வாங்கி படித்தாள்.
அவள் படிக்கும் வரை காத்திருந்த வினோத் "உன்கிட்ட கேக்க கூடாதுன்னு நினைச்சேன் .இதுவரையில் நாலு இடத்துல செக் பண்ணிட்டேன் ஒரே ரிசல்ட் தான் வருது .எனக்கு எதுவுமே புரியல.என் மனைவிய உயிருக்கு மேல விரும்புறேன் .ஆனா இந்த ரிசல்ட் தப்பா இருக்கு? இப்பவும் உன்னை நம்புறேன்.ப்ளீஸ் இதை பத்தி இப்ப எனக்கு நீ சொல்லியே ஆகணும் "என்றவன் கொஞ்சம் கண்கலங்கி தான் போயிருந்தான்.அதை கவனித்த அனிதா அவன் கண்களை துடைத்துவிட்டபடியே"இதுவும் ஒரு காதல் கதை தான்ங்க .முன்னாடியே சொல்லி இருக்கணும் .அப்போ பயம் இருந்தது இப்போ ப்ரியம் தடுக்குது அவ்ளோ தான்ங்க "என்றாள் .
அவளை நேரடியாக பார்த்த வினோத் "நீ மறச்சு வச்சது போதும்டா எனக்கு இப்போ உண்மைய தெரிஞ்சுக்கணும் அவ்ளோ தான்"என்றதும் அமைதியாய் இருந்த அனிதா "சரி சொல்றேன் .எங்க அப்பா நிறைய கனவுகளோட ,நிறைய கடன் வாங்கி மெடிக்கல் காலேஜ் அனுப்பினாரு.நானும் நல்லா தான் படிச்சுட்டு இருந்தேன் .என்னோட உலகத்துக்குள்ளயும் காதல் வந்தது முரளி மூலமா .அவன பாத்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத தூண்டுதல் .அலை மோதுற கண்ணு இரண்டும் அவன விட்டு நகர முடியாம நின்னு போச்சு .
சில சமயம் எனக்கே தோணும் நீ ஒரு பொண்ணுடி ஒரு பையன இப்படி வெக்கமே இல்லாம சுத்திட்டு இருக்கன்னு .இருந்தாலும் அவன பாத்துட்டே இருக்க தோணும் .அவன் மூணாவது வருஷம் .நான் முதல் வருஷம் .அதனால நேரடியாக சந்திக்கிறது கஷ்டம் .தேடிப்பிடித்து போய் பாக்க வேண்டி இருந்தது .அவன் கண்ணு காந்தம் மாதிரி இருக்கும் .முடிஞ்சவரை அவன்ட்ட இருந்து விலகியே இருந்தேன் .காதலோட படிப்பும் நல்லா தான் போயிட்டு இருந்தது .அவன் கூட எந்த பொண்ணு பேசுனாலும் அவ எனக்கு எதிரி போலத்தான் தெரிஞ்சா .உண்மைய சொல்லணும்னா இந்த சொல்லாத காதல் கூட சுகமா தான் இருந்தது .
அன்னைக்கு காதலர் தினம் .காலேஜ் திருவிழா மாதிரி இருந்தது .நான் மட்டும் தனியா கிரவுண்ட்ல படிச்சுட்டு இருந்தேன் .அப்போ என் பக்கத்துல யாரோ வந்து உக்காந்த மாதிரி இருந்தவுடன் நான் வேகமா திரும்புனேன்.அது முரளி. பயந்து போய் எழுந்து ஓடும் போது என் கைய புடுச்சு நிறுத்தி "எங்க ஓட பாக்குற .ஒரு பொண்ணு நம்மள பாக்குறா, லவ் பண்றான்னு கூடவா எனக்கு தெரியாதுன்னு நினைச்ச .நம்ம நிழல தவிர நம்ம பின்னாடி யார் வந்தாலும் மூளை காட்டி கொடுத்துரும்.உண்மைய சொன்ன உன்னை எனக்கு ரோம்ப புடிச்சிருக்கு .ஐ லவ் யூ .இனி தனியா சுத்த வேணாம் .ஜோடியா சுத்தலாம் சரியா?"என்றவன் கையில் இருந்த சிவப்பு இதயம் வரைந்த கார்டை என்னிடம் கொடுத்தவுடன் வாங்கிட்டு ஓடி போயிட்டேன் .மனசுல அப்படி ஒரு சந்தோசம் .அருவில குளிச்ச மாதிரி .வீட்டுக்குள்ள வந்த சாரல் மாதிரி .இது தான் காதல்ன்னு தோணுச்சு .இரண்டு பேருக்குள்ளும் காதல் அழகா வளந்துட்டு இருந்தது .முரளி எனக்கு தனி உலகமா தெரிஞ்சான்.அதுக்குள்ள வாழத்தான் நானும் விரும்புனேன்.அவனோட சின்ன சின்ன அசைவுகளையும் ரசிச்சேன்.அவன மட்டுமே என்னோட வாழ்க்கையா நினைச்சேன் .
