♥#கன்னி - ஒரு நிமிட கதை
♥எனக்கு ஏகமாய் அரிப்பெடுத்தது. உடனடித்தேவை ஒரு டீன் ஏஜ் இளசு. அவள் தான் சுத்தமாய் சகலத்தையும் முடிப்பாள்.
சே போனவாரம் தெரியாத்தனமா அந்த கிழ போல்டு கீதாவை கூப்பிட்டுட்டேன். அவ எல்லாத்தையும் முடிக்க ரெண்டு மணி நேரமாச்சி.
♥கோடி வீட்டு கோமளாவோட வேலை சுத்தம்னு கேள்விப்பட்டு ஒரு நாள் அவளை கூப்பிட அவ ரொம்பதான் பிகு பண்ணிக்கிட்டாள். உங்களுக்கு எப்பவும் இதே வேளை தான் கடைசியில அவ வேலை தொடங்குறதுக்கு முன்னாடியே புருஷன் வந்துட்டான்னு துண்டைக்காணோம். துணியை காணோம்னு ஓடிட்டாள்.
♥அதான் இப்பல்லாம் நான் கன்னிப்பெண்ணாய் பார்த்து பிடிக்கிறேன். தூரத்தில் யார் அது? அட நம்ம காலேஜ் ஜொள் கிருத்திகா
வாடியம்மா கிருத்தி நல்ல சமயத்தில வந்தே. என் அரிப்பை தீர்க்க.ம்ஹூம் நான் மாட்டேன். எனக்கு வெட்கமா இருக்கு.
♥அடச்சீ இதுல வெட்கப்பட என்ன இருக்குடி? ஊர்ல யாரும் செய்யாததா? வாடி. வந்து பேன் பாருடி. தலை பயங்கரமா அரிக்குது.
என் வெள்ளிக்கூந்தலை அவிழ்த்து விட்டு அவள் முன்னே தலை குனிந்தேன் நான்.
♥பத்மா பாட்டி
0 Comments
Thank you