♥சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் அவள் இடை தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
(இவனுக்கெல்லாம் வீட்டில் அம்மா சேலைகட்டுவது தெரிவதில்லையா)
♥பேன்ட் சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடை தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
(இவனுக்கு வீட்டில் அக்கா தங்கை இருப்பதில்லையா)
♥பாவாடை சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
(இப்படியானவங்க வீட்டில் பெண்களே ஆடை உடுத்துவதில்லையா)
♥முழுதாய் முக்காடிட்டால் கைவிரலும்,கால்விரலும் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பான்.
♥பழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்னை அடைத்து வைத்தாலும் பெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியை தூண்டியதென்பானோ??
♥சில வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் எந்த ஆடை அணிந்தாலும் பெண்னை தவறாகத்தான் பார்ப்பார்கள்.
♥இது அவனின் பார்வையிலும் மனதிலும் தான் வக்கிரமே தவிர பெண்ணின் உடம்பில் ஆடையில் எந்த ஆபாசமும் இல்லை.
♥உலகில் கற்பு மிக்க அடக்கம் ஒடுக்கம் மிக்க நம் தமிழ் பெண்கள் வாழும் நாட்டில் தான் கற்பழிப்பும் சிறுமிகள் வண்புணர்வும் கிழவிகள் வக்கிரமும் செய்யும் வெறிபிடித்த ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள்...
♥செய்வதை எல்லாம் செய்துவிட்டு போகிற போக்கில் பெண்ணின் நடத்தைமீதும் அவளின் ஆடைமீதும் குற்றத்தை போட்டுவிட்டு போய்விடுகிறார்கள் இப்படியான காட்டுமிராண்டி ஆண்கள்.
♥தன் மனைவி சீதையாக இருக்கவேண்டும்.. ஆனால் எனக்கு அடுத்தவன் மனைவி மாதவியாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆண்கள் தான் இங்கு தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்கிறார்கள்....
0 Comments
Thank you