முரளிக்கு அது கடைசி வருஷம் .அப்போ தான் அவனுக்கு ஒரு பிரச்சனை வந்தது .ஒரு நாள் டாக்டர பாக்க என்னையும் கூட்டிட்டு போனான் .அப்போ டாக்டர் எங்ககிட்ட"வாங்க முரளி .உங்க ரிப்போர்ட் பாத்தேன் .எனக்கே இது புது அனுபவம் முரளி .இந்த நோய் உங்க பரம்பரையிலே யாருக்காவது இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன் .இனி உங்களுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படும்னு சொல்றேன் .நீங்க இனி தூங்கி எழுந்ததும் கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே ஞாபகம் வராது .உங்க மூளை செயல்பட தொடங்க நேரம் ஆகும் .நேரம் போக போக சரியாகிடும்.ஆனால் இது நிலையில்லாதது .நாள் ஆக ஆக ஞாபகம் திரும்ப தாமதம் ஆகலாம்.மனிதனோட தூக்கம் இரண்டு வகை .ஒன்று முற்பகுதி ஆரம்பநிலை.இரண்டாவது கனவுகளுடன் இணைந்தஆழ்ந்த நிலை.இது சரியா நடக்கணும்.உங்களுக்கு முற்பகுதி தூக்கத்துல ஏதோ பிரச்சனை இருக்கு.அது இரண்டாம் நிலை தூக்கத்துல கனவுகளை அழிச்சிடுது.அதனால உங்க நினைவலைகள் பாதிக்கப்படுது.தொடர்ந்து டிரிட்மெண்ட் எடுத்துக்கணும் .மருந்துகளை சாப்பிடணும்.யோகா பண்ணுங்க .எல்லாம் மாற வாய்ப்பிருக்கு"என்றதும் இருவரும் கிளம்பினோம் .அவனோட பிரச்சனைக்கு நான் ஆறுதலா இருந்தேன் .டாக்டர் சொன்னபடி செஞ்சுட்டு இருந்தோம் .
அவனோட நோய் குணம்மாகல.அதிகம் ஆனது .அவனோட ஞாபகங்கள் திரும்ப அதிக தாமதம் ஆனது .எனக்கே தெரியாமல் அவன் ஒரு விஷயத்த செஞ்சுட்டான்.அவன் தூங்குறத கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சு கடைசியா தூக்கத்தையே நிறுத்திட்டான்.ஒரு வாரத்துல ரோம்ப சீரியஸ் ஆகிட்டான் .ஆஸ்பத்திரில இருந்தப்ப நான் போனதும் "அனிதா உன்னை நிரந்தரமாக மறந்திருவேன்னு பயந்து தூங்காம இருந்துட்டேன் .தினமும் மணிக்கணக்கா நினைவுகளுக்காக போராடுறது நரகமா இருக்கு.மரணம் இப்போ சுகமா தெரியுது .உன் கூட வாழணும்னு மட்டும் ஆசையா இருக்குடி .உன் மடியில் படுத்து கிடக்க ஆசையா இருக்கு."என்றவனை என் மடியில் படுக்க வச்சதும் மெதுவாக கண் மூடி தூங்குனான்.ஆனா அதுகப்புறம் அவன் எந்திரிக்கவேயில்லை.இறுதியாய் ஒரு நீண்ட தூக்கம் அதுவாகி போனது .
