HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்களின் கூந்தலும் அவற்றின் வகைகளும் –

♥பெண்களின் கூந்தலும் அவற்றின் வகைகளும் – 

♥அழகாக இருக்கும் ஒரு பெண்ணை பேரழகியாக காட்டுவது கூந்தல் தான். 
கூந்தல்களுக்கு முகத்தை போலவே தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். அடிப்படையாக, முடியை மூன்று வகைகளாக சொல்லாம்.

♥#கூந்தலின்_வகைகள்
1) எண்ணைப்பசை மிகுந்த கூந்தல் ( #OilyHair )
2) வறண்ட கூந்தல் ( #DryHair )
3) சாதாரண கூந்தல் ( #OrdinaryHair )

♥1) எண்ணைப் பசை உள்ள கூந்தல்
எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும். தலையில் அழுக்கு சேரும்.

♥இந்த வகை பெண்களுக்கு, தலையில் மட்டுமல்ல, முகத்திலும் அதிக எண்ணை இருக்கும். தலைமுடி 1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று சொன்னோம். எண்ணை பசை கூந்தல் உள்ளவர்களுக்கு 1 லட்சத்து நாற்பதாயிரம் எண்ணை சுரப்பிகள் இருக்கும். எண்ணை அதிகம் சுரக்க காரணங்கள், பிறவி உடல் வாகு, ஹார்மோன்கள், சூடு, ஈரப்பதம் ஆகியவை காரணமாகலாம்.

♥2) #உலர்ந்த_முடி(பரட்டை)
எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும்.

♥3) #சாதாரண_முடி
எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.

♥#ஆயுர்வேதத்தின்படி_முடி_வகைகள்
ஆயுர்வேதம் தனது அடிப்படை கோட்பாடான வாத, பித்த, கப தோஷங்களால் மனிதர்களை மூன்று பிரக்ருதிகளாக பிரிக்கிறது. அந்தந்த பிரகிருதிகளுக்கு ஏற்ப தலைமுடி இருக்கும்.

#வாத_பிரகிருதிகளுக்கு
♥உடல் முடி கறுப்பாக, அடர்த்தியாக, சுருண்டு மென்மையாக இருக்கும். உடல் முடி ஒன்று குறைவாக இருக்கும். இல்லை எதிர்மாறாக அதிகமிருக்கும்.
தலைமுடி கறுப்பாக, கரடு முரடாக, சிடுக்கோடு இருக்கும். முடி வறண்டு இருக்கும்.

#பித்த_பிரகிருதிகளுக்கு
♥உடல் முடி இலேசாக, மிருதுவாக அழகாக இருக்கும், தலைமுடி எண்ணை பசையு டன் இருக்கும். சீக்கிரமாக நரைத்து விடும், வழுக்கை சீக்கிரமாக ஏற்படலாம்.

#கபப்_பிரகிருதிகளுக்கு
♥உடல் முடி அளவோடு இருக்கும், தலைமுடி, எண்ணைபசை சிறிதளவே இருந்தாலு ம், பளபளப்பாக அலை அலையாக இருக்கும். அடர்த்தியாக கருமையாக இருக்கும்.

♥உங்கள் கூந்தல் எந்த டைப் என்று அறிய ஷாம்பூ போட்டு தலைமுடியை அலசின மறுநாள், ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து தலை நடுவிலும், காதுகளின் பின்புறமும் அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டாம். அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் எண்ணெய் தெரிந்தால் உங்க கூந்தல் எண்ணெய்ப்பசை அதிகமுள்ள கூந்தல். 

♥தவிர உங்கள் சர்மம் ‘நார்மலாக’ இருந்தால் உங்கள் கூந்தலும் நார்மலாக இருக்கும். சர்மத்தில் குறிப்பாக முகத்தில், எண்ணெய் பசையாக இருப்பவர்களுக்கு, கூந்தலும் எண்ணெய்ப் பசை அதிகமானதாக இருக்கும். உலர்ந்த சருமம் உள்ளவர் களின் கூந்தலும் உலர்ந்திருக்கும்.

#மனிதஇனத்திற்கேற்ப_மாறுபடும்_முடி
♥மனிதரின் இனம், வசிக்கும் பிரதேசங்கள் இவைகளால் முடி வகைகள் மாறுபடும். கறுப்பின நீக்ரோக்கள் முடி, கம்பிச்சுருள் போல சுருண்டு, சுருட்டையாக இருக்கும். ஆசிய இனத்தவர்களுக்கு முடி நீளமாக இருக்கும். மங்கோலிய இனத்தவர்க்கு முடி முரட்டுத்தனமாக இருக்கும். ஐரோப்பிய நாட்டவருக்கு முடி மிருதுவாக, பழுப்பு – வெள்ளை நிறமாக இருக்கும். இவர்களுக்கு மெலானின் குறைவாக இருப்பதால், முடி சீக்கிரம் நரைத்து விடும்.

#ஆயுர்வேதமும்_முடியும்
♥ஆயுர்வேதத்தின்படி முடி ஒரு எலும்பின் திசு. அஸ்தி – தாதுவின் மலம் கழிவுப் பொருள். எலும்பு கால்சியத்தால் ஆனதால், முடிக்கும் கால்சியம் தேவையென ஆயுர்வேத மருத்துவர்கள் கருதுகின்றனர். கால்சியம் மட்டுமல்ல, இரும்புச் சத்தும் சேர்ந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பது இவர்களின் கருத்தாகும். சரகசம்ஹிதை, எலும்பு திசு குறைவினால், இளநரை, முடி உதிர்தல் இவை ஏற்படுகிறது என்கிறது.

Post a Comment

0 Comments