HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ராவணன் எப்போது வெல்லப் பட்டான்?

♥ராவணன் எப்போது வெல்லப் பட்டான்?
♥ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானம் ஏறி பவனி வந்து கொண்டிருந்தான். அது அவனது அண்ணன் குபேரனுடையது . இப்படி அவன் பவனி வரும் வேளையிலே கைலாய பர்வதம், அவன் வழியில் தடையாக வந்தது. உடன் விமானத்தில் இருந்து குதித்த ராவணன், தனது இருபது கைகளாலும், கைலாயத்தைப் பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை அசைத்தும் விட்டான். (பின்பு முக்கண் முதல்வன் தனது கால் கட்டை விரலை, கைலாய பர்வத்தில் வைத்து அழுத்த,  அவன் அங்கு சிக்குண்டு இடர் பட்டதும் பின்பு ஈசன் அருளால் அவன் விடுபட்டதும் நாம் அறிந்ததே). இப்படி, பிரளய கர்த்தாவான ஈசனின் இருப்பிடத்தையே அசைத்த வீரன் ராவணன். அது மட்டுமில்லை, இந்த ராவணன் தேவர்களின் அதிபதியான இந்திரனையும் வென்றவன்.
♥ராவணனோடு யுத்தம் நடக்கும் போது, ராமன் தசமுகனின் முதுகில் காயங்கள் இருப்பதைக் கண்டு வியந்தான். உடன் அருகில் இருந்த விபீஷணனிடம்  ‘‘ஒரு உண்மையான வீரனுக்கு மார்பில் காயமிருக்குமே ஒழிய முதுகில் காயமிருக்காது. ஆனால் உனது அண்ணன் ராவணனுக்கோ முதுகில் காயங்கள் இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் விபீஷணா?’’ என்று  கேட்டான்.
♥ ராமன் வாயால் இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டதும் விபீஷணனுக்குக் கோபம் தலைக்கேறியது. ‘‘என்ன ராமா! எனது அண்ணன் கோழை என்று நினைத்து விட்டாயா?. மூவுலகங்களில் எங்கு தேடினாலும், என் அண்ணனைப் போல ஒரு சுத்த வீரனைக் காண முடியாது ராமா. என் அண்ணன் பொழுதைக் கழிக்க, இந்திரனிடமிருந்து  வென்று வந்த ஐராவத யானைகளோடு மல் யுத்தம் புரிவான்.
♥அப்போது அந்த யானைகள் அவனது மார்பில் தாக்கும். அதன் காரணமாக ஐராவதத்தின் தந்தங்கள், என் அண்ணனுடைய மார்பை துளைத்து, முதுகு வரை இறங்கி விடும். ஐராவதத்தின் தந்தத்தை உடலிலிருந்து பிரித்து எடுக்க என் அண்ணனுக்கு மனமில்லை. ஆகவே அதை அப்படியே விட்டுவிட்டான். அது மாறாத ரணமாக அவனது முதுகில் உள்ளது. இது தெரியாமல் அவனை கோழை என்று நினைக்காதே’’ என்று பொறிந்து தள்ளினான் விபீஷணன். இப்படி தேவர்களுக்கு மட்டுமில்லை அவர்களது யானைகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த மனிதன் ராவணன்.
♥இப்படிப்பட்ட ராவணன் ஒருநாள் நர்மதை நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற நகரத்தில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, ராவணனுடைய கூடாரத்தை மூழ்கடித்தது. ராவணன், அந்த வெள்ளத்தில் தத்தளித்துப் போனான். இதைக்கண்டு கரையில் இருந்த பெண்களும் அவர்களுடன் இருந்த ஆயிரம் கை படைத்த ஒருவனும் நகைத்தனர். அந்த ஆயிரம்கைக் கொண்டவன் வேறு யாருமில்லை.
♥சாட்சாத் கார்த்த வீர்யார்ஜுனன் என்ற அசுர குணம் படைத்த வேந்தன் தான். உண்மையில் நர்மதையில் வெள்ளம் பெருக்கெடுக்கக் காரணமே அவன் தான். அவன் தனது ஆயிரம் கைகளையும் நர்மதையின் குறுக்கில் போட்டு, அதன் பிரவாகத்தைத் தடுத்தான். பின்பு அவன் தனது கைகளை அங்கிருந்து எடுக்கவே, நர்மதை மடை திறந்த வெள்ளமாக பாய்ந்து ஓடத் தொடங்கியது.  அந்த வெள்ளத்தில் தான், சிக்குண்டான் ராவணன். கார்த்தவீர்யார்ஜுனனும் அவனது சேவகிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கும் தன்னைக் கண்டு எள்ளி நகையாடியதும், ராவணனுக்கு கோபம் கண்ணை மறைத்தது.
