HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே & என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள்.!?

♥'சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே'' என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள்.!?
♥பாகுபலி 2. படத்தில் கட்டப்பா மற்றும் பாகுபலியைத் தாண்டி நம்மை ஈர்ப்பவள், தேவசேனா. அப்படி என்ன இருக்கிறது அவளிடம்? அழகு... அறிவு... அதுக்கும் மேல... அவளது அந்தத் துணிச்சலும் அதை வெளிப்படுத்திய விதமும் பெண்மைக்கான புது கருத்தாக்கம். சிவகாமி தேவியாக வரும் ரம்யாகிருஷ்ணனை நேருக்கு நேராய் நின்று கேள்வி கேட்கும் துணிவும் அறிவும்கொண்ட மங்கையாகப் படம் முழுக்க நம்மை எழுந்து நிற்கவைக்கிறது தேவசேனாவின் கதாப்பாத்திரம்.
♥அரசவையில் எல்லோரும் பொறுமையாகவும் நிதானமாகவும் ராஜமாதாவிடம் பேசும்போது, தேவசேனா மட்டும் குரலை உயர்த்திக் கேட்கிறாள். எதிர்த்துக் கேட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒருவரின் முன்பு, யார் செய்தாலும் தப்பு தப்புதானே என்ற தோரணையில் கேட்கும் அந்தத் துணிச்சலை நிச்சயம் பாராட்டலாம்.
,
♥ ''பொன், பொருள் கொடுத்து அடைவதற்கு நான் ஒன்றும் பொருள் அல்ல, பெண்'' என்ற அந்தக் கம்பீரம், ''சம்பந்தப்பட்ட பெண்ணின் விரும்பம் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் அவள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை'' என்கிற சீற்றம், ''கயவன் ஒருவனின் குற்றத்தைக் காட்டிலும், நல்லவன் ஒருவனின் மௌனம் கொடியது என உங்களுக்குத் தெரியாதா'' என்கிற அந்தக் கோபம், ''பெண்களைத் தவறாக அவன் தொட்டான், விரலை வெட்டினேன்'' என்ற அனல் கண்கள், தவறிழைத்தது யாராகினும் கோபப்படுவாள் அவள்.
♥மனதுக்குள் வஞ்சகமும் வன்மமும் கலக்கும் பெண்களையும், ஆண்களுக்கு எதிராகப் பேசுவதையே வீரமாக நினைக்கும் பெண்களையும், காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிடுவதாகக் கூறப்படும் பெண்களையுமே காட்டப்பட்ட வெண்திரையில் தேவசேனா சரியான மாற்று.
,
♥மணாளனாக மனதில் நினைத்த ஒருவன், ''கைதியாக என்னோடு தற்சமயம் வா. எல்லாவற்றையும் சரிசெய்கிறேன்'' என்கிறபோது, ''முதலில் நீ யார் எனச் சொல்'' என்று கோபப்பட்டு, பின்னர் தவறானப் புரிதலை உணர்கிறாள். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். உன்னோடு என்றால் சிறைவாசம்கூட எனக்குச் சரிதான்' என்கிற பெண்ணாக அவள் இல்லை. ''உன் வீரத்துக்குக் கட்டுப்பட்டு உன் பணிப்பெண்ணாகவும் வரலாம். ஆனால், காதலை காரணமாக்கி என்னால் கைதியாக வர இயலாது.
♥என் மரியாதைக்கோ, தன்மானத்துக்கோ இழுக்கு நேருமேயானால், நான் அதனை செய்ய மாட்டேன்'' என்று உறுதியாக நிற்கிறாள். தனக்கான சம உரிமையைக் கெஞ்சவில்லை. நிமிர்ந்த நன்னடையோடும் நேர்கொண்ட பார்வையோடும் கேட்கிறாள். ''இறுதி மூச்சு வரை உன் கற்புக்கோ, மரியோதைக்கோ இழுக்கு வராது'' என உறுதியளித்த பின்னரே பாகுபலியுடன் செல்கிறாள். கைதியாக அல்ல; மனையாளாக. படகில் அவள் ஏறும் அந்தக் காட்சி, ப்பாஆஆஆ.... அவ்வளவு கம்பீர அழகு. ''கட்டப்பாவைப் பத்திரமாக மீட்டு வாருங்கள்'' என வாளைக் கொடுத்து அனுப்புவதெல்லாம், வேற லெவல்!
,
♥இதைப் படிக்கும் பலருக்கும், 'இங்கே தேவசேனா மாதிரி பொண்ணுங்க எங்கே இருக்காங்க?' என்று தோன்றலாம். அவர்களுக்கு ஒரே ஒரு பதில். தேவசேனா புரட்சி நாயகியெல்லாம் இல்லை. அவளைப் போன்றவர்களை நீங்கள் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் வகுப்பில், அலுவலகத்தில், ''சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே'' என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள். தேவசேனா கண்களுக்குத் தெரியலாம்!

Post a Comment

0 Comments