♥மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
மனது கவலைகளைச் சுமப்பதில்லை.
மனது கவலைகளைச் சுமப்பதில்லை.
♥தண்டிக்கத் துடிக்கும் மனிதனின்
மனது நிம்மதியை உணர்வதில்லை.
மனது நிம்மதியை உணர்வதில்லை.
♥குறை கூறித் திரியும் மனிதனின்
மனது நிறைகளைக் காண்பதில்லை.
மனது நிறைகளைக் காண்பதில்லை.
♥நிறை தேடி புகழும் மனிதனின்
மனது மகிழ்வினை மறப்பதில்லை.
மனது மகிழ்வினை மறப்பதில்லை.
♥மகிழ்வூட்ட நினைக்கும் மனிதனின்
மனது இன்பத்தை இழப்பதில்லை.
மனது இன்பத்தை இழப்பதில்லை.
♥புறம் பேசி அலையும் மனிதனின்
மனது இருளினைக் களைவதில்லை.
மனது இருளினைக் களைவதில்லை.
♥துன்பத்தைப் பொறுத்த மனிதனின்
மனது துயரினில் மடிவதில்லை.
மனது துயரினில் மடிவதில்லை.
♥இன்பத்தை வேண்டும் மனிதனின்
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை.
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை.
♥சந்தேகம் நிறைந்த மனிதனின்
மனது சந்தோஷத்தைச் சுவைப்பதில்லை.
மனது சந்தோஷத்தைச் சுவைப்பதில்லை.
♥சஞ்சலம் அற்ற மனிதனின்
மனது சங்கடத்தைச் சந்திப்பதில்லை.
மனது சங்கடத்தைச் சந்திப்பதில்லை.
♥ஆசையை அடக்கும் மனிதனின்
மனது மோசம் போவதில்லை.
மனது மோசம் போவதில்லை.
♥நேசம் கொண்ட மனிதனின்
மனது பாசத்தைத் துறப்பதில்லை.
மனது பாசத்தைத் துறப்பதில்லை.
♥உதவிட நாடும் மனிதனின்
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை.
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை.
♥கொடுத்திட நினைக்கும் மனிதனின்
மனது கெடுதியில் வீழ்வதில்லை....
மனது கெடுதியில் வீழ்வதில்லை....
♥துஷ்டத்தை நாடும் மனிதனின்
மனது கஷ்டத்தைக் களைவதில்லை....
மனது கஷ்டத்தைக் களைவதில்லை....
♥ஆறுதல் சொல்லும் மனிதனின் மனது அவதியில் அழுவதில்லை....
♥பெருமையைத் தவிர்த்த மனிதனின்
மனது சிறுமையில் வீழ்வதில்லை....
மனது சிறுமையில் வீழ்வதில்லை....
♥பொறுமையாய் இருக்கும் மனிதனின்
மனது வெறுமையைக் காண்பதில்லை....
மனது வெறுமையைக் காண்பதில்லை....
♥இலட்சியம் கொண்ட மனிதனின் விழிகள் இமைகளை மூடுவதில்லை
பொழுதினைப் பாழ்படுத்தும்மனிதன்
என்றும் உருப்படுவதில்லை.....
பொழுதினைப் பாழ்படுத்தும்மனிதன்
என்றும் உருப்படுவதில்லை.....
♥சிந்திக்கத் தவறிய மனிதனின்
மனது அமைதியில் நிலைத்ததில்லை.....
மனது அமைதியில் நிலைத்ததில்லை.....
♥நல்லெண்ணம் கொண்ட மனிதனின்
மனது மரணித்து விடுவதில்லை.....
மனது மரணித்து விடுவதில்லை.....
♥இறையச்சம் உள்ள மனிதனின்
மனது பிற அச்சம் கொள்வதில்லை....
மனது பிற அச்சம் கொள்வதில்லை....
♥இதை உணர்ந்து கொண்ட மனிதனின்
மனது என்றும் அழிவதில்லை !
மனது என்றும் அழிவதில்லை !
♥ அன்பழகி கஜேந்திரா _ இலங்கை _மன்னார்.
0 Comments
Thank you