HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே?

♥ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே?

♥நேற்றுவரை உங்களை ‘அக்கா’ என அழைத்திருப்பார்கள். இன்று யாரோ ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் ஒரு நிமிடம் அதிர்ந்து போவீர்கள்தானே?

♥கல்யாணத்துக்காகப் பார்த்துப் பார்த்து தைத்த டிசைனர் பிளவுஸை திடீரென ஒருநாள் எடுத்துப் போட்டால், முழங்கைக்கு மேல் நுழையாததைப் பார்த்தால் அழுகை வரும்தானே?

♥இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு பதிவுசெய்திருந்த புகைப்படங்களை ஃபேஸ்புக் மெமரி ஷேரிங்கில் பார்க்கும் போது உங்களுக்கே அடையாளம் தெரியாவிட்டால், ‘எப்படி இருந்த நான்…’ என மைண்டு வாய்ஸில் புலம்புவீர்கள்தானே?

♥40 ப்ளஸ்ஸில் அடியெடுத்துவைக்கும் பல பெண்களும் இப்படியான திடீர் தோற்ற மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள்.
பெண்தான் வீட்டின் ஆதாரம். அவள் ஆரோக்கியமாக இருந்தால், அந்த வீடும் ஆரோக்கியமாக இருக்கும். அவளது மகிழ்ச்சி வீட்டிலும் வேலையிடத்திலும் பிரதிபலிக்கும். மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில் மன ஆரோக்கியத்துக்கு இணை யாக உடல் ஆரோக்கியமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் புறத்தோற்றமும் அடக்கம்.

♥30 ப்ளஸ்ஸிலேயே ஆன்ட்டி லுக்கில் அடையாளப்படுத்தப்படுவது பெரும்பாலான பெண்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கிற விஷயமே. அதிலும் வேலைக்குப் போகிற பெண்களுக்கு இது இன்னும் அதிக மன உளைச்சலை உருவாக்கும். வீட்டுப் பொறுப்புகள், அலுவலக வேலைகள் என இரட்டைச் சுமைகளைச் சுமக்கும் பெண்களுக்கு உடலின் அளவுகளில் அக்கறை இருந்தாலும் நேரம் இருக்குமா என்பதுதான் கேள்வி. கிடைக்கும் சில நிமிட ஓய்வையும் உடற்பயிற்சிகளுக்கோ, தனக்கான டயட் உணவுத் தயாரிப்புக்கோ செலவிடப் பலருக்கும் விருப்பமிருப்பதில்லை.

♥விளைவு? நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டிருக்கும் உடலை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் பழகுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, உடல் இளைப்பதென்பது சாத்தியமாகாத செயல் அல்ல. கொஞ்சம் பிளானிங்கும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தால் போதும்.

#என்னவெல்லாம்_செய்யலாம்?
♥தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், ரசம், சூப், மோர், வெள்ளரி ஜூஸ், புதினா கொத்தமல்லி ஜூஸ், கற்றாழை ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் போன்றவை சிறந்த திரவ உணவுகள். உடலுக்குப் போதுமான நீர்ச்சத்து கிடைத்தால், அது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். உடலின் எல்லா இயக்கங்களும் சரியாக நடைபெறும். பசி உணர்வு மட்டுப்படும்.

♥அதிக அளவில் காய்கறிகள் சாப்பிடுங்கள். காலை உணவுடன் ஒரு கப், மதிய உணவுடன் ஒரு கப், இரவு உணவுடன் ஒரு கப் காய்கறிகள் சாப்பிடுங்கள். இட்லியில், தோசையில், ஊத்தப்பத்தில், உப்புமாவில்… இப்படி எல்லாவற்றிலும் காய்கறித் துருவல் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
மதிய மற்றும் இரவு உணவுக்கு 60 சதவிகிதம் காய்கறிகள் சேர்த்த புலாவ் அல்லது பிரியாணி சாப்பிடுங்கள். சப்பாத்தி செய்யும்போதும் காய்கறிக் கலவை இருக்கட்டும். சாலட்டும் பச்சடியும் சேர்த்துக்கொள்ளுங்கள். சாம்பார், கூட்டு, தால் போன்றவற்றில் நிறைய காய்கறிகள் சேருங்கள். கூடவே ஒரு சட்னியோ, துவையலோ இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

