HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சூப்பரான சமயலறை குறிப்புகள்

♥சூப்பரான சமயலறை குறிப்புகள்

♥இஞ்சி, எலுமிச்சை பழச்சாறு கலந்து ஜூஸ்களை ஃபிரிட்ஜில் மூடாமல் வைக்க வேண்டும். 3 நாட்கள் வரை சுவை குறையாமல் இருக்கும்.
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

♥சுண்டலை தாளித்த பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் கசகசா வறுத்து பொடித்துத் தூவுங்கள். அருமையாக இருக்கும்.

♥ வேப்பிலையுடன், பத்து மிளகு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து அரைத்துப் பெரியவர்களுக்குச் சுண்டைக்காய் அளவும் சிறியவர்களுக்கு அதில் கால் பாகமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு நாளைக்குக் கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் உடனே மடிந்துவிடும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

♥சூப்பில் போட பிரெட் துண்டுகள் இல்லாதபோது, ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்து துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

♥ கையில் தீப்புண் ஏற்பட்டால் கோதுமை மாவினுள் கையை வைத்துக்கொண்டு சிறிது நேரம் இருந்தால், புண் சரியாகும்.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

♥ எலுமிச்சம்பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு சாறு பிழிந்தால் அதிகப்படியான சாறு கிடைக்கும்.

♥ இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிது எண்ணெயில்லாமல் வறுத்த ரவையைக் கலந்து அரைமணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

♥ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்போட்டால் மிளகாய் பார்க்க வெண்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.

♥இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.

♥ வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

♥ கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில் தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள் உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.

♥தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல இருக்கும்.

♥ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

♥எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால் சூப் திக்காக இருக்கும்.

♥ 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக இருக்கும்.

♥ குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி, சதுர துண்டு
களாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.

♥ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம் மிருதுவாக இருக்கும்.

♥கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம் சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.

♥ பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி  இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத் திகழும்.
 - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

♥ சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ் சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

♥சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம் இல்லையா?  வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.

♥கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.

♥பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால் சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

♥வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன் கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.

♥ அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால் அடை
மொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி

Post a Comment

0 Comments