♥ஆண் பெண் நட்பு
தயக்கத்தோடு ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்....
♥பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள்....
♥அவள் தவறாக எண்ணி விடுவாளோ???
என்று,, யோசித்து யோசித்து பேசும் தருணங்கள்....
♥காதல், கீதல் என உளறுவானோ??? என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்ப காலங்கள்...
♥புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் ''''நட்பு மலர்'''...
♥புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம்....
♥தோல்வி கண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி, அடுத்த முயற்சிக்கு
அடித்தளமிட வைப்பாள்
அவனை அவள் ''தோழி''
♥ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,
பெண்மை மாறாமலும்
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் ''தோழன்''
♥முடிவில்லா முடிவில்- நட்பு
வளர்ந்து நிற்கும்...
♥புரிந்து இருக்க மாட்டார்கள் என்னை,,,
என் தோழியை/ நண்பனை விட
வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...
♥வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமான,,,
அழகான,,,
மதிப்புமிக்க
'''ஆண்-பெண் நட்பு'''
0 Comments
Thank you