♥ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சருமம், கூந்தல், நகங்கள் எல்லாம் ஆரோக்கியத்தில் மின்னட்டும். முகத்தில் இளமை துள்ளட்டும். புதிய ரத்த செல்கள் உருவாகட்டும். ரத்தச்சோகை இல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

♥அலுவலகத்தில் விடுப்பு எடுக்க உடல்நலமின்மையைக் காரணம் சொல்வதைத் தவிருங்கள். பருப்பு சேர்த்த அடை, பெசரட்டு, கெட்டியான சாம்பார், தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்தரைத்த சட்னி, பருப்பு உசிலி, சுண்டல், ரொட்டியுடன் சன்னா அல்லது பனீர் போன்றவை புரதம் நிறைந்த உணவுகள். உணவு இடைவேளைகளில் பசியெடுக்கும்போது பழங்கள் மற்றும் நட்ஸ் சாப்பிடுங்கள். எள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சைவ உணவுக்காரர்களுக்கு பால், தயிர், பனீர், சீஸ் போன்றவற்றிலிருந்து போதுமான புரதச்சத்தைப் பெறலாம். ஒரு வேளை உணவுக்கு அசைவம் சேர்த்துக்கொள்வது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கும்போது, கண்டதையும் உண்ண வேண்டும் என்கிற உணவுத் தேடல் குறையும்.

♥தினசரி சமையலில் எண்ணெயின் உபயோகத்தை முடிந்த அளவுக்குக் குறைக்கவும். எடைக் குறைப்பு முயற்சியில் இருக்கும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 3 முதல் 4 டீஸ்பூன் எண்ணெய் போதுமானது. தானியங்கள், பருப்புகள், விதைகள், தேங்காய், வேர்க்கடலை, சிலவகை பழங்கள் மற்றும் நட்ஸில் மறைமுகமான எண்ணெய்ச் சத்து இருக்கும். வாரத்தில் ஒரு நாள் எண்ணெயே இல்லாத சாப்பாட்டுக்குப் பழகலாம். அதாவது ஃப்ரெஷ்ஷான பழங்கள், ஆவியில் வேகவைத்த காய்கறிகள், சாலட் போன்றவற்றை மட்டும் சாப்பிடலாம். காய்கறிகளின் இயற்கையான மணமும் சுவையும், அவற்றில் மசாலா சேர்க்க வேண்டிய தேவையைக் கூடக் குறைத்துவிடும்.

♥ஆரோக்கியமான உணவுகளை எப்போதும் ஸ்டாக் வைத்திருங்கள். சட்டென சாலட் செய்து சாப்பிடும்படியான காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவை இருக்கட்டும்.  அவசரப் பசிக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்வதையும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

#எடைக்குறைப்பை_ரசியுங்கள்!
♥ஏன் எடையைக் குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள். தினமும் அதைப் படித்து மன உறுதியை ஏற்றுங்கள்.
உங்கள் உடல் அளவுக்குப் பொருந்தாமல் போன உடையை ஹேங்கரில் மாட்டி, உங்கள் பார்வையில் படும் இடத்தில் தொங்கவிடுங்கள். அதை அணியும் அளவுக்கு உங்கள் உடல் மாற வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அதில் சாதித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு நீங்களே ஏதேனும் பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள்.

♥பிரமோஷன் கிடைக்கிறதா? சம்பள உயர்வா? வேறு ஏதேனும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிகளா?  அதைக் கொண்டாட உடலுக்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். புதிய டிரஸ் வாங்கி மகிழுங்கள். ஆனால், ஹோட்டலுக்குப் போய் ட்ரீட் வைப்பது மட்டும் வேண்டாம்.

