♥தவறான பிரா அணிவதால் சந்திக்கும் தீவிரமான விளைவுகள்!
♥அணியும் பிரா சரியாக இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்-
அன்றாடம் பெண்கள் அணியும் பிரா சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பிரா பெண்களின் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தற்போது ஏராளமான ஃபேன்ஸி பிராக்கள் வந்துள்ளன. இந்த ஃபேன்ஸி பிராக்களை வாங்க அனைத்து பெண்களுக்குமே விருப்பம் இருக்கும். ஆனால் அணியும் பிராவை தேர்ந்தெடுத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பிராவானது மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக்கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அதனால் மேலே அணியும் உடை அசிங்கமாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
♥#மார்பகவலி
பொருத்தமான பிராவை அணியாவிட்டால் சந்திக்கும் விளைவுகளுள் ஒன்று மார்பக வலி. அதுவும் அணியும் பிரா மிகவும் சிறியதாக இருந்தால், மார்பக வலியை உணரக்கூடும். நீங்கள் சிறிய அளவிலான பிராவை வாங்கினால், அதனால் மார்பகங்கள் இறுக்கத்துடன் மற்றும் மிகவும் அழுத்ததுடன் இருந்து, மார்பக வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.
♥#முதுகுவலி
பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தவறான அளவிலான பிராவை அணிந்தால் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முதுகு வலி. ஏற்கனவே மார்பகங்கள் பெரிய அளவில் இருக்கும் போது, சிறிய அளவிலான பிராவை அணியும் போது, மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் அதிகளவிலான பாரம் இருப்பது போன்று உணரக்கூடும். இதனால் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். ஆகவே உங்களுக்கு பிரா மிகவும் இறுக்கமாக சிறியதாக இருப்பது போன்று உணர்ந்தால், உடனே பிராவை மாற்றுங்கள்.
♥#தோள்பட்டைவலி
சிறிய அளவிலான பிரா அணிவதால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தோள்பட்டை வலி. அதோடு ஒருவர் மிகவும் சிறிய அளவில் பிரா அணியும் போது, தோள்பட்டையில் வலிமிக்க சிவப்பு நிற குறி ஏற்படும், சில சமயங்களில் அவ்விடத்தில் லேசான வெடிப்புக்கள் கூட ஏற்படலாம். ஆகவே எப்போதும் சரியான பிராவை வாங்கி அணியுங்கள்.
♥#கழுத்துவலி
சில நேரங்களில் தவறான பிராவை தேர்ந்தெடுத்து அணியும் போது, தோள்பட்டை வலியுடன், கழுத்து வலியையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஒருவர் நீண்ட நாட்கள் தவறான பிராவை அணிந்தால், தொடர்ச்சியான கழுத்து வலியால் மிகுதியாக கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே உங்களுக்கு திடீரென்று புது பிராவை அணிந்த பின் கழுத்து வலி வந்தால், நிலைமை மோசமாவதற்குள் பிராவை மாற்றிவிடுங்கள்.
♥தொங்கும் மார்பகம் பிராவை அணிவதன் நோக்கம் மார்பகங்கள் நல்ல வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால் தவறான மற்றும் தளர்வான பிராவை அணிந்தால், அது மார்பகங்களுக்கு உறுதுணையாக இல்லாமல் இருக்கும். இந்நிலையில் சரியான அளவிலான பிராவைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அதோடு ஒருவர் தளர்வான பிராவை அணிந்தால், அதனால் மார்பகங்கள் தளர்ந்து தொங்க ஆரம்பித்து, அசிங்கமாக காட்சியளிக்கும்.
