HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவன்,மனைவி இருவரும் பயன்படுத்தகூடாத 5 வார்த்தைகள்

♥கணவன்,மனைவி இருவரும் பயன்படுத்தகூடாத 5 வார்த்தைகள் 

♥குடும்பத்தில் எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த கூடாது. கோபத்தில் பேசிவிட்டேன் என்று கூறினாலும் அந்த வார்த்தை என்றென்றைக்கும் அவர் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

♥உன்னை விட நான் #திறமையானவன்
உங்களிடம் ஒரு திறமை இருந்தால் உங்கள் துணையிடம் மற்றொரு திறமை இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளை அவரால் செய்ய முடியாது அதே போல அவர் செய்யும் வேலைகளை உங்களால் செய்ய முடியாது. எனவே உன்னை விட என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது தம்பதியினர் உறவில் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும்.

#பக்கத்து வீட்டில் இருப்பவரை பார்
♥சம்பாத்தியம் மற்றும் குணநலன்கள் சார்ந்த விஷயத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவரை ஒருபோதும் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் வாழும் வாழ்கை முறை வேறு, அவர்கள் வாழும் வாழ்க்கை முறை வேறு.

#போலியானவன்
♥எதிர்பாராமல் ஏற்படும் சண்டையின் போது என்னிடம் நீ நடிக்கிறாயா? என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், மனதுக்குள் நம்மை போலியானவன் என்று நினைத்துக்கொண்டுதான் இவ்வளவு நான் நம்முடன் வாழ்ந்துள்ளார் என்று துணைக்கு நினைக்கத் தோன்றும்.

நீ ஒரு #தண்டம், எதற்குமே #லாயக்கில்லை
♥சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் போது நீ ஒரு தண்டம், வேஸ்ட் போன்ற வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டால் போதும், அந்த இடமே ஒரு போர்க்களமாக மாறிவிடும். எதற்குமே லாயக்கில்லை என்ற வார்த்தை அவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போன்று பதிந்துவிடும். வாழும் காலம் உள்ளவரை அந்த வார்த்தை மனதில் ஒருவித வலியினை துணைக்கு ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கும்.

#கடந்தகாலத்தை பற்றி பேசுவது
♥திருமணம் ஆன புதிதில் தம்பதியினர் தங்களுடைய கடந்த காலம், திருமணதிற்கு முந்தைய காதல் பற்றி பேசி சந்தோஷமாக சிரித்து கொள்வார்கள். ஆரம்பத்தில் இதுபோன்ற விஷயம் தம்பதியினர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், காலப்போக்கில் சண்டை ஏற்படும்போது கடந்த காலத்தை பற்றியோ, திருமணதிற்கு முந்தைய உறவினை சொல்லிக்காட்டும்போது, இவ்வளவு நாள் சந்தேகத்துடன் தான் என்னுடன் குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறாயா என்ற கேள்வி அங்கு எழுந்து உறவில் மிக பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.

♥இவற்றை கடந்து சென்றாலே இல்லறமானது நிச்சயம் இனிமையானதாக இருக்கும்

Post a Comment

0 Comments