♥மாமனார் மாமியார் இருவரும் சிரித்து அன்பாக பேசியதை பார்த்த மருமகள் சமந்தா ‘இந்தப் பெருசுக ரெண்டும் ஒத்துமையா இருந்தா நமக்குத்தான் ஆபத்து. சண்டை மூட்டி விடணும்…’ – சமந்தா செயலில் இறங்கினாள்.
♥‘‘சேலைக்குப் பதிலா நைட்டி யூஸ் பண்ணுங்க அத்தே. உங்க உடம்புக்கு அது ரொம்ப அழகா இருக்கும். என்கிட்ட ரெண்டு புது நைட்டி இருக்கு. தர்றேன்… இப்பவே போட்டுக்கங்க…’’ மாமியார் யோசிக்கும் முன்பே நைட்டிகளை எடுத்துக் கொடுத்தாள்.
♥அடுத்த ஐந்தாம் நிமிடம் மாமனார் முன்… ‘‘மாமா, அத்தை பண்ற கூத்தைப் பாருங்க… இந்த வயசில போய் நைட்டி போட்டுக்கிட்டுத் திரியிறாங்க…’’ கேட்டதுமே ‘விருட்’டென எழுந்தார் பெரியவர்.
♥‘ஏன்டி… உனக்கென்ன கொமரின்னு நெனைப்பா? ஒழுங்கா லட்சணமா சேலையைக் கட்டுடீ!’ எனப் பெரியவர் சீறப்போறார்… ‘அதெல்லாம் முடியாது. நான் காலத்துக்கு ஏத்தாப்புலதான் இருப்பேன்’ என மாமியார் அடம்பிடிக்கப் போறார்… பார்க்கலாம் வேடிக்கையை என சமந்தா ஆர்வமாக பின்னாலேயே போனாள்.
♥அட இதென்ன… வெட்கத்தோடு நின்ற மாமியாரின் அருகில் போனவர், ‘‘அய்…! உனக்கு நைட்டி சூப்பரா இருக்கு வடிவு. இனி டெய்லி நைட்டியே யூஸ் பண்ணு! இன்னைக்கே அஞ்சாறு நைட்டி வாங்கிட்டு வந்துடறேன்!’’ என்றார்.
♥சமந்தா நொந்து போனாள்.
- சுபமி
- சுபமி
0 Comments
Thank you