HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சித்தி

சித்தி!
♥''என்னங்க... அவங்க போன் செய்திருந்தாங்க,'' என, தோசையை தட்டில் போடும் போதே, விஷயத்தையும் காதில் போட்டாள் லாவண்யா.
''யாரு போன் செய்தாங்க?' என்று, 'டிவி'யில் இருந்து கண்ணை விலக்காமலே கேட்டான் ஸ்ரீநாத்.
''உங்க சித்தி தான்!''
சட்டென்று, 'டிவி'யின் சத்தத்தை குறைத்து, அவளை முறைத்து, ''உன்னை யாரு போனை அட்டென்ட் செய்யச் சொன்னது?''
''அட்டென்ட் செய்யாம, போன் செய்றது யாருன்னு கண்டுபிடிக்கிற வித்தைய, நீங்க எனக்கு கத்துத் தரலயே...'' என்றாள்
நக்கலாக!
♥''முதல்ல அந்த லேண்ட் லைனை கட் செய்யணும்... ஆமா எதுக்கு போன் செஞ்சாங்களாம்?''
''உங்களையும், உங்க தங்கச்சியையும் பாக்கணும் போல இருக்காம்... முடிஞ்சா, காஞ்சிபுரம் வந்துட்டு போகச் சொன்னாங்க,'' என்றாள் லாவண்யா.
''எங்க மேல பாசம் இருக்கிற மாதிரி அவங்க நடிக்கிறத நம்பறதுக்கு, நான் என்ன விரல் சூப்புர பப்பாவா... எப்படியோ ஒழியட்டும் விடு! நீ போயி தோசையை ஊத்து,'' என்றான்.
♥அவனின் அலட்சியமான பதில், லாவண்யாவுக்கு எரிச்சலாய் இருந்தது. அவளுக்கு சீதாவின் மீது பிரியம் இல்லை என்றாலும், 30 வயதைக் கடந்ததற்கான பக்குவம் அவளுக்கு வந்திருந்தது.
நகர்ந்தவளைப் பார்த்து, ''டாக்டர பாத்தியா?'' என்று கேட்டான்.
உடனே, கண் கலங்க, ''கடவுள் மேல நம்பிக்கை வைங்கன்னு சொல்றாரு; எனக்கு எந்த நம்பிக்கையும் வரமாட்டேங்குது,'' என்றாள் வெறுமையாக!
''பொறுமையா இருப்போம் லாவி... நமக்கு வேற வழி இல்ல,'' என ஆறுதலாய் சொல்லி, கை கழுவ எழுந்து போனான். அப்போது, அவனுடைய மொபைல்போன், 'நமசிவாய... நமசிவாய... ஓம் நமசிவாய...' என்று நமச்சிவாயன் நாமம் கூறியது. தொடுதிரையில் பளிச்சிட்ட பேரை பார்த்து, ''ஏங்க... உங்க தங்கச்சி கிட்டயிருந்து போன்,'' என்றாள்.
'
♥'நீ தான் எடுத்து பேசேன்; நான் கை கழுவிட்டு வந்துடறேன்,'' என்றான்.
''ஐயா சாமி... எனக்கெதுக்கு வம்பு... அவ என்னமோ பாசமலர் அண்ணனையும், தங்கச்சியையும் பிரிச்ச மாதிரி ஆடுவா,'' என போனை, அவன் கையில் கொடுத்து, நகர்ந்தாள்.
''சொல்லுடா... எப்படி இருக்கே?'' என, நாபிக் கமலத்தில் இருந்து புறப்பட்ட அன்பை, தொண்டைக்குழி வழியாக அலைப்பேசியில் கக்கினான்.
♥அவளும், சித்தியை பற்றியே பேசினாள்; ஸ்ரீக்கு எரிச்சலாக இருந்தது.
''நந்துமா... அவங்க ஏன் இப்படி செய்றாங்கன்னு தெரிய மாட்டேங்குது... காஞ்சிபுரத்துல இருக்கற சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் போயி, நாம அவங்கள கை விட்டுட்டுதா சொல்லி அழறாங்களாம். அவங்க எனக்கு போன் செஞ்சு கேட்குறாங்க,'' என்றான் கோபமாக!
''அதை விடுண்ணே... அடாப்ஷன் விஷயமா இங்க ஒரு ஆர்பனேஜ்ல பேசியிருக்கேன். அவங்க உன்னை வந்து பாக்க சொன்னாங்க. அண்ணிகிட்டே பேச பயமா இருக்கு; வேணா பாருங்க... தத்து எடுக்கிற நேரம், நிஜமாவே உங்களுக்கு குழந்தை பிறக்கப் போகுது,'' என ஆறுதல் சொல்லி, போனை வைத்தாள்.
