♥கருப்பையில் பனிக்குடம் உடைவதற்கான காரணங்கள்
♥குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
♥கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
♥இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும்.
♥ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.
♥அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
♥இதன் அறிகுறிகள்... திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
♥32 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 32 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.
♥ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.
♥இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூற முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.
0 Comments
Thank you