♥சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு, கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான். பிறகு நடந்த போரில் கார்த்தவீர்யார்ஜுனன் ராவணனை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் அவனை ஒரு கயிறால் கட்டி, தனது நகரத்தில் இருப்பவர்களுக்கு ‘‘இதோ பாருங்கள் பத்துத் தலைப் பூச்சியை’’ என்று வேடிக்கை காண்பித்தானாம். இப்படி மகா பலம் பொருந்திய ராவணனையே, பூச்சியாக நசுக்கியவன் கார்த்தவீர்யார்ஜுனன்.
♥இந்த கார்த்தவீர்யார்ஜுனன், திருமால் தத்தாத்ரேயராக அவதாரம் எடுத்த போது, அவரது தரிசனத்தைப் பெற்றவன். அவரிடம் திருமாலின் திருக்கையாலேயே  மரணமடைய வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கிய மாபெரும் விஷ்ணு பக்தன். ஆக மொத்தம் கார்த்தவீர்யார்ஜுனன் மாபெரும் வீரன் மட்டுமில்லை மாபெரும் விஷ்ணு பக்தனும் கூட.இப்படிப்பட்ட கார்த்தவீர்யார்ஜுனன் ஒரு முறை வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் பிதாவான ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வந்தான். அவனுக்கும் அவனது படையினருக்கும் ஜமதக்னி முனிவர் தன்னிடமிருந்த காமதேனுவின் துணைக் கொண்டு அமோகமாக விருந்து படைத்தார்.
♥அதைக் கண்ட கார்த்தவீர்யார்ஜுனன், தனக்கு அந்த காமதேனு வேண்டுமென்றான். காமதேனு முனிவர்களின் தனிச் சொத்து என்றார் முனிவர். பிறகென்ன பெரிய யுத்தமே வந்தது. காமதேனுவினிடமிருந்து ஆயிரமாயிரமாக வீரர்கள் தோன்றினார்கள். கார்த்தவீர்யார்ஜுனன் சேனை அனைத்தும் நாசமானது.  கோபமடைந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஜமதக்னியைக் கொன்றுவிட்டு, காமதேனுவின் கன்றைக் கவர்ந்து சென்றுவிட்டான். பிறகு சுக்கிராச்சாரியாரின் உதவியால் ஜமதக்னி முனிவர் உயிர்த்தெழுந்தார்.
♥தன் தந்தையின் இந்நிலைக்கு காரணம், கார்த்தவீர்யார்ஜுனன் தான் என்று உணர்ந்த பரசுராமர் அவனை எதிர்த்துப் போருக்குச் சென்றார். அவனுடைய படை அனைத்தையும் துவம்சம் செய்தார் பரசுராமர். இதனால் கோபம் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன், போர்க்களத்திற்கு வந்து பரசுராமரைக் கண்டபடி தாக்கினான். அவன் செலுத்திய பாணங்கள், பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக பரசுராமர் விட்ட பாணங்கள் அனைத்தும், அவனது ஆயிரம் மலைப் போன்ற கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி வீழ்த்தியது. அப்போது தான் அவன் தன் முன்னால் நிற்பது, சாட்சாத் பரம்பொருளே என்பதை உணர்ந்தான்.
♥பின்பு ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், பரசுராமரின் பாதத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் சரணாகதி அடைந்தான். பிறகு அவன் முக்தி அடைந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?    இப்படிப்பட்ட பரசுராமர், சீதையின் சுயம்வரம் முடிந்ததும் ஜனக ராஜ சபைக்கு வருகிறார். வந்தவர் ‘‘யார் என்னுடைய ஆராத்ய தெய்வம், ஈசனின் வில்லை உடைத்தது?’’ என்று கொக்கரிக்கிறார்.
♥ராமன் மெதுவாக அவரது பாதங்களைப் பணிந்து, ‘‘சுவாமி நான் நாணை மட்டுமே ஏற்றினேன். ஆனால் வில் எப்படி உடைந்தது என்பதை  அறியேன். என்னை மன்னித்து விடுங்கள்’’ என்றான். ‘‘ஓஹோ! புரமெரித்த பரமனின் வில், மானிடனாகிய  உன் கையில், எளிதில் உடைந்து விட்டது. இதை நான் நம்பவேண்டுமா? நன்றாக இருக்கிறது நீ கூறும் பொய்’’
♥‘‘அய்யனே! ரகுவம்சத்தில் பிறந்த நாங்கள் பொய் என்பதை அறியவே மாட்டோம். உண்மையில் அது என் கைப் பட்டவுடன் உடைந்து விட்டது.’’
