HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மாதவிடாய் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகள்

♥மாதவிடாய் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகள்

♥உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.

♥பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை. சிலர் சென்ற மாதத்தில் வந்த மாதவிடாய் நாளை நினைவில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் சிலருக்கு அந்த திகதியை ஞாபகம் வைத்துக் கொள்வது சற்று கடினமான காரியம். அதனால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகிறது என்பது குறித்த குழப்பம் இருக்கும். சில மாதங்களில் ஒரு வாரம் முன்கூட்டியே கூட மாதவிடாய் உண்டாகலாம்.

♥ஒவ்வொரு பெண்ணிற்கும் தனது மாதவிடாய் சுழற்சி குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம். புதிய கர்ப்பத்தடை முயற்சி மேற்கொள்ளுதல் அல்லது வேறு சில காரணத்தினால் கூட மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு தோன்றலாம். ஆனால் உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து நீங்கள் அடுத்த சில தினங்களில் உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.

♥உடலின் ஹார்மோன் மாறுபாடு காரணமாக, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு சார்ந்த பொருட்களைத் தேடி சுவைக்கும் உணர்வு அதிகரிக்கும். பொதுவாக அதிகம் இனிப்பு சேர்க்காதவர்கள் கூட சாக்லேட்டை தேடி பிடித்து சாப்பிடும் எண்ணம் கொள்வார்கள். மாதவிடாய் சுழற்சி முழுவதும் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சமச்சீரான உணவு அட்டவணையைப் பின்பற்றும் பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் எளிதில் சமாளிக்கும்படியான நாட்களாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

♥ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் மற்றும் மாதவிடாய் காலம் முழுவதும் அதிகரித்த சோர்வு காணப்படும். உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் காரணமாக உடல் இயல்பை விட அதிகமாக சோர்வாக உணரலாம். இது இயற்கையானது தான். இந்த சூழ்நிலையை அமைதியாக எதிர்கொண்டு, அதிகமான ஓய்வு எடுத்து கொள்ளலாம். உங்களை நீங்களே அவசரப்படுத்தி எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம்.

♥சிலருக்கு பாதங்களில் வீக்கம் உண்டாகலாம். சில பெண்கள் தங்கள் அடிவயிறு, மார்பகம் போன்ற சில இடங்களில் வீக்கத்தை உணரலாம். சிலருக்கு கைகள், முகம், கால்கள் போன்றவையும் வீக்கமாக இருக்கும். உடலில் அதிக திரவம் தங்குவதால் இந்த நிலை உண்டாகும். ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உடலில் வீக்கம் ஏற்படும்போது படுத்துக் கொண்டே இருக்காமல் உடலை அசைத்துக் கொண்டிருப்பதால் இந்த வீக்கம் குறையலாம். அதனால் நடைபயிற்சி, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் வீக்கம் குறையும்

Post a Comment

0 Comments