♥#நிணநீர்_முடிச்சு_அடைப்பு
மார்பகங்களில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் மிகவும் சிறிய அளவில், சென்டிவ்வாக மற்றும் எளிதில் சுருங்கி விரியும் அளவில் இருக்கும். இந்நிலையில் சிறிய அளவிலான பிராவை அணியும் போது, அதனால் மார்பகங்களில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் மற்றும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும். அதிலும் ஒரு பெண் சிறிய அளவு கப் கொண்ட பிராவை அணியும் போது, நிணநீர் முடிச்சுக்கள் பெரிதாக பாதிக்கப்படும். எனவே சரியான கப் கொண்ட பிராவைப் பார்த்து வாங்குங்கள். நிலையை மோசமாக்கும் தவறான அளவிலான பிரா ஒருவரது நிலையை மோசமாக்கும். அதாவது இம்மாதிரியான பிரா தொடர்ச்சியாக கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலியைக் கொடுக்கும். மேலும் இம்மாதிரியான வலிகளால் நாம் சற்று குனிந்து உட்கார நேரிடும். இதனால் கூன் விழுந்தது போன்று காட்சியளிக்கும். ஆகவே எப்போதுமே பொருத்தமான பிராவை வாங்கி அணியுங்கள்.
♥#தோல்_சிராய்ப்புகள்
ஒரு பெண்கள் சிறிய அளவிலான பிராவை அணியும் போது, மார்பக பகுதியைச் சுற்றி மற்றும் தோள்பட்டை பகுதியில் இரத்தம் வருவது போன்ற வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படியே தவறான பிராவை அணிந்தால், அதனால் மிகவும் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். எனவே உடனே இந்த மாதிரியான பிரச்சனையை சந்தித்தால் பிராவை மாற்றுங்கள்.
♥#மூச்சு_விடுவதில்_சிரமம்
தவறான பிராவை அணிந்தால், மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் மிகவும் சிறிய அளவிலான பிராவை அணிந்தால், அதனால் விலா எலும்புகளின் அசைவில் இடையூறு ஏற்படும். மிகவும் கஷ்டப்பட்டு மூச்சு விடுவது போன்று உணர்வதோடு, குறைந்த அளவிலான ஆக்ஸிஜனை சுவாசிக்கக்கூடும். இப்படியே நீடித்தால், அதனால் கழுத்து தசைகளில் புண் ஏற்பட்டு பெரும் கஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும்.
♥#மிகவும்_மென்மையாகும்
உடற்பயிற்சி செய்யும் போது சரியான அளவிலான பிராவை அணிய வேண்டியது அவசியம். ஜிம்மில் என்ன தான் லேசான அசைவுகளைக் கொண்ட பயிற்சியை செய்தாலும், மார்பகங்கள் 8 செ.மீ வரை நகரும். இது மார்பகங்களை மிகவும் மென்மையாக்கி வலியைத் தரும். ஆனால் சரியான பிராவைத் தேர்ந்தெடுத்து அணியும் போது, மார்பகங்களுக்கு முறையான ஆதரவு கிடைத்து, மார்பக பகுதியில் வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
♥#மார்பக_புற்றுநோய்
மிகவும் சிறிய அளவிலான பிராவை ஒரு பெண் தேர்ந்தெடுத்து அணிவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிய அளவிலான பிரா மார்பக பகுதிகளில் இரத்த ஓட்டத்தைத் தடுத்து, மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இது ஒரு பொதுவான பக்க விளைவாக இல்லாவிட்டாலும், சில பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
♥#தேவையில்லாத_ஸ்ட்ரெட்ச்சுகள் தவறான அதுவும் மிகவும் தளர்வான பிராவை தேர்ந்தெடுத்து அணியும் போது, இதனால் மார்பக பகுதியில் தேவையற்ற ஸ்ட்ரெட்ச்சுகள் ஏற்பட்டு, நாளடைவில் மார்பகங்களை அசிங்கமாக தொங்க வைத்துவிடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், நல்ல பொருத்தமான மற்றும் சரியான பிராவைத் தேர்ந்தேடுத்து அணியுங்கள்.
♥#முடிவுரை: மேலே கொடுக்கப்பட்டவையே தவறான பிராவை அணிவதால் சந்திக்கும் பக்க விளைவுகளாகும். எனவே மார்பகங்களின் ஆரோக்கியத்திற்கு சரியான பிராவைத் தேர்ந்தெடுத்து அணிவது என்பது அவசியமானது. அதே சமயம் நல்ல சிறப்பான தோற்றத்தையும் கொடுக்கும். எனவே பிரா அதிக விலையாக இருந்தாலும், அது உங்களுக்கு பொருத்தமானதாக உள்ளதா என்பதை சரியாக கவனித்து பின் வாங்குங்கள்
0 Comments
Thank you