♥பிறந்த திகதியும் திருமண வாழ்க்கையும்
♥ஒவ்வொருவரின் பிறந்த திகதி அதை வைத்தே அதை வைத்தே அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
♥1 ஆம் திகதி : பிறந்த திகதி – 1, 10, 19, 28 தேதியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ஆளுமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள். அனைத்து காரியங்களையும் தானே முன்னெடுத்து செல்ல வேண்டும், தன தலைமையிலேயே அனைத்தும் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் தங்கள் துணையினை எப்போதும் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அவர்களின் ராசியை பொறுத்து அவர்களின் குணநலன்கள் மாறுபட்டாலும், பொதுவாக அவர்கள் விரும்பாத ஒரு செயலை அவர்களை செய்ய வைப்பது என்பது இயலாத ஒன்று. ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை விட்டுவிட முயற்சிக்கமாட்டார்கள். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களின் துணைக்கு எப்பொழுதும் நேர்மையாக இருப்பார்கள். நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
♥2 ஆம் திகதி: பிறந்த திகதி – 2, 11, 20, 29 ஆம் திகதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அமைதியான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையுடனான மனரீதியான தொடர்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள் உடல்ரீதியான தொடர்பை காட்டிலும் மனரீதியான தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும், எனவே இவர்களை சமாளிப்பது சற்று கடினமான ஒன்று. எனவே இவர்கள் நிலையான மனநிலை உள்ளவர்களுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
♥3 ஆம் திகதி: பிறந்த திகதி – 3, 12, 21, 30ஆம் திகதியில் பிறந்தவர்கள் காதல் மற்றும் திருமணத்தை தவிர. இவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள். அதேசமயம் மனதை விட மூளை சொல்வதை கேட்டு நடப்பவராக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கான விதிகளை தானே உருவாக்கி கொள்பவர்களாகவும், பயமற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் ரொமான்ஸ் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும். எனவே அதனை ஈடுசெய்யும் பொருட்டு ரொமான்டிக்கானவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
♥4 ஆம் திகதி : பிறந்த திகதி – 4, 13, 22, 31 ஆம் திகதியில் பிறந்தவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருப்பார்கள். 4
ஆம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இவர்கள் ரொமான்டிக்கானவர்களாக இருக்கமாட்டார்கள். அதேசமயம் பாலியல் உறவில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். தன் கோபத்தால் தன்னுடைய துணையை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
♥5 திகதி : பிறந்த திகதி – 5, 14, 23 எண் 5ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன் பல பேருடன் நெருக்கமான நட்பில் இருப்பவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதே சமயம் மிகவும் ரொமான்டிக்கானவர்களாகவும் . இவர்கள் அனைத்திலும் மாற்றங்களை விரும்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்ட இருக்கும் என்வே நிலையான மனநிலை உடையவர்களை திருமணம் செய்தால் இவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு சிறந்த பொருத்தம் எண் 8ல் பிறந்தவர்கள்தான்.
♥6 ஆம் திகதி : பிறந்த திகதி – 6, 15, 24 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அமைதியானவர்கள் மற்றும் அன்பானவர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எளிதில் பிறரை வசீகரிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய அன்பே இவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கும். எளிதில் உணர்ச்சிவசபடுவதால் துணையுடன் பல சண்டைகள் வரக்கூடும்.
♥7 ஆம் திகதி : பிறந்த திகதி – 7, 16, 25 எண் 7ல் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் குறைவாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதிகம் சிந்திப்பவர்களாகவும், கனவு காண்பவர்களாகவும் இருப்பார்கள், காதலுடன் இருப்பதிலும் எந்த குறையும் இருக்காது. வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு துணையுடன் மனரீதியாக இணைக்கப்பட வேண்டியது அவசியம். சிறிய விஷயங்களை எல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டு கடுமையான வாக்குவாதம் செய்வார்கள் எனவே இவர்களின் துணை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
♥8 ஆம் திகதி : பிறந்த திகதி – 8, 17, 26 எண் 8ல் பிறந்தவர்கள் வலுவானவர்கள் ஆனால் உணர்ச்சிவச படக்கூடியவர்கள். அனைத்து எண்களை காட்டிலும் 8ல் பிறந்தவர்கள் உறவில் அதிக நேர்மையுடன் இருப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவராலும் தவறாக புரிந்துகொள்ள படுவார்கள் அதுதான் இவர்களின் மிக பெரிய பிரச்சினை. 8ல் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்கள் தங்கள் துணையுடன் இணைய அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இணைந்துவிட்டால் அவர்களின் உறவு மிக அழகானதாய் இருக்கும்.
♥எண் 9: பிறந்த திகதி – 9, 18, 17 ஆம் திகதியில் பிறந்தவர்கள் அதிக ஆற்றலுடனும், கோபக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அதேசமயம் இவர்கள் அதிக உணர்ச்சிவச படக்கூடியவர்கள் ஆனால் அதனை மற்றவர்களுக்கு காட்டமாட்டார்கள். இவர்கள் தங்களின் துணையிடம் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தார் மீதும் அதிக அன்பு செலுத்துபவர்களாக இருப்பார்கள்
0 Comments
Thank you