♥‘‘என் ஈசன் மேரு மலையையே வில்லாக வளைத்தவன். அவன் புயங்கள் பட்டு உடையாத வில், கேவலம் ஒரு நரன், உன் கை பட்டு உடைந்து விட்டதா? நல்லது. இதோ இது சாட்சாத் அந்த பரந்தாமனின் வில்லான சார்ங்கம். முடிந்தால் இதில் நாணை ஏற்றி, அம்பு போடு பார்க்கலாம்.’’ என்று சொல்லி  ராமனின் கையில் விஷ்ணுவின் தனுசைக் கொடுத்தார் பரசுராமர். ராமன் அதை அனாயாசமாக வாங்கினான்.
♥அம்பையும் அதில் பூட்டிவிட்டான். பின்பு மெல்லக் கேட்டான் ‘‘சுவாமி எதை குறி வைக்கட்டும்’’ என்று. ராமன் வில்லைப் பிடித்த விதமும், அதில் நான் பூட்டிய விதமும், அவன் அந்த நாராயணனே என்பதை, பரசுராமருக்கு சொல்லாமல் சொல்லியது. ராமன் யார் என்ற உண்மையை அறிந்தப் பின், அவர் ஒரு நொடிக் கூட தாமதிக்க வில்லை. ‘‘ராமா! என் தவ வலிமையையும்  என் ஆணவத்தையம் உன் பாணத்துக்கு இறையாக்கு. அவை இரண்டும் தான், நான் நற்கதி பெறுவதற்குத் தடையாக இருக்கிறது’’ என்றார்.
♥வெற்றி என்பது ஒருவரை கொல்வது அல்ல. எதிரியை அடிபணிய வைப்பதே உண்மையான வெற்றி. அந்த வெற்றியில் தான், நம் எதிரி நம்மை அவனை விட உயர்ந்தவனாக ஒப்புக்கொள்கிறான். இதில் வருவதே உண்மையான வெற்றி. நம் எதிரியைக் கொல்வதால் வருவது இல்லை. ஆகவே ராமன் பரசுராமரைக் கொல்லவில்லை என்றாலும் அவரை வென்று விட்டான் என்றே பொருள்.
♥இதில் மேலும் ஒரு சந்தேகம் வரும். பரசுராமரும் விஷ்ணுவின் அவதாரம் தான் ராமபிரானும் விஷ்ணுவின் அவதாரம் தான். அப்படியிருக்க ஏன் இப்படி ஒரு நாடகம் என்பதே அந்த சந்தேகம். அதற்கு நம் ஆச்சாரியார்கள் பின்வருமாறு பதில் சொல்கிறார்கள்.  ராமன் முழு முதலே ஆயினும், அவன் இப்போது தன்னை மனிதனாகவே அறிவித்துக் கொண்டுள்ளான். மனிதனாகவே நடக்கிறான். அப்படியிருக்க, அவன் பின்னாளில் செய்யப் போகும் சாகசங்களுக்கு, புஜ பலம் மட்டும் போதாது. தபோ பலமும் தேவை. அந்த தபோ வலிமையை பரசுராமரின் ரூபத்தில் அடைந்தான் பகவான்.
♥பின்பு இந்த நாடகத்தின் மூலம் ராமனாக இருந்த பகவான், அதை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டான்.  உலகை அழிக்கும் பிரளயங்கரரான ஈசன் இருக்கும் கைலாயத்தைப் பந்தாடியவன் ராவணன். அவன் இந்திரனையே வென்றவன். ஐராவதத்தோடு மற்போர் புரியும் மாவீரன். அவனை  “பத்துத் தலைப் பூச்சி” என்று நசுக்கியவன் கார்த்தவீர்யார்ஜுனன். அந்த கார்த்தவீர்யார்ஜுனனைக் கலங்கடித்தவர் பரசுராமர். அந்த பரசுராமரின் ஆணவத்தை அழித்தொழித்தவன் ஸ்ரீராமன்.
♥இப்படி ராவணனை விட ஆயிரம் மடங்கு மேலே இருக்கும் பரசுராமரை, வென்றபோதே ராமன், ராவணனை வென்று விட்டான் என்கிறார் வேதாந்த தேசிகர். ஒரு சக்கரவர்த்தியை வென்றால் அவருக்குக் கீழ் படிந்திருக்கும் சிற்றரசர்களையும் வென்றதாகத் தானே பொருள். ஆக மொத்தத்தில் சீதையின் சுயம்வரத்தின் போதே ராவணன் வெல்லப்பட்டான் என்று வேதாந்த தேசிகர் சொல்லுவது, வாஸ்தவம் தானே?

Post a Comment

0 Comments