♥அந்தக்காலம் போல வருமா? அன்றும் இன்றும்...
♥சோறு கண்ட இடம் சொர்க்கமுன்னா... அந்தக்காலம்.
வைஃபை (wifi) கண்ட இடம் சொர்க்கமுன்னா... இந்தக்காலம்.
♥வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நீர், மோர் தருவது... அந்தக்காலம்.
ஸ்மார்ட் போனுக்கு சார்ஜர் தந்து உதவுவது... இந்தக்காலம்.
♥காதலியை காணாதபோது தவித்தது... அந்தக்காலம்.
மொபைல்போன் கையில் இல்லாவிட்டால் தவிப்பது... இந்தக்காலம்.
♥வீட்டை கட்டிப் பார் என்றுச் சொன்னால்... அந்தக்காலம்.
க்ரெடிட் கார்ட் பில்லை கட்டிப் பார் என்றுச் சொன்னால்... இந்தக்காலம்.
♥வேலைக்கு காலையில் போய் மாலை வீட்டிற்கு செல்வது... அந்தக்காலம்.
வேலைக்கு காலையில் போனாலும் வருவது மாலையோ, இரவோ என தெரியாமல் இருப்பது... இந்தக்காலம்.
♥முதுமையை அமைதியோடு கழித்தது... அந்தக்காலம்.
இளமையை நோய்கள், மாத்திரைகளோடு கழிப்பது... இந்தக்காலம்.
♥வீட்டிற்கு ஒரு மரமென வளர்ப்பது... அந்தக்காலம்.
வீட்டிற்காக மரத்தை அழிப்பது... இந்தக்காலம்.
♥பாலும், தேனும் மிகுந்து இருந்தது... அந்தக்காலம்.
பட்டினியால் மக்கள் அவதிப்படுவது... இந்தக்காலம்.
0 Comments
Thank you