அவனோட இறப்பு என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்னுட்டு இருந்தது .படிப்ப முடிச்சு டாக்டர் ஆனேன் .அப்போ தான் அமெரிக்காவில் என்னோட படிச்ச கார்த்தி ஒரு விஷயத்த அவன் டீம் கூட சேர்ந்து ஒரு விஷயத்த கண்டுபுடிச்சான்.அது என்னான்னா ஒருவர் இறந்ததுக்கு பின்னாடியும் கூட அவுங்க டி.என்.ஏ மாதிரிகளை பயன்படுத்தி ஒரு பெண் கருவுற்ற சமயத்தில் அவளோட ஆரம்பகால உயிர் அணுவில் இறந்தவரின் டி.என்.ஏ. மாதிரிகளை கொண்டு அதன் தன்மையை கருவிலே மாத்தி அமைக்கிறது.இறந்தவரின் உருவம் மற்றும் குணத்தை குழந்தைகளாகவே திரும்ப பெற முடியும்னு கண்டுபுடிச்சாங்க.இதைப்பத்தி என்கிட்ட சொல்லும் போது தான் எனக்கு என் முரளி ஞாபகத்துக்கு வந்தான் .
எப்படியோ அவன் இருந்த ரூம்ல இருந்து மாதிரிகளை சேகரிச்சேன்.டி.என்.ஏ.வடிவத்தை கண்டுபுடுச்சோம்.அப்புறம் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.முதல் குழந்தை தர்ஷன் முழுக்க முழுக்க எங்க உயிரணுவில் பிறந்தான்.இரண்டாவது பையன் முரளி .உங்க உயிரணுவில் இறந்து போன முரளியோட டி.என்.ஏவில் பிறந்தான் .முரளி இறந்தது என்னால ஏத்துக்க முடியால.அவன் ஞாபகத்துல செத்துட்டு இருந்தேன் .என் வாழ்க்கையில நீங்களும் ,தர்ஷனும்,என் முரளியும் வர்ற வரைக்கும் .நானே இந்த விஷயத்த உங்ககிட்ட சொல்லி அனுமதி வாங்கி செஞ்சிருக்கணும் .அந்த நேரத்துல எனக்கு முரளிய கொண்டு வர்ற ஆர்வத்துல எதுவுமே தோணல .
கொஞ்ச நாளைக்கு பிறகு உங்க காதல உணர்ந்த பிறகு குற்றஉணர்ச்சில தினம் தினம் செத்துட்டு இருந்தேன் .நான் செஞ்சது பெரிய தப்பு தான் .நீங்க என்ன தண்டனை வேணா கொடுங்க .ஆனா என்னை பிரிஞ்சிராதீங்க.மறுபடியும் ஒரு பிரிவை என்னால தாங்க முடியாது."என்றபடி அவனை இறுக்கி கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள் .அவள் பிடியில் ஒரு பயம் இருந்தது அதை வினோத் உணர்ந்தான் .
மெதுவாக அவளது முகத்த நிமிர்த்தி பார்த்து "போடி லூசு .உன்னை எதுக்குடி பிரிய போறேன் .உன்னோட காதல நினைச்சு பெருமைப்படுறேன்.நான் ஏன் முரளியா பொறக்கலைன்னு பீல் பண்றேன் தெரியுமா ? "என்றவனை அனிதா இன்னும் பலமாய் கட்டிபிடித்தாள்.ஸ்கூல் முடிஞ்சு ஓடி வந்த தர்ஷனும் ,முரளியும் அம்மா,அப்பாவை சேர்த்து கட்டியணைத்து கொண்டனர் .
(இது முழுக்க முழுக்க கற்பனை தான்.(டி.என்.ஏ) மாற்றம் தற்போது சாத்தியம் இல்லை.)
(முற்றும் )
0 Comments
Thank you