♥ஊரில் பல பெண்கள் அழகாய்.. வசதியாய் இருந்தும் உன் கண்களுக்கு என்னை மட்டும் பிடித்திருந்தது.. மணமும் முடித்ததாய்.. இரு பிள்ளைகளுக்கு தாய் ஆக்கினாய்.. உன்னையும் ஆண்மகனாக்கினேன்
♥வருடங்கள் ஓடியது இப்பொழுது என்னை தவிர பிற பெண்களை எல்லாம் உனக்கு பிடித்துப் போகிறது.. ஏன் என்று கேட்டால் ஆணவ பதில்தான்... இதில் தவறேதும் இல்லை என....
♥பெண்ணின் இயலாமை என்பதை தாண்டி பெண்ணின் பலவீனம்.. தன் பெற்றவர்கள் கண்ணில் கண்ணீர் மீண்டும் தன்னால் வர வேண்டாம்.. என்பதால் தான்.. சுமைதாங்கியாக மாறி வாய்மூடி மௌனிக்கிறாள்....
♥தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்காலம்... தந்தையின் நிழல் மீது இருக்கவேண்டும் என்பதால்..இந்த வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்..பல பெண்களுக்கு ...
♥ இறைவனுக்கு பெண்களின் மீது என்ன கோபம்.. பிரசவ வலி தாங்கும் உடலை படைத்தவன்.. எதையும் தாங்காத இளகிய மனதால் பலவீனமாக படைத்தாரே.....
♥தாலிகட்டி ஆரத் தழுவியவன்... அதே கையால் ஓங்கி அடிக்கும் பொழுது தடுக்க கூட இயலவில்லை . .. மனதும் உடலும் அவனுக்கு அடிமையாகி வலி தாங்கியாக மாறிவிட்டது.... மாங்கல்யாத்தால்...
♥இறைவா ஆண்களை பலமாக படைத்ததின் வெளிப்பாடு ஒரு பெண்ணை அடித்து அடக்கி வாழவா... இல்லை நம்பி வந்தவள் நம்பி்க்கை இன்றி ஆண் செய்யும் தவறுகளை கண்டு கொள்ளாமல் குடும்பம் நடத்த வேண்டும் என்றா......
♥ ஆணின் பலம் பெண்ணை காப்பதிலும் ஆணின் தைரியம் சிறப்பாக குடும்பம் நடத்துவதும் தான் என புரியவை இறைவா.. இந்த ஆண்களுக்கு....
♥சுகுணா மித்ரா
0 Comments
Thank you