♥ஆதங்கம் – ஒரு பக்க கதை
♥தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது ரகுராமனுக்கு.
மீனா..அது மீனாவேதான். எத்தனை காலமாயிற்று பார்த்து. காதல் பரவசத்தில் உருகி உருகி திரிந்தது எல்லாம் மனதில்நினைவு வர, லேசாக வியர்த்தது.
ஏங்காவது மறைந்து கொள்ளலாமா என்று நினைப்பதற்குள் அவளும் கவனித்து விட்டாள்.
♥மெல்ல அருகில் வந்தவள், ‘எப்படியிருக்கீங்க?’ என்றாள் இயல்பாக.
ம். ஏதோ இருக்கேன். எத்தனை வருஷமாச்சு! நல்லாருக்கியா மீனா’ எனும்போது ஒரு பைக் சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்த இளைஞன் ” ஏறுங்க’ என்றான் மீனாவைப் பார்த்து.
♥யாரது மீனா?
இதுவா! இவன்தான் என் செல்லப்பேரன். கொஞ்ச நேரம்கூட காலாற நடக்க விடமாட்டான். உடனே பைக் எடுத்துகிட்டு வந்திருவான். என் மேல் கொள்ளை பிரியம், வரட்டுமா! என்று வண்டியில் ஏறிக்கொண்டாள்.
♥மீனாட்சி கொடுத்து வைத்தவள். நம் பேரன் ஒரு முறையாவது இப்படி வண்டியில் கூட்டிப் போயிருப்பானா? என்று மனதில் நினைத்துக்கொண்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தார் ரகுராமன்.
- ஜி.சசிகுமார்
0 Comments
Thank you