♥தேடிக்கொண்டே இருக்கிறாள்
அவளுக்குள்ளே
அவளைத் தேடுகின்றாள்..
♥சொல்ல முடியா உணர்வுகள்...
வண்ணம் கலைந்த எண்ணங்கள்...
முன்னேற முடியா கலாசாரங்கள்...
முட்டுக்கட்டை போடும் சம்பிரதாயங்கள்...
அவள் அறை முழுதும் நிரவியே கிடக்கின்றது.
♥அத்தனையையும் தகர்த்துக்கொள்ள
ஓர் "அவள்" வேண்டும்...
"அவள்" அற்ற அவளை
பிய்த்தெறிகிறது அவளுக்குள் ஓர் ஆன்மா.
அவளை வலிமையாக்கி
இயங்க செய்ய போராடுகிறது
அவளுக்குள் இன்னொர் ஆன்மா.
எப்போதாவது எட்டிப்பார்க்க மாட்டாளா..?
"அவள்" என்ற ஏக்கத்தோடு...!
♥ஒர் பெண்
சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
மரபு வேலிகளைத் தாண்டி
வந்துவிட மாட்டாளா....???
சிதிலமாய் போன ஒவ்வொரு
பெண் வாழ்விலும்,
ஓர் சாதக விடியலைக் காண
மாட்டாளா....??
♥கடந்துபோன யுகங்களில்
தொடர்ந்து வந்த சில பல
விலங்குகளை உடைத்திட
எண்ணி,
தனக்குள் இருந்து தானே
புறப்படமாட்டாளா...??
இம்மையிலும் மறுயைிலும்
ஏற்றம் ஒன்றைக் காணத் துடிக்கும்
"அவள்"
ஒவ்வொரு பெண்ணுக்குளிருந்தும்
புறப்பட மாட்டாளா...?
♥பெண் என்றால்
பூவல்ல..
புரட்சியுமல்ல...
தேவதையுமல்ல...
தெய்வமுமல்ல...
பெண் என்றால் பெண்ணே...
தன் பாதையை தானே
செதுக்கத் தெரிந்தவள்...
♥இதை பிறர் உணர அவள் வேண்டும்.
அவள் வெளிப்பட வேண்டும்...
இதையுணர்ந்தால்
பெண் அடிமையுமல்ல
பிறர் உடமையுமல்ல.
♥#சங்கரி_சுவீட்சர்லாந்
உலகத்தமிழ் மங்கையர் மலர்
0 Comments
Thank you