அம்மா!
ரெண்டு கற்பூரம் ஐந்து ரூபா
அண்ணா!
ரெண்டு கற்பூரம் ஐந்து ரூபா
என்று கூவிக் கூவி அந்தக் கற்பூரங்களை ஏறத்தாழ எங்கள் கைகளுக்குள் செருக எத்தனிக்கும் அந்தச் சிறுவர்கள் மீது எரிச்சலும் கோபமும் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. அதிலும் சில இளைஞர்கள் அந்தச் சிறுவர்கள் திணித்த கற்பூரங்களை பெற்றுக்கொண்டு பணம் செலுத்தாமல் தாண்டிச் செல்வர். அந்தச் சிறுவர்களோ அந்த இளைஞர்களைக் கலைத்துக் கலைத்து,
‘அண்ணா! காசு தாங்கோ’
என்பதும், அது முடியாத பட்சத்தில்
‘அண்ணா! கற்பூரத்தையெண்டாலும் திருப்பி தாங்கோ’
என்று கெஞ்சி மன்றாடும் படி அச்சிறுவர்களை அலைக்கழிப்பது, அவ் இளைஞர்கள் மீது நல்லூரான் பார்வையில் பெரும் பாவச் செயலாகும்.
நான்கு கற்பூரங்களை விற்று இச் சிறார்கள் ஏதோ வீடு கட்டி வசதியாக வாழ்ந்துவிடப்போவதில்லை. தம் பெற்றோரின் வருமானக் குறைவை நிவர்த்தி செய்ய பாடசாலை விடுமுறைக்குள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் சிறு வரம்தான் இந்த நல்லூர் திருவிழாக் காலம்.
அவர்களிடம் ஒரு கற்பூரத்தை வாங்க கூட வேண்டாம். குறைந்த பட்சம் அக்குழந்தைகளின் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம். போதிய வயதும் உடல் வலிமையையும் இருந்தும் திருட்டுக்களில் ஈடுபடும் பலருக்கு நடுவில் ஒருசில சில்லறைகளுக்காய் உழைத்து வாழ நினைக்கும் இக்குழந்தைகள் உண்மையில் ‘இறைவனின் குழந்தைகள்‘
சிங்கத் தமிழன் பாண்டியன்.ஏ
0 Comments
Thank you