♥சுமங்கலி பூஜை செய்வது எப்படி?
♥திருமணமான சுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும், இல்லத்தின் அமைதி மற்றும் சந்தோஷத்திற்காகவும் கட்டாயம் சுமங்கலி பூஜையை வீட்டினில் செய்ய வேண்டும்; மேலும் சுமங்கலிப் பூஜைகளில் கலந்து கொள்ளல் வேண்டும். இந்த பூஜை செய்ய மிகுந்த செலவுகள் ஆகும் என்பதெல்லாம் இல்லை; மிகக்குறைந்த செலவிலேயே உங்கள் வசதிக்கேற்றாற் போல் பூஜை நடத்தலாம். ஆகையால், தோழியரே! சுமங்கலிப்பூஜை ஏன் செய்ய வேண்டும் என அறிமுகப் பகுதியிலேயே அறிந்து கொண்டோம்.., இனி பூஜையை செய்வது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!
#எப்படிசெய்வது?
♥இல்லத்தை நன்கு தூய்மைப்படுத்தி, மாவினால் அழகுக்கோலமிட்டு, வீட்டில் எங்கும் மாவிலை தோரணம் கட்டி இல்லத்தை நன்கு அழகுபடுத்த வேண்டும்; மேலும் வீட்டிலுள்ள அனைத்து சுவாமியின் படங்களுக்கும் பூ மற்றும் தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 எனும் எண்ணிக்கையில், அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில் பக்கத்து வீட்டு அல்லது தோழி பெண்களை அழைக்கலாம்; நம் இல்லத்திற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைத்து, உபசரிக்க வேண்டும்.

♥இல்லத்திற்கு வருகை தந்த பெண்கள், தேவியின் வடிவங்கள் என எண்ணி, நல்ல முறையில் வரவேற்று, ஒரு தாம்பாள தட்டில் அவர்களை நிற்க வைத்து நீங்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும் .
குங்குமம், சந்தனம், மலர்கள் போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்து, பெண்களை மனையில் மரியாதையுடன் அமரச் செய்ய வேண்டும். வருகை தந்த ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாகக் கருதி, அவர்களுக்கு தீபாராதனை செய்து வழிபடல் வேண்டும்.

♥அவர்களை தனித்தனியாக நமஸ்காரம் செய்து வணங்கி, அவர்களுக்கு புடவை, ரவிக்கை, கண்ணாடி, குங்குமச்சிமிழ், மஞ்சள், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை போன்றவற்றை கொடுக்க வேண்டும். இவற்றில் எவை உங்களால் முடியுமோ, அதை வாங்கி கொடுத்தால், போதுமானது..! ஆனால், பெண்களுக்கு தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும்.
பூஜைக்கு வரும் பெண்களுக்கு கட்டாயம் உணவு அளிக்க வேண்டும்; வருகை தந்த பெண்கள் உண்ட பிறகே, இல்லத்தலைவி உண்ண வேண்டும்; மீண்டும் ஒருமுறை, வருகை தந்த அனைத்து பெண்களையும் காலில் விழுந்து வணங்கி, அவர்களை வழியனுப்ப வேண்டும்.

♥இப்பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி. இத்தினங்களில் ராகு காலமில்லாத எந்நேரமும் நல்ல நேரமே. இப்பூஜை செய்யப்படும் வீட்டினில் வறுமை, துன்பம், நோய், தோஷம் போன்றவை நீங்கி, மனைவி கணவனுடன் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடும் வளமோடும் அத்தம்பதியர் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அது மட்டுமல்ல, இவ்வைதீகத்தில் பக்தியும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் இருக்கிறது
அது மட்டுமல்ல, இவ்வைதீகத்தில் பக்தியும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் இருக்கிறது
0 Comments
Thank you