♥ஸ்ரீநாத்துக்கு தொண்டைக்குழியில் துக்கம் அடைத்தது. குறையில்லாத வாழ்க்கை, அழகான மனைவி, எந்த சமரசமும் செய்யாமல் கிடைத்த அரசு வேலை, நோயில்லாத ஆரோக்கியம், ஆரம்பத்தில் தன்னை நினைத்தே கர்வப்பட்டான் ஸ்ரீநாத். ஆனால், தள்ளி நின்ற விதி, அவனை பார்த்து சிரித்தது இப்போது தான் புரிந்தது. 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை; வெறுமனே தினம் எழுந்து, வேலைக்கு போயி, வீட்டில், 'டிவி' பார்த்து... துளியும் சுவாரசியம் அற்றதாய் வாழ்க்கை போனது.
♥''ஸ்ரீநாத்... காஞ்சிபுரம் பிரான்ச் ஆபிசுக்கு இன்ஸ்பெக் ஷன் போயி ரிப்போர்ட் தரணும்; என் மனைவிக்கு அம்மை போட்டதால, நான் போக முடியாது; நீ போக முடியுமா,'' என, தாமோதரன் கேட்ட போது, ஸ்ரீநாத்துக்கு அப்படியே சித்தியை பார்த்து விட்டு வரலாம் என்ற யோசனை எட்டவில்லை. லாவண்யாவிடம் சொன்ன போது, அவள் தான் அந்த யோசனையை சொன்னாள்...
''ஏங்க... நீங்களும் இப்படி பிடிவாதமாய் இருந்தா எப்படி... அவங்களும் எத்தனை பேர் கிட்ட தான் சொல்லி அனுப்புவாங்க... இத சாக்கு வச்சாவது அவங்கள இந்த முறை பாத்துட்டு வந்துடுங்களேன்,'' என்றாள்.
அவள் சொன்னதிலும், அர்த்தம் இருப்பதாய் தோன்றியது. பார்த்து விட்டு வர முடிவு செய்தான்.
♥பிரான்ச் ஆபிசில் மூன்று மணி நேரம் தான் வேலை இருந்தது. வேலை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி, நேராய் காமாட்சி அம்மன் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் முடிந்த பின், சிறிது நேரம் சன்னிதியில் உட்கார்ந்தான். மனம் பழைய நினைவுகளில் ஆழ்ந்தது.
கோவிலில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் இவர்கள் வீடு. இன்று, அந்த வீட்டை ஆண்டு அனுபவிப்பது சீதா சித்தி. மீண்டும் அந்த வீட்டிற்கு போகிறோம் என்ற நினைப்பே மனசுக்குள் இனம் தெரியாத பதட்டத்தை உண்டாக்கியது.
♥வீட்டு வாசலில் இருந்த மரக்கேட்டை திறந்ததும், மா பிஞ்சின் வாசனை நாசிக்குள் புகுந்தது. இவன் நட்டு வைத்த மரம். நடுநாயகமாய் கிளை பரப்பி, இவனுக்காக இலை தூவி வரவேற்றது.
கேட்டின், 'க்ரீச்' சத்தம் கேட்டு, வெளியே எட்டி பார்த்தாள் சீதா. ஸ்ரீநாத்தை பார்த்ததும், சித்தியின் முகத்தில் ஆனந்தம்.
''ஸ்ரீ... வா வா... எப்படி இருக்கே... நந்தினி, லாவண்யா வரலியா?'' என்று கேட்டாள்.
இவன் வந்த வேலையை சொன்னான். தொழுவத்தில் நின்ற மாடுகள், இவனைக் கண்டதும், 'மா...' வென்று குரல் எழுப்பியது. பக்கத்தில் சென்று வாஞ்சையாய் வருடிக் கொடுத்தான்.
♥குவளை மோரை குடித்ததும், அடிவயிற்றின் வெப்பம் கொஞ்சமாய் குறைந்தது.
இவனுடன் பேசிக் கொண்டே, இவனுக்காக சமைக்க துவங்கினாள் சித்தி.
சித்திக்கும், இவனுக்கும், 15 வயது தான் வித்தியாசம். இத்தனை நாளாய், இவன் மனதில் பொத்தி பொத்தி வைத்திருந்த கேள்விகளை, இன்று கேட்டு விடலாமா என்று நாவு துடித்தது.
அம்மா இறந்த இரண்டு ஆண்டிற்கு பின், சித்தியை திருமணம் செய்தார் அப்பா. அப்போது, ஸ்ரீக்கு 12 வயது; ஆறாவது படித்தான். முதல் பார்வையிலேயே, ஸ்ரீக்கு சித்தியை பிடிக்கவில்லை. அம்மாவை விட சித்தி அழகுதான்; இருப்பினும், அம்மா என்ற உறவாலேயே, அம்மா பேரழகியாக அவனுக்கு தோன்றினாள்.
