♥அம்மா
♥“ஊரில், அம்மாவுக்கு உடல் நலமில்லை!’ மன சஞ்சலத்தில் இருந்தாள் சரஸ்வதி! அழைத்து வரலாம் என்றால், ஊரில் இவர் அம்மாவுக்கும் உடல் நலமில்லை!
அதிகப்படியாக ஒரு ஆளுக்கு மேல் வீடும் தாங்காது.
வருமானமும் போதாது.
தன் அம்மா மேல் உயிரையே வைத்திருக்கும் அவரிடம் எப்படிச் சொல்வது, நானும் என் அம்மாவின் மேல் உயிரையே வைத்திருக்கிறேன்’ என்று, நினைத்து வருத்தப்பட்டாள்.
♥காலையில் சங்கர் கிளம்பும் போது, “சரசு! அம்மாவை இங்கே வரச்சொல்லி இருக்கேன்! மதியம் வந்துருவாங்க! பார்த்துக்கோ! நான் சாயிந்திரம் வந்துருவேன்!’ கிளம்பி விட்டான். அவனிடம் கேட்கவும் துணிவில்லை! விதி விட்ட வழி என கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஆட்டோ வந்து நின்றது!
உள்ளிருந்து இறங்கி வரும் தன் தாயை பார்த்து அவளுக்குள் இன்ப அதிர்ச்சி!
♥மாலையில் சங்கரிடம், “உங்க அம்மா தான் வர்றாங்கன்னு நினைச்சேன்…!’ என்றாள்.
“எங்கம்மாவுக்குத்தான் அண்ணன் இருக்காரே! உங்கம்மாவுக்கு நம்மளை விட்டால் யார் இருக்கா!’ என்று சொல்லியவனை அன்போடு அனைத்துக் கொண்டாள்.
- மகேஸ்வரி
0 Comments
Thank you