#தாய்மையும்_ஒன்பது_மாதங்களும்
♥ஒரு பெண் தனது முழு உடலையும், உயிரையும் தியாகம் செய்து, படு பயங்கரமான வலிகளை தாங்கிக்கொண்டுதான் பிள்ளையை பெற்றெடுக்கிறாள். கருவுறுதல் பத்து மாத காலம் என்று கூறினாலும் அது ஒன்பது மாதம் , ஒவ்வொரு மாதத்திலும் அவளது ஒவ்வொரு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கொடுமையான வலி நலிகளை சுகமாக மாற்றிக்கொள்கிறாள். எல்லாம் நமக்காக, குழந்தைகளாகிய நமக்காக மட்டுமேதான்.
♥#முதல் மாதம்:
கருத்தரித்து முதல் மாதம் தாயின் உடலில் பித்தம் அதிகரிக்கும். அடிவயித்றுப் பகுதியில் இனம்புரியாத உணர்வுகள், வலிகள் உண்டாகும். பித்தத்தால் வாயுத்தொல்லை உண்டாகும்.
♥#இரண்டாம் மாதம்:
உடல் முழுவதும் வாயுப் பிரச்சினைகள் ஏற்படும். உடல் முழுக்க வலி உண்டாகும். வயிற்றில் கடுகடுவென வலி ஏற்படும்.
♥#மூன்றாம் மாதம்:
கருப்பை பலவீனம் அடைவது போல தோன்றும். வயிறு வீக்கம் உண்டாகும். அடிவயிற்றில் கவ்விப் பிடிப்பது போன்ற உணர்வுகள் ஏற்படும்.
♥#நான்காம் மாதம்:
மிக முக்கியமான மாதம் இது. உள்ளே இருக்கும் கருவில் குழந்தையின் உடல் உறுப்புகள் தோற்றம் ஆரம்பிக்கும் மாதம். சில நேரங்களில் கருப்பையில் இருந்து ரத்தம் கூட வெளியேறும். கருவை மிக மிக ஜாக்கிரதையாக அம்மா பாதுகாத்துக் கொள்ளும் நேரம்.
♥#ஐந்தாம் மாதம்:
இந்த மாதத்தில் குழந்தையின் இதயம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தோன்றும் என்பதால் கருப்பை தொடர்பான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும்.
♥#ஆறாம் மாதம்:
இம்மாதத்தில் தாய்மார்களுக்கு குடல்வால், நீர் சுளுக்கு, கருப்பை அலர்ஜி ஏற்படும். அல்லது உள்ளுறுப்புகளில் நலி ஏற்படுவது போல கொடுமையான உணர்வு ஏற்படும்.
♥#ஏழாம் மாதம்:
ஏழாம் மாதத்தில் இதர சில பிரச்சினைகளுடன், வயிறு வலித்துக்கொண்டே இருக்கும். உள்ளிருக்கும் குழந்தை ஓரளவு வளர்ச்சி பெற தொடங்கியிருக்கும் காலம்.
♥#எட்டாம் மாதம்:
இம்மாதத்தில் தாய்மார்களின் கைகள், கால்கள் மிகுந்த அசதி அடையும். உடல் ரீதியாக பலவீனம் அடைவார்கள்.
♥#ஒன்பதாம் மாதம்:
கடந்த எட்டு மாதங்களில் யாரும் அனுபவிக்காத வலி, நலிகளை அனுபவித்து வந்த கர்ப்பிணிகளுக்கு ஒன்பதாம் மாதத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே மிகுந்த ஜாக்கிரதையுடன் நம்மை அவள் பாதுகாத்து சுமந்திருக்க வேண்டும். குழந்தை பரிபூரணமாக வளர்ச்சி அடைத்திருக்கும். வயிறு பெரிதாக வீங்கியிருக்கும் என்பதால் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்வார்கள். அடிவயிறு வழக்கத்தை விட சற்று தளர்ந்து இறங்கியிருக்கும். ஒன்பதாம் மாத முடிவில்தான் குழந்தை பிறக்கும்.
♥இந்த ஒன்பது மாத வலிகளை விட, வேதனைகளை விட குழந்தை பிறக்கும்போது வருகிற வலியை அவள் தன் ஜென்மத்திலும் அனுபவித்திருக்க மாட்டாள். உடலில் உள்ள எலும்புகளை எல்லாம் உடைத்தால் எப்படி பயங்கரமாக வலிக்குமோ அவ்வளவு வலிகளையும் சுகமாக மாற்றிக்கொண்டு, அவற்றை தாங்கிக்கொண்டு நம்மை இவ்வுலகிற்கு சிரித்த முகத்துடன் வரவேற்பாள் நம் தாய்.
♥இதனால்தான் நமது மூதாதையர்கள் பெண்களை மதிக்கச் சொன்னார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று பெண்ணியம் பேசுவதெல்லாம் உரிமைகளுடன் வேண்டுமானால் நின்று கொள்ளலாம். ஆனால் உணர்வியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் ஒரு ஆண் ஒரு பெண்ணை வென்று விட எந்த யுகத்திலும் முடியவே முடியாது.
♥இதுதான் பெண்களுக்கு இயற்கை தந்திருக்கக் கூடிய சாகாவரம், சஞ்சீவினி மந்திரம், மாபெரும் சக்தி. இதனால்தான் பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா என பாடினான் மீசைக்காரக் கவிஞன். பெண்களையும், தாயையும் போற்றி வாழ்வோம்.
0 Comments
Thank you