♥'ஸ்ரீ... நான் ராத்திரி, பகல்ன்னு இல்லாம வேலைக்கு போயிடறேன். உன்னையும், நந்தினியையும் உங்க அம்மா இடத்துல இருந்து கவனிக்க ஆள் வேண்டாமா... சீதா சித்தி ரொம்ப நல்லவங்க; உங்கள நல்லா பாத்துப்பாங்க...' என்றார் அப்பா.
பட்டு வேஷ்டி சட்டையில், அப்பாவை மாப்பிள்ளை கோலத்தில் பார்த்த போது, அவனுக்கு அழுகை பீறிட்டு வந்தது.
ஏதுவும் பேசாமல், அம்மா படத்திற்கு முன் நின்று, கதறி அழுது, ஆர்ப்பாட்டம் செய்தது, இன்னும் நினைவில் இருக்கிறது. அன்றிலிருந்து அப்பா இறக்கும் வரை அவன், அவரிடம் பேசவே இல்லை.
''என்ன ஸ்ரீ... பழைய ஞாபகமா?'' என்று கேட்டு, புன்முறுவலுடன் இலை போட்டாள் சித்தி.
♥''ம்... ஞாபகம் மட்டும் பழசாகி இருக்கு. ஆனால், அந்த ஞாபகம் தந்த வலியும், கோபமும் அப்படியே தான் இருக்கு,'' என்றான் சோற்றை பிசைந்தபடி!
அவன் முகத்தையே கூர்ந்து பார்த்தாள் சித்தி.
''சரி இப்போ கேட்கிறேன்... உங்களுக்கு, அப்போ ஒண்ணும் அவ்வளவு வயசு ஆயிடல. அப்படி இருக்க, எங்கப்பாவ ஏன் ரெண்டாம் கல்யாணம் செய்துக்கிட்டீங்க?'' சித்தியின் கண்களை பார்த்துக் கேட்டான்.
''வறுமை; அந்த வறுமையையும், வயசையும் காரணமாக்கி, யாரும் என் வாழ்க்கைய சீரழிச்சிடாம இருக்க, எனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது,'' பட்டென்று சித்தி பதில் தந்ததும், ஸ்ரீயின் உள்ளங்கால்கள் மெல்ல சில்லிட்டது.
♥''ஸ்ரீ... நான் சொல்றத புரிஞ்சுக்கிற வயசில, அன்னைக்கு நீ இல்ல; இப்ப வயசும், அனுபவமும் உனக்கு, அந்த பக்குவத்தை தந்துருக்குமான்னும் தெரியல. ஆனாலும் சொல்றேன்... ரெண்டாம் தாரம்ன்னாலே, ரெண்டாம் தரம்ன்னு ஆகிப்போன, எத்தனையோ பெண்களின் மனக்குமுறல்ன்னு கூட வைச்சுக்கயேன்...
''நமக்கும் கல்யாணமாகும், ஒரு குடும்பம் அமையும்ன்னு கனவோட வாழ்ற சராசரி பொண்ணாத்தான் நானும் இருந்தேன். ஆனா, என் வறுமையான குடும்ப சூழல், திருமணமான ஒருத்தரை கல்யாணம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
♥''இந்த கல்யாணத்துக்காக, உங்கப்பா போட்ட முதல் கன்டிஷன் என்ன தெரியுமா? உனக்குன்னு குழந்தைக பெத்துக்க கூடாது; உன்னையும், நந்தினியையும் என் குழந்தைகளா ஏத்துக்கணும்ன்னு சொன்னார். ஆனா, நீங்க என்னை ஏத்துப்பீங்களான்னு அவர் சொல்லவே இல்ல. ஒரு தகப்பனா, அவர் உங்களுக்கு நியாயம் செஞ்சுட்டார். ஆனா, நானும் ஒரு மனுஷி; அவருக்கு பின் நான் என்னாவேன்னு அவர் சிந்திக்கவே இல்ல,'' கடைசி வார்த்தையை சொன்னபோது, அவளின் தொண்டை அடைத்தது.
இலையை மூடி, கை அலம்பிவிட்டு வந்து அமர்ந்தவன், 'சொல்லுங்க' என்பது போல் பார்த்தான்.
