*ஆழ்துளையில் கண்ணீர்*
ஆழ்துளை!
இதயத்தில் இன்று
ஆழ்துளை!
தொண்டைக் குழிக்குள்
சிக்கித் தவிக்கிறது
பிஞ்சுகளின் உயிர்!
நீரற்ற ஆழ்துளைக் கிணற்றில்
நிரம்பி வழிகிறது
மக்களின் கண்ணீர்!
உன்
கருவறையிலிருந்து
உயிரோடு பிரசவித்து விடு!
கண்ணீரோடு
கருவறையில் சுமந்தவள்!
மூச்சிறைக்க
விளையாடிய பாலகனின்
மூச்சோடு விளையாடுகிறாய்!
வளர்ந்த மனிதனின்
அலட்சியங்களுக்கு விலை
பிஞ்சுகளின் உயிரா?
உன்னுள்
இறங்கிய குழந்தை
இறங்கிவிட்டது
கோடி இதயங்களில்!
நாளை
விண்ணில் செல்வான்
மார்தட்டிய தந்தை…
முடங்கிக் கிடக்கிறான்
மண்ணில் குழந்தை!
மண்ணில்
புரண்டு விளையாடியவனை
மண்ணே!
சுருட்டி வைத்திருக்கிறாய்!
பிஞ்சு மூச்சின் ஈரம்
தீண்டவில்லையா
உன் இதயத்தை!
எங்களுக்கு
ஜீவனைத் தருபவனே!
எங்கள்
ஜீவனைத் தந்துவிடு!
தாயோடு உறங்கியவன்
தனித்திருக்கிறான்
சேலைத் தொட்டிலில்
உறங்கியவனுக்கு
பாறைத் தொட்டிலா?
தாலாட்டு பாடிய வாய்
ஓலமும் ஒப்பாரியுமிடுகிறது!
குழந்தைக்கு!
தாயின்
கண்ணீரைத் துடைக்க வேண்டும்
குழந்தையின் கரங்கள்
உயிரோடு!
#savechild #savesurjith
0 Comments
Thank you