♥பெண்ணே
கதவுகளை தாழிட்டு விட்டு
கண்ணீரால் ஏன் உன் கனவுகளை கழுவுகிறாய்...
உன் மனவுறுதியால் மட்டுமே
உலகை நீ வென்றிட முடியும்!
கதவுகளை தாழிட்டு விட்டு
கண்ணீரால் ஏன் உன் கனவுகளை கழுவுகிறாய்...
உன் மனவுறுதியால் மட்டுமே
உலகை நீ வென்றிட முடியும்!
♥சிறு இளைப்பாறுதலுக்காய்...
மறைந்து கொண்ட நிழல்களைத்
பின்தொடர்ந்து செல்லாதே...
அதிலொன்றுமில்லை
அவநம்பிக்கையை
மட்டுமே
கண்டுகொள்ள முடியும்!
மறைந்து கொண்ட நிழல்களைத்
பின்தொடர்ந்து செல்லாதே...
அதிலொன்றுமில்லை
அவநம்பிக்கையை
மட்டுமே
கண்டுகொள்ள முடியும்!
♥உன் மீதான
உறுதியான நம்பிக்கை
உன் அயராத முயற்சி
இவை போதும்
அவசியமானவைகளை- நீ
அடைந்து கொள்ள...
உறுதியான நம்பிக்கை
உன் அயராத முயற்சி
இவை போதும்
அவசியமானவைகளை- நீ
அடைந்து கொள்ள...
♥உனக்கு நீயே தாயாகி
உன்னையே உனக்குள்
சுமந்திடு...
உனக்கு நீயே நேசம் பாராட்டி
உனக்கு நீயே வழிகாட்டு....
உனக்கு நீயே தட்டிக்கொடுத்து
உனக்கு நீயே
இளைப்பாறிட நிழலமைத்திடு...
உனக்கு நீயே
உற்ற தோழமையாகி
உன்னை நீயே சமாதானப்படுத்தி
வாழ்ந்து பார்!
உன்னையே உனக்குள்
சுமந்திடு...
உனக்கு நீயே நேசம் பாராட்டி
உனக்கு நீயே வழிகாட்டு....
உனக்கு நீயே தட்டிக்கொடுத்து
உனக்கு நீயே
இளைப்பாறிட நிழலமைத்திடு...
உனக்கு நீயே
உற்ற தோழமையாகி
உன்னை நீயே சமாதானப்படுத்தி
வாழ்ந்து பார்!
♥இறைவனையன்றி
வேறு யாராலும் -உன்னை தாழ்த்திடவோ..
வீழ்த்திடவோ
முடியாது!
வேறு யாராலும் -உன்னை தாழ்த்திடவோ..
வீழ்த்திடவோ
முடியாது!
♥ஆனால்... ஆனால்...
சிறு ஆறுதலுக்காய்..
சிறு அன்பிற்காய்..
சிறு புன்னகைக்காய்..
சிறு சந்தோஷத்திற்காய்...
யார் யாரையோ
எதிர்பார்த்து மட்டும்
ஏங்கி நிற்காதே!!
சிறு ஆறுதலுக்காய்..
சிறு அன்பிற்காய்..
சிறு புன்னகைக்காய்..
சிறு சந்தோஷத்திற்காய்...
யார் யாரையோ
எதிர்பார்த்து மட்டும்
ஏங்கி நிற்காதே!!
♥யாருக்காகவும் யாருமில்லா இவ்வுலகில்...
உன் கண்ணீர் துடைக்க
உன்னிரு கரங்களை விட்டால்
வேறென்ன இருக்கிறது.??
உன் கண்ணீர் துடைக்க
உன்னிரு கரங்களை விட்டால்
வேறென்ன இருக்கிறது.??
♥வாழ்வின் அத்தனை
இடர்களையும்
தகர்த்தெறிந்து
முன்னோக்கிப் பயணிக்கும் வழிகளை
நீயே கண்டுபிடி....
இடர்களையும்
தகர்த்தெறிந்து
முன்னோக்கிப் பயணிக்கும் வழிகளை
நீயே கண்டுபிடி....
♥துவண்டு போவதும்
துணிந்து வாழ்வதும்
இனி உன் சாமர்த்தியம் !
<><><><><><><><><><><><><>
♥அன்பழகி கஜேந்திரா -இலங்கை -மன்னார்.
துணிந்து வாழ்வதும்
இனி உன் சாமர்த்தியம் !
<><><><><><><><><><><><><>
♥அன்பழகி கஜேந்திரா -இலங்கை -மன்னார்.
0 Comments
Thank you