♥#சனியனே #மூதேவி என்று திட்டினால் என்ன நடக்கும் என தெரியுமா?
சனியனே என்று ஏன் திட்டக் கூடாது
♥நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம். ஆனால் அப்படி யாரையும் நாம் சனியனே என திட்டக்கூடாது. அவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் நினைத்து, சனீஸ்வர பகவான் அவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். அதனால் அவ்வாறு சனியனே என்று திட்ட கூடாது.
#ஆபத்தான_சொல்
♥சனீஸ்வரனை மந்தமான கடவுள் என்று அனைவரும் கூறுவர். அவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. மேலும் சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் மெதுவாகவே சூரியனை சுற்றி வருகிறது என்பதால் அறிவியல் ரீதியாகவும் அப்படி சொல்லப்படுகிறது. அவ்வாறு வருகையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்ரமிப்பார். ஒருவரது எண்ணத்தில் சனியன் வந்துவிட்டால் அவரது வார்த்தைகளிலும் அதன்
♥பிரதிபலிப்பு இருக்கும். அந்த வகையில் "சனியனே" என்ற சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரது நாவில் இருந்து அந்த வார்த்தை வந்து விட்டால் சனி அடுத்து அவரது செயலிலும் வந்து விடுவார். இதனால் அந்த நபர் எண்ணிலடங்கா சோதனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.
♥அதனால் சனியனே என்று யாரையும் திட்டிவிட வேண்டாம். கோபத்தில் சனியனே என்று திட்டிவிட்டு பின்பு அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்.
♥சனியன் என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடாத மேலும் இரண்டு வார்த்தைகளும் உண்டு. அவை,
♥#மூதேவி - இது லட்சுமியின் சகோதரியைக் குறிக்கும். சொல்பவரையும் பாதிக்கும், சொன்னவரையும் அதிகம் பாதிக்கும். பின்பு மூதேவி நிரந்திரமாக நம்மிடம் குடியேறிவிடுவாள்.
♥#பிரம்மகத்தி - இதனை பிராமண வீடுகளில் திட்டுவதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தை கூறுவதால் பிரம்மகத்தி தோஷம் ஏற்படும்
0 Comments
Thank you