HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தாம்பத்யம்

♥#தாம்பத்யம்
           

♥என்னங்க .. வேலை முடிஞ்சு வரும்போது ஏதும் காய்கறி வாங்கிட்டு வாங்க. நான் மெட்ரோல ஏறி இறங்கி வரவே உயிர் போயிடுமுங்க... என்றாள் கணவனை பார்த்து கார்த்திகா. 

♥ம்..ம்... வாங்கலாம்.. நீ மெதுவா போய் வா... வண்டி ஓட கத்துக்க என்றா முடியல என்கிறாய்.. என்ன செய்ய.. என்றார் சிவராமன். 

♥கார்த்திகாவிற்கு 39 வயது... தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அக்கவுண்டன்.  19 வயதில் உறவுக்கார சிவராமனை திருமணம் முடிச்சு  19 வயசுல ஒரே பையன் .. கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக ரஷ்யா சென்றுவிட...  வீட்டில் கணவன் மனைவி இருவரும் தனிமைப்பட்டனர்.

♥சிவராமன் 42 வயது. அரச பதிவாளர் அலுவலகத்தில் வேலை. இருவருமே காலையில் சென்றாள் இரவாகும் போதுதான் வீடு வருவார்கள்...

♥வீட்டு வேலை சமையல் என செய்வதற்கு 15 வருஷமா சாரதா என்ற 35 வயது பெண் தினமும் வந்து போவாள். 20 வயசில இருந்து வேலை செய்றதால ரொம்ப நம்பிக்கையா வைச்சிருக்காங்க . சாரதாவிற்கு பூர்வீகம் தெழுங்கு. நல்ல சிவந்த நிறம் சற்று உயரம் குறைந்தவள். கட்டுமஸ்தான உடல் . நல்ல அழகான தோற்றம் கொண்டவள். 

♥அன்று கார்த்திகா ஆபீசிலிருந்து சற்று நேரத்துடன் வந்துவிட்டாள்...   சிவராமனும் அப்போதுதான் வந்தார்... கார்த்திகா மொபைலில் தன் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தாள்... 

♥உடை மாற்றி வந்து மனைவி எதிரில் அமர... ஐயா காப்பி தரட்டுமாங்க..  என சாரதா கேக்க... இரும்மா என கூறியவர் பத்திரிகையை கையில் எடுக்க.. கார்த்திகா பேசி முடிக்கவும் சரியாக இருந்தது..

♥நேரத்தோட வந்தாச்சா .. என கேக்க ... ஆமாங்க ஒரு மணி நேரம் நேரத்தோட வந்திட்டன்.. என்றவள்  ரீவி ரிமோர்ட்டை எடுக்க... 

♥கார்த்தி ... உன் கையால காப்பி சாப்டு எத்தனை நாளாச்சு... இன்னிக்காவது ஒரு காப்பி போடன் நாம சேந்தே குடிக்கலாம்... என்றார் மெதுவாக.

♥என்னங்க நீங்க .. எனக்கு உடல் பூரா வலி உக்காந்து வேலை பார்த்தே இடுப்புவலி உயிரை வாங்குது... நான் போட்டா என்ன .. சாரதா போட்டா என்ன... எனக்கூறியவாறு சாரதா.. காப்பி தா.. ரெண்டு பேருக்கும் என்றாள்.

♥எப்ப பாரு முகத்தை உம்முன்னு வைச்சிருக்கா... ஏதும் கேட்டா எரிஞ்சு விழுகிறாய்...நீ சிரிச்சு பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது..  என்னாச்சு உனக்கு... கொஞ்ச நாள்  லீவு போட்டு ஓய்வெடுத்துக... என்றார் . 

♥ஓய்வா. ... ஆபீசில மேனஜர் முதல் பியோன் வரை கண்களை மேல கீழ மேