♥பூமியின் மாற்றம் பூகம்பம் - மழை
நீரின் மாற்றம் பெரு வெள்ளம்
காற்றின் மாற்றம் சூறாவளி
கடலின் மாற்றம் சுனாமி !
♥தீயின் மாற்றம் எரிமலை
திடீர் மாற்றங்கள் பேரழிவு
திட்டமிடாத மாற்றம் நிலைப்பதில்லை
தீர்க்கமான மாற்றத்தில் குழப்பமில்லை !
♥இயற்கையின் மாற்றம் அபாயம்
இயல்பான மாற்றமே யதார்த்தம்
அமைதியின் மாற்றம் ஆபத்து
அழகிய மாற்றமே அற்புதம் !
♥மாற்றம் எம்மில் வரவேண்டும் - நாம்
மாறிக் காட்டும் வரம் வேண்டும்
மாயை களைந்தெழ வேண்டும்
மனதில் உறுதி எடுக்க வேண்டும்!
♥சரியை சரியாய் புரிந்துகொள்ள...
பிழையைப் பிழையென பிரித்தறிய...
உள்ளத் தெளிவு வேண்டும் - பயத்தை
உதறித்தள்ள வேண்டும்!
♥நாவில் நளினம் வேண்டும்
நடத்தை மாற வேண்டும்
நல்ல நல்ல மாற்றம்
நானிலம் முழுதும் வேண்டும்!
♥நீ மாறு என்ற ஏவலில் -நிஜ
மாற்றம் என்பது அசாத்தியம்
நான் மாறுவேன் என்ற உறுதியில் -நல்ல
மாற்றம் என்றும் சாத்தியம்!
♥#அன்பழகி_கஜேந்திரா_இலங்கை
உலகத்தமிழ் மங்கையர் மலர் - பிரான்ஸ்
0 Comments
Thank you