HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பொய் முகம்

♥பொய் முகம்!
♥அம்மாவிற்கு, தண்ணீர் மற்றும் மாத்திரையை எடுத்து வைத்தவள், ''அம்மா... எழுந்து சாப்பிடு. மாத்திரை கொடுத்திட்டு, 'டயபர்' போட்டுட்டு போகணும்... ஏற்கனவே நேரம் ஆச்சு,'' பரபரத்தாள் கவிதா.
தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்த அம்மா, ''ஏண்டி.... என்னைப் போட்டு இப்படி படுத்துறே... அவசரமா சாப்பிட முடியுமா...'' என்று முனங்க, ''நம்ம ரெண்டு பேரோட தலைவிதியும் இப்படி கஷ்டப்படணும்ன்னு இருக்கு... என்ன செய்ய...'' என்றாள் வெடுக்கென!
♥ஒன்றும் பேசாமல், சாப்பிட ஆரம்பித்தாள், அம்மா. பர்சையும், மொபைல்போனையும் மறக்காமல் எடுத்துக் கொண்டாள், கவிதா.
அதற்குள், அம்மா சாப்பிட்டு முடிக்க, மாத்திரையையும், தண்ணீரையும் கொடுத்து சாப்பிட சொல்லியவள், டயபரை
போட்டு விட்டாள்.
''அம்மா... 'டிவி' ரிமோட் பக்கத்தில இருக்கு; பிளாஸ்கில் பால் வைச்சிருக்கேன். பத்திரமா இரு... பூட்டிட்டு போறேன்,'' என்றபடியே, வெளியே நடந்து, வீட்டைப் பூட்டி, பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
♥பஸ் வர நேரமாக, டென்ஷன் அதிகமானது. 'வேலை செய்யும் பங்களா போய் சேர, இன்னும், அரை மணி நேரமாவது ஆகும். நேற்றே ராகவி அக்கா, 'சீக்கிரம் வா'ன்னு சொன்னாங்க; லேட்டா போனா கோபப்படுவாங்களே... இந்த வேலை, நல்லபடியா நிலைக்கணும்; அப்ப தான், அம்மாவ ஓரளவாவது நல்லபடியா கவனிச்சுக்க முடியும்...' என நினைத்தாள். பஸ் வர கூட்டத்தில், அடித்து, பிடித்து ஏறினாள்.
♥பேருந்தை விட்டு இறங்கி, வேகமாக நடந்து பங்களாவை அடைந்து, மாடிப் படியேற, எதிர்ப்பட்டாள், அவ்வீட்டு மருமகள் ராகவி. ''என்ன கவிதா... சீக்கிரம் வான்னு சொன்னா ஏன், கேட்க மாட்டேங்கற... மாற்றுப் பணிப் பெண்ணும் போயாச்சு; நீ வர்ற வரைக்கும், பாட்டியை நான் கவனிக்க வேண்டியிருக்கு... என் வேலை பூரா அப்படியே கிடக்கு,'' என்று எரிஞ்சு விழுந்தபடியே, படியிறங்கினாள் ராகவி.
♥ஒரு நிமிடம், பாட்டி அறை முன் நின்று, தன்னை ஆசுவாசப்படுத்தி, உதட்டில் புன்னகையை வரவழைத்து, அறைக்குள் நுழைந்தாள் கவிதா.
''பாட்டிம்மா... கவிதா வந்திட்டேன்; ராத்திரி நல்லா தூங்குனீங்களா... காலை டிபன் சாப்பிட்டாச்சா... மாத்திரையெல்லாம் போட்டுகிட்டீங்களா,'' என்றபடி, பாட்டியின் அருகில், நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தாள்.
♥''வாடிம்மா... வந்திட்டியா, ஒருநாளாவது சீக்கிரம் வர்றியா... எப்ப பாரு லேட்டாத்தான் வர்ற... ராகவிக்கு, எங்கிட்ட பேச பிடிக்காது; எரிஞ்சு எரிஞ்சு விழுவா... 85 வயசாகியும், ஆண்டவன் என்னை அழைக்க மாட்டேங்கறான். நான் போய் சேந்தா, தூக்கி போட்டுட்டு, அவங்கவங்க வேலைய பாப்பீங்க... ஆண்டவன், தண்டனையா ஆயுச போட்டிருக்கான். நடக்கவும் முடியல; பாத்ரூம் போக கூட, அடுத்தவங்க தயவு வேண்டியிருக்கு,'' என்று பாட்டி புலம்ப, அவளின் கையை, ஆறுதலாக பிடித்துக் கொண்டாள் கவிதா.
♥''ஏன் பாட்டி இப்படி பேசுறீங்க...உங்கள பாத்துக்க நான் இருக்கேன். ராகவி அக்காவுக்கு, நிறைய வேலை, டென்ஷன்; அதனால, கோபமா பேசிருப்பாங்க... அதவிட்டு தள்ளுங்க; நேத்து நைட்டு, ஆஞ்சனேயர் சீரியல் பாத்தீங்களா... ஆஞ்சனேயர் கடலை கடக்கும் போது, ராட்சசி தடுத்தாள், அப்புறம் என்னாச்சு பாட்டி...'' என, ஆர்வமாய் கேட்பது போல கேட்டு, பாட்டியை, 'டைவர்ட்' செய்தாள்.
♥''அத ஏண்டி கேட்கற கனகா,'' என, உற்சாகமாக நேற்று பார்த்த ஆஞ்சனேயர் சீரியலை சொல்ல ஆரம்பித்தார். கவிதாவை வாய்க்கு வந்த பேரைச் சொல்லி கூப்பிடுவது பாட்டியின் வழக்கம் என்பதால், அதைப் பொருட்படுத்தாமல், கதையை கேட்டபடியே, பாட்டியை தூக்கி, சேரில் உட்கார வைத்து, படுக்கையை தட்டி, உதறி, வேறு பெட்ஷீட், தலையணை உறை மாற்றி, திரும்ப பாட்டியை படுக்க வைத்தாள்.
♥'டயபர்' போடுவது, பாட்டிக்கு பிடிக்காத விஷயம்; எனவே, 'பெட்பேன்' வைத்து, சிறுநீரை, 'டாய்லெட்டில்' ஊற்றி, கையை, டெட்டால் போட்டு கழுவினாள். பின், கீழே போய் ஜூஸ் போட்டு எடுத்து வந்து, பாட்டியை தோளில் சாத்தி உட்கார வைத்து, குடிக்க வைத்தாள். அன்றைய பேப்பரை வாசித்து காண்பித்தாள்.
''காஞ்சனா... நாங்க திருச்சில இருந்தப்போ...'' என, பாட்டி பழைய கதைகளை ஆரம்பிக்க, கவிதாவிற்கு அலுப்பாக இருந்தது. ஆயிரம் முறையாவது, இந்த கதைகளை கேட்டு இருப்பாள். தினமும், கேட்டு கேட்டு, சலித்து போயிருந்தாலும், ஆர்வமாக கேட்பது போல, நடிக்க கற்றுக் கொண்டிருந்தாள்.
பாட்டிக்கு உடம்பில் பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. ஒருமுறை கீழே விழுந்ததிலிருந்து, நடக்க முடியாமல் போய் விட்டது. அதற்கு பின், இரவில் ஒரு பெண்ணும், காலையில் கவிதாவும் பாட்டியை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டனர்.
♥கவிதாவுக்கு, அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மாவும், பாட்டியை போலவே நடக்க முடியாமல், படுக்கையில் விழுந்து விட்டவள். நன்றாக இருந்தவரை, உழைக்க அஞ்சியதில்லை, அம்மா. கணவன் கைவிட்டு விட்டு ஓடி விட, தன் ஒரே மகளை கஷ்டப்பட்டு உழைத்து, 'நர்சிங்' படிக்க வைத்தாள்.
திடீரென வந்த விஷக் காய்ச்சல், அம்மாவை படுக்கையில் தள்ளி விட்டது; மூளையில் பாதிப்பு ஏற்பட, அதிலிருந்து மீண்டாலும், நடக்க முடியாமல் போனது. தட்டுத் தடுமாறி, படுக்கையில் மட்டுமே அவளால் உட்கார முடிந்தது. எல்லா பொறுப்புகளையும், அம்மா கவனித்துக் கொண்டதால்,
♥கவலையில்லாமல் இருந்த கவிதாவுக்கு, குடும்ப பொறுப்பு முழுவதும் தலையில் விழுந்தது. ஏதோ இந்த வேலை கிடைத்ததால், கைக்கும், வாய்க்கும் ஓடியது; சொந்த வீடாக போனதால், வாடகை கொடுப்பது மிச்சமானது.
பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத நிலையில், எதிர்காலம் பயமுறுத்தினாலும் தனக்கிருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் பாட்டியை நன்றாக கவனித்துக் கொண்டாள்.
♥பாட்டிக்கு, மதியம் சாப்பாடு கொடுத்து, அவர் சற்று தூங்கியதும், தான் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை, சாப்பிட ஆரம்பித்தாள்.
பாட்டி தூங்கி எழுந்ததும், தூக்கி உட்கார வைத்து, தலைக்கு எண்ணெய் வைத்து, சீவி, ரப்பர் பேண்டு போட்டு விட்டாள். பின், முகத்தை துடைத்து, லேசாக பவுடர் போட்டு, நைட்டியை மாற்றி விட்டாள். ராகவி கொடுத்த டீயை, கொண்டு வந்து கொடுத்து, குடிக்க வைத்தாள். 6:00 மணி ஆகியும், இரவு வரவேண்டிய பெண் வராதது டென்ஷனாக இருந்தது; ராகவியிடம் கேட்கவும், பயமாக இருந்தது.
♥பஸ் பிடித்து போய், காய்கறி கடையில், காய்கறி வாங்க வேண்டும். அம்மாவுக்கு மாத்திரை, 'டயபர்' வாங்க வேண்டும் 'லேட்'டானால் அம்மா டென்ஷனாகி விடுவாள். பக்கத்து வீட்டு அக்காவிடம் சாவி இருப்பதால், கதவை திறந்து, 'லைட்'டை போட்டு, அம்மாவை பார்த்து போவாள். அதுவே, பெரிய ஆறுதலாக இருந்தது கவிதாவிற்கு!
நல்லவேளையாக, இரவு பணிக்கு வரவேண்டிய பெண் வந்துவிட, அவசரமாக கிளம்பி, பஸ் ஏறினாள் கவிதா.
கடைக்கு போனால் நேரமாகி விடும்; அம்மா தனியாக இருப்பாள். காலை ஒழித்து போட்ட பாத்திரங்களை கழுவி, அம்மாவின் துணியை துவைத்து போட்டு, வீடு கூட்டி, மறுநாள் சமையலுக்கு வேண்டியதை தயார் செய்து, நினைக்கவே மூச்சு முட்டியது. அம்மா நன்றாக இருந்த போது, தனக்கு எந்த பொறுப்பையும் கொடுத்ததில்லை என்ற நினைவும், எட்டிப் பார்த்தது.
♥பூட்டை திறந்து, உள்ளே நுழைந்தாள்.
''கவி வந்துட்டியாடி... இருட்டிப் போச்சு; ஏன் இவ்வளவு லேட்டு, 7:30 மணியாச்சு,'' என, அம்மா கூற, ''கவர்னர் உத்தியோகம் பாக்கிறேன் பாரு... வேலை முடிஞ்சதும், கார் தயாரா நிக்கும்; ஏறி, வீடு வந்து சேர,'' எரிச்சலோடு சிடுசிடுத்தாள்.
''மாத்திரை வாங்கிட்டு வந்தியாடி?'' அம்மா கேட்க, ''ஒருநாள் சாப்பிடலேன்னா ஒண்ணும் ஆயிடாதும்மா... வந்து நுழையும் முன்னே, தொணதொணங்கறேயே,'' என கோபமாக கூறியவள், ஹேண்ட்பேக்கை தூக்கி சேரில் வீசி, தொப்பென நாற்காலியில் உட்கார்ந்தாள்.
'வீட்டிலும், முகமூடி அணிய முடியாது; பொய் முகம் கொண்டு, பொறுமையாக பேச முடியாது...' என்ற நிதர்சனம் புரிய, அலுப்போடு, வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
♥தி.வள்ளி

Post a Comment

0 Comments