HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு மூதாட்டியின் வேதனை குரல்

♥ஒரு  மூதாட்டியின் வேதனை குரல்!!!!!

♥கள்ளிப்பாலில் தப்பித்தேன்..
காடு மேடு சுற்றிவந்தேன்...
சுள்ளி விறகு பொறுக்கிவந்தேன்...
குடும்ப சுமையை..நானும் தாங்கி வந்தேன்...
புத்தகம் தூக்க ஆசைதான்..
குடும்ப பொதிசுமக்கும் சூழ்நிலை..
தம்பிக்காக வேலை சென்றேன்...
சுமையை நானும் குறைக்கவே...

♥பெண்ணாய் பிறந்த பயணமதில்..
பாவ கொல்லிக் கண்களில் தப்பித்தே...
பாழும் நாட்களை ஓட்டிவந்தேன்..
திருமண நாளும் இனிதே வந்தது..
கற்பு ஒன்றே சீதனமாய்..
இனிய கணவனுக்கு நானும் பரிசளித்தேன்..

♥மக்கள் நான்கினை பெற்றிட்டேன்..
உயிர் மன்னவன் விட்டு சென்றுவிட்டான்..
குழந்தைகள் நாலையும் படிக்கவைக்க...
பத்துப் பாத்திரம் தேய்த்தேனே...
நால்வரும் நன்றாய் வளர்ந்தவுடன்..
அம்மாவை வைப்பது யார் வீட்டில்...
என்றே கவலைப்பட்டனரே..

♥கணவன் கொடுத்த தன்மானம்...
சுங்குடி சேர்த்த காசினிலே..
சுயமாய் கடை ஒன்றை வைத்தேனே..
அடுக்குமாடி கடைதனிலே..
கேட்கும் விலையை கொடுக்கும் மனிதர்..
அப்பாவி கிழவி என்னிடமே...
அஞ்சு ரூபா கீரைக்கு அதிகமென்றார்..
ஒத்த ரூபாயை குறைத்துவிட்டே..
அன்பாய் வாங்கிக் கொண்டேனே..

♥பாழும் வயிறு பசித்திடுமே...
பாமர கிழவி என்ன செய்வேன்...
எத்தனை சோதனை வந்தாலும்...
எத்தனை இன்னல்கள் வந்தாலும்...
அத்தனை சுமைகளும் குறைத்திடவே
இறைவன் என்னுடன் இருக்கின்றான்...

♥உயிர் மூச்சு இருப்பது சிலகாலம்..
என் உழைப்பில் நானும் வாழ்ந்திடுவேன்..
கணவன் விண்ணில் காத்திருப்பான்..
நல் மகளிர் பட்டம் பெற்றுவிட்டேன்..
விரைவில் விண்ணில் பறப்பேனே...

Post a Comment

0 Comments