HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

திருமணத்திற்கு பிறகு வேலை வேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்!

திருமணத்திற்கு பிறகு வேலை வேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்!

நம்பரை மாற்ற வேண்டும் என்றார் மாற்றிவிட்டேன்!

Facebook கூடாதென்றார் நிறுத்தி விட்டேன்!

ஆண் நண்பர்கள் நட்பை தொடரவேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்!

லெக்கின் அணிந்தால் கால் அளவு தெரியுமென்றார் சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

Heels வைத்த செருப்பு கூடாதென்றார், தூர ஒதுக்கினேன்!

ஜாக்கெட்டுக்கு தனியாய் ஜன்னல் வேண்டாம் என்றார் கழுத்துவரை மறைத்து தைத்துக்கொண்டேன்!

உதட்டு சாயம் கூடாதென்றார் ஒன்றும் போடாமல் விட்டுவிட்டேன்!

பார்லர் பக்கம் வேண்டாம் என்றார், பாலாடை தயிரோடு நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய் இருந்து அதன்பின் குழந்தை பற்றி யோசிக்கலாம் என்றார், அதுவரை தவறாமல் மாதந்தோறும் மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும்

அவருக்கு பிடித்ததே சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள் என்று நடுராத்திரி தான் திரும்புவார்!

இரவு ஒரு மணிக்கு Reached ?

என்று பெண் பெயரில் மெசேஜ்!

பொழுது விடிந்ததும் யாரென்று கேட்டேன்,

Ex lover என்றார்!

விட்டுவிடச் சொன்னேன்,

முடியவில்லை என்றார்!

முயன்றால் முடியும் துணைக்கு நானிருக்கிறேன் என்றேன்!

நீயும் அவளும் ஒன்றா என்றார்,

வேறு வேறு தான்,

இது legal அது illegal என்றேன்! அறைந்துவிட்டார்!

தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்,

எனக்காக இது ஒன்றை மட்டும்

விட்டுவிடுங்கள் என்றேன்!

முடியாது it's true love என்றார்!

எனக்கும் கூட true love இருந்தது என்றேன்!

மறைத்ததற்காக ஒரு வாரம் அடித்தார்!

தாங்கிக்கொண்டேன்! ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்

இல்லை!

திரும்பவும் Facebook open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு

ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம் தலைவைத்து படுத்தேன்!

எனக்கு பிடித்ததையும் சமைத்தேன்!

முகநூல் முழுவதும் காதல் கவிதைகளாய் எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,

திரும்பும் போது லேட்டாக வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,

அவ்வப்போது weekend party என்று வெளியே சென்றேன்!

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,

மொபைலுக்கும் laptop க்கும்

Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்

வேலைகளில் முக்கியமான வேலை

என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு தனக்கு மட்டுமே சொந்தம் என்று திருடு போகாமல் காப்பாற்ற

லீவு நாட்களில் கூட அவர் வெளியே போவதில்லை!

எப்படியாவது என் ex lover ஐ கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று என்னைச்சுற்றியே வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால் கண்டுபிடிக்க முடியாது,

காரணம் எந்த ex lover ம் எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே என் அருகாமையில் சுற்றுவார், அவளை விட்டு தூரம் வருவார்! அவளை மறந்து என்னை மட்டுமே நினைக்கும் வரை

எனக்கு ex lover வேண்டும்!.

நீ யாரென்றே தெரியாது என் அன்பு காதலனே,

But I love you darling!! ❤️❤️

சிங்கத் தமிழன் பாண்டியன்.ஏ

Post a Comment

0 Comments