♥உங்களைப் போலவே எடையைக் குறைக்கும் எண்ணத்தில் உங்கள் சக ஊழியர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் போடுங்கள். ஆளுக்கோர் உணவு சமைத்து எடுத்துச் சென்று பகிர்ந்து உண்ணுங்கள்.  நீங்கள் சாலட் எடுத்துச் சென்றால், உங்கள் பார்ட்னரை கீரையோ, சாம்பாரோ எடுத்துவரச் சொல்லுங்கள். நீங்களே சமைத்துச் சாப்பிடும்போது ஏற்படும் சலிப்பும் இதில் தவிர்க்கப்படும்.‘இன்னிக்கு ஒரு நாள் டயட்டை விட்டா ஒண்ணும் ஆயிடாது’ என நீங்கள் தவிர்க்க நினைத்தாலும் உங்கள் பார்ட்னர் உங்களை மீண்டும் டயட்டுக்குள் இழுத்துக்கொண்டு வருவார்.

♥நீங்கள் எடைக் குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் என எல்லோருக்கும் சொல்லுங்கள், தவறில்லை. அவர்களின் ஆதரவும் உங்களுக்கு உதவும்.

♥சின்னச்சின்ன முயற்சிகளிலிருந்து தொடங்குங்கள்!
எடையைக் குறைக்கும் ஆர்வத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களிலிருந்து தொடங்கலாம். ஒரேயடியாகத் திட்டமிடுவது, பத்தே நாள்களில் வெறுத்துப்போய், மொத்தமாக எல்லாவற்றையும் கைவிடச் செய்துவிடும். டயட் என்கிற வார்த்தையே உங்களுக்கு பிபியை அதிகரிப்பதாக மாறிவிடும்.

♥மாலைநேரத்துச் சிறு உணவுதான் பிரச்னை என்றால் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்… அதாவது, ஆரோக்கியமான மாலைநேர உணவுக்கு நீங்கள் முழுவதுமாகப் பழகும்வரை!

♥இரவு உணவு தயாரிப்பதில் தாமதமாகிறது, தாமதமாகச் சாப்பிடுவதால் எடை அதிகரிக்கிறது என்கிறவர்கள், காலையிலேயே இரவு உணவுக்கான தயாரிப்புகளை முடித்துவிடலாம். உதாரணத்துக்கு சப்பாத்திக்கு சைடிஷ் தயாரித்து வைத்துவிடலாம். சட்னியோ, துவையலோ அரைத்து வைத்து விடலாம்.

♥வார இறுதி நாள்களில் சட்னி வகைகள் தயாரித்து வைக்கலாம். சுண்டலுக்கான பயறுகளை ஊறவைத்து, வேகவைக்கலாம்.

♥`தண்ணீரே குடிப்பதில்லை… அதுதான் பிரச்னை’ என்கிறவர்கள், அலாரம் வைத்தோ, தண்ணீருக்கான ஆப் பயன்படுத்தியோ அவ்வப்போது தண்ணீர் குடிக்கலாம். ஒவ்வொரு முறை கழிவறை சென்றுவிட்டு வந்ததும் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.  ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ரசம், சூப், மோர் குடிப்பதை 30 நாள்களுக்குப் பின்பற்றலாம்.

♥வாரத்தில் ஒரு நாள் மட்டும் உங்கள் உணவில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டலாம். உதாரணத்துக்கு ஒரு பிளேட் பிரியாணி அல்லது ஒரு ஐஸ்க்ரீம் அல்லது ஒரு துண்டு கேக்… இப்படி உங்களுக்குப் பிடித்த உணவுகளை ஆப்ஷன்களாக வைத்துக்கொண்டு, அவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்து, குற்ற உணர்வின்றி சாப்பிடலாம்!

Post a Comment

0 Comments