♥''எண்ணி, 10 ஆண்டுக கூட, உங்கப்பா என்கூட வாழல... அவர் போன கையோட உன்னையும், நந்தினியையும், உங்க தாத்தா, பாட்டி கூட்டிட்டு போயிட்டாங்க. எந்த தனிமைக்கு பயந்து, நான் உங்கப்பாவ கல்யாணம் செய்துகிட்டனோ, அந்த தனிமையே எனக்கு வாழ்க்கையின்னு ஆயிடுச்சு,''என்றாள் விரக்தியாக!
''உங்களுக்கு, எங்கப்பா செஞ்ச துரோகம் தான், நான் பிள்ளை இல்லாம கஷ்டப்படறேன்னு சொல்ல வர்றீங்க... அப்படித்தானே...'' என்றான் அடிபட்ட குரலில்!
மளுக்கென்று சித்தியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
♥''இப்பக் கூட என் வலி உனக்கு புரியல பாத்தியா... உன் வயசு, உனக்கு அந்த பக்குவத்தை தராதது துரதிர்ஷ்டம். நான் கோர்ட்ல, சண்டை போட்டு இந்த வீட்டை ஏன் வாங்கினேன் தெரியுமா... உங்கப்பா, இந்த வீட்டை காமிச்சுத்தான், என் வறுமைய விலை பேசினார். என் பிள்ளைகள், இனி உன் பிள்ளைகள்ன்னு அவர் சொன்ன சொல் நிறைவேறல; வீடும், இந்த தனிமையும் தான், இந்த கல்யாணத்தால நான் அடைஞ்ச பலன்,''என்று கூறி, முழந்தாளில் முகம் புதைத்து, விம்மி விம்மி அழுதாள் சித்தி.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. ஏதோ தவறு செய்து இருக்கிறோம் என்று மட்டும் தெரிந்தது.
♥''ஏன் ஸ்ரீ... நீ தத்து எடுக்க போறதா கேள்விப்பட்டேன். உனக்கும் எதிர்கால பயம் இருக்கிறதால தானே ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கணும்ன்னு நினைக்கிறே... அந்த குழந்தை உன்னையும், லாவண்யாவையும் பெத்தவங்களா ஏத்துக்கும்ன்னு நம்பற... அந்த நம்பிக்கையில் தானே நானும் இங்க வந்தேன்; என்னை மட்டும் ஏன் நீங்க ஏத்துக்கல?
♥''சத்தியமா அம்மாவுடைய இடத்துக்கு வர்ற பொண்ணை அம்மாவா ஏத்துக்க முடியாதுதான். ஆனா, இது எல்லாம் தெரிஞ்சே அந்த இடத்திற்கு வர்ற பொண்ணோட சூழ்நிலைய, அவளோட தனிப்பட்ட வலிய நினைச்சு, அவளை மதிக்கலாம் இல்லயா...'' என்று கேட்ட போது, சிலையாய் சமைந்து போனான் ஸ்ரீ.
சித்தி என்ற உறவை, உலகம் சித்தரித்திருந்த பார்வை வேறு. ஆனால், சித்தி என்ற மனுஷி, தன் உலகத்தில் இழந்தது குறித்து, அவளைத் தவிர, யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டிருக்க முடியுமா?
ஐந்து நிமிடம், 10 நிமிடம் என, நேரம் ஓடியது. தரையை பார்த்தபடியே அமர்ந்து இருந்தான் ஸ்ரீ.
♥''ஏதோ ஆற்றாமையில பேசிட்டேன்ப்பா, தப்பா எடுத்துக்காதே,'' தாழ்மையான குரலில் சொன்னாள் சித்தி.
''மன்னிப்புக்கு இங்கே இடமே இல்ல சித்தி. ஒரு குழந்தைய தத்தெடுக்க ஆர்வமாய் இருக்கிற என் சுயநல மனசுக்கு, ஒரு தாயை தத்தெடுக்கணும்கிற சராசரி விஷயம் உரைக்கவே இல்ல பாத்தீங்களா...
''ஒரு மகனுக்குண்டான கடமைய செய்யவே தயங்குற எனக்கு, ஒரு தகப்பனாக தகுதி ஏது? இப்போ சொல்றேன்... நான் அடுத்த வாரம் இங்க வர்றேன். நீங்க ரெடியா இருங்க, உங்கள அழைச்சிட்டு போகப் போறேன். இங்க நீங்களும், அங்க நாங்களும் தனிமையில கஷ்டப்படாம, சேர்ந்து சந்தோஷமா இருக்கலாம்,'' என்றான்.
இதைக் கேட்டதும், சித்தியின் கண்கள் குளமாகின. இத்தனை வயதுக்கு பின், முதல் குழந்தையை பெற்றெடுத்த பூரிப்பில், மனம் நெகிழ்ந்தாள்.
♥எஸ்.பர்வின்பானு

Post a Comment

0 Comments