HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நீங்க அம்மா ஆகிட்டீங்க!

♥நீங்க அம்மா ஆகிட்டீங்க!

♥நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன?
விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்ரியா.

#வாந்தி
♥சிலருக்கு முதல் ட்ரைமெஸ்டர் வரை வாந்தி இருக்கும். சிலருக்கோ குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள்வரை விடாமல் அது தொடரும். ஒரு சிலருக்கு எப்போதாவது மட்டும் வாந்தி வரும்; மற்றபடி அவர்கள் நார்மலாகவே இருப்பார்கள். இன்னும் சிலருக்கு வாந்தி வருகிற உணர்வு மட்டுமே இருக்கும்… ஆனால், வாந்தியெடுக்க மாட்டார்கள்.

#மயக்கமும்_சோர்வும்
♥இதுவும் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு இருக்கும்; சிலரோ வழக்கம்போல சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

#மென்மையாகும்_மார்பகம்
♥கருவுறுதலின் ஆரம்ப அறிகுறியாக எல்லாப் பெண்களுக்கும் மார்பகங்கள் மென்மையாகும்; வலியெடுக்கவும் செய்யும்.

#பசியெடுத்தல்
♥கருத்தரித்த ஆரம்பத்தில், சில பெண்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. தண்ணீர்கூட அவர்களுடைய நாக்குக்கு தேவையற்றதாகத்தான் தெரியும். சிலருக்கோ அதிகமான பசி உணர்வு இருக்கும்.

#அடிக்கடி_சிறுநீர்_கழிப்பது
♥கருவுற்ற ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். அதற்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் காரணமாக இருக்கலாம், கவனம்.

#மலச்சிக்கல்
♥இயற்கையாகக் கருத்தரித்த பெண்களுக்கு மலச்சிக்கல் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. கருவுறுதலுக்கான மாத்திரைகள் உட்கொண்டவர்களுக்கு, அவற்றில் இருக்கிற புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

#மனம்_அலைபாய்தல் (Mood Swing)
♥கருக்கலைந்துபோன அனுபவம் உள்ள பெண்கள் மீண்டும் கருவுறும்போது `மனம் அலைபாய்தல்’ என்கிற மூட் ஸ்விங் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக  10% பெண்களே கருவுறுதலின் அறிகுறியாக மூட் ஸ்விங்ஸை எதிர்கொள்கிறார்கள்.

#ரத்தக்கசிவு
முதல் ஒரு மாதம் வரைக்கும் மாதவிடாய் வராமல் இருந்து, திடீரென லேசான ரத்தக்கசிவு ஏற்படுதல் 20% பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கிறது. ரத்தக்கசிவு வலியில்லாமல் இருந்துவிட்டால் இது குறித்து பயப்படவேண்டிய அவசியமில்லை.

Post a Comment

0 Comments