♥#சகுனம் - ஒரு நிமிட கதை
♥ராமநாதனை எதற்காக என் காரில் ஆபீஸ் அழைத்து செல்ல சம்மதித்தேன் என்று வெறுப்பாக இருந்தது.
கடந்த மூன்று நாட்களாக நான் காரை கிளப்புகையில் சாலையின் குறுக்கே பூனைஓடி வர... ஐந்து நிமிஷம் வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்.. என்று என்னை காக்க வைத்து, பூட்டிய வீட்டை திறந்து உள்ளே போய் உட்கார்ந்து விட்டு வந்தார் ராமநாதன்.
♥மூடநம்பிக்கையை இவர்கள் எப்போது தான் கைவிடுவார்களோ? மனதில் நினைத்தாலும் வெளியில் காட்டி கொள்ளவில்லை. இன்றும் அதே போல பூனை குறுக்கே வர... சார்... தப்பா நினைச்சுக்காதீங்க... இன்னிக்கு மட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அஞ்சு நிமிஷத்துல் வந்துடறேன்.... சொன்னார் ராமநாதன்.
♥நாளையிலிருந்து குறுக்கே வரமாட்டேன்னு இந்த பூனை சொல்லிச்சா சார்? நக்கலாய் கேட்டேன்.
பின் அறையில இந்த பூனை மூணு குட்டி போட்டிருக்குது. ராத்திரி மூடுற ஜன்னலை காலைல திறக்க மறந்துடறேன். தாய் பூனை உள்ளே வந்தாதானே குட்டிகளுக்கு பால் தர முடியும். தெருவுல இந்த பூனையை பார்க்கிறபோது தான் ஜன்னலை திறக்கணும்னு ஞாபகம் வருது... ஊருக்கு போயிருக்கிற மனைவி குழந்தைங்க நாளைக்கு வந்திடுவாங்க. அப்புறம் அவங்க கவனிச்சுக்குவாங்க... ராமநாதன் சொல்ல என் மனதிற்குள் சுருக்கென்றிருந்தது.
-♥கீர்த்தி
0 Comments
Thank you