♥கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைப்பது சரியா ? தவறா?
♥நம் சான்றோர்கள் நம் தினசரி பழக்க வழக்கங்களில் பல அறிவியல் ரீதியான நியதிகளை நமக்கு அன்றே வகுத்து கொடுத்துள்ளனர். காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் எதையும் நமக்கு சொல்லவில்லை. அவர்கள் ஏற்படுத்திய ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அறிவியல் ரீதியாகவும், தெய்வீக ரீதியாகவும் உண்மை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
♥இந்த உண்மை தெரியாமல் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என்று நம்மில் பலர் கூறிக் கொண்டு இருக்கின்றோம். அது முற்றிலும் தவறு.
♥திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் ஆண் பெண் என அனைவரும் நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கத்தை பின்பற்றுகிறோம். அதற்கான காரணம் நம் இரண்டு புருவங்களுக்கு மத்தியல் தான் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.
♥அதை தொட்டு தூண்டும் விதமாகவும், அங்கு உருவாகும் வெப்பதை கட்டுப்படுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைக்கிறோம். திருமணம் ஆன பெண்கள் தன் நெற்றி வகுடு பகுதியில் பொட்டு வைப்பார்கள். அவ்வாறு வைப்பதால் அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது.
♥நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலு பெறுகிறது. திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவும், கர்ப்பபை வலுப்பெறவும் நெற்றி வகுடில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
♥அதன் காரணமாகவே, வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. கர்ப்பப்பை வலுபெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.
♥கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது என்று சொல்வதற்கு காரணம் அவர்களுக்கு பாலியல் சுரப்பி தூண்டப்படாமல் இருப்பதற்காக தான். அனால் பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், “கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது” என்று மாற்றி விட்டனர். கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடில் பொட்டு வைக்கக் கூடாது என்று சொல்வதற்கு உண்மையான காரணம் இது தான்.
0 Comments
Thank you