♥அலுவலகத்தில் பெண்கள், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
♥ இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் ஆண்களோடு இணைந்து வேலை பார்க்கும் சூழல்கள் இருக்கின்றன. ஒரு ஆண்-பெண் நட்புறவு என்பது ஒரு எல்லைக்குட்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் பெருமளவில் பிரச்சனைகள் ஏற்படும்.
♥ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நம் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டாமல், நேர்த்தியாக அணிவது நல்லது.
♥அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்தாலும் மொபைல் நம்பர்களை கொடுக்க வேண்டாம். நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும் மொபைல் நம்பர்களை கொடுக்கலாம்.
♥உங்களுடைய குடும்ப விஷயங்கள், பர்சனல் விஷயங்களை உங்களுடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் சொல்லாதீர்கள். ஏனெனில் அங்கேதான் பிரச்சனைகள் உருவாகும்.
♥நீங்கள் ஆண்களிடம் நட்பு ரீதியாக மட்டும் புன்னகை செய்யுங்கள். காரணமில்லாமல், எல்லாவற்றிக்கும் அவர்களிடம் சிரிக்காதீர்கள். பிறகு கைகுலுக்குதல், தேநீர் அருந்துதல், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லுதல் போன்றவற்றை செய்யாதீர்கள்.
♥உங்கள் மனதில் அலுவலகம் என்பது பணிபுரியும் இடம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளுக்கும், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் இது இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
♥பணிபுரியும் இடங்களில் உங்களிடம் யார் பேசினாலும் கண்ணை பார்த்து பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு சத்தமாக சிரிக்காதீர்கள்.
♥ அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள் குறை சொல்லும் அளவிற்கு உடை உடுத்தாதீர்கள். அது போல் தேவையில்லாத விஷயங்களுக்கு வெட்கப்படாதீர்கள்.
♥எந்தப் பிரச்சனை நடந்தாலும் உடனே அழாதீர்கள். ஏனெனில் சுலபமாக அழும் பெண்களை ஆண்கள் திசை திருப்பி விடுவார்கள்.
♥ஒரு ஆண் உங்களிடம் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதை வைத்துதான் ஒரு பெண் ஆணிடம் எவ்வளவு தூரம் நட்புறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும்.
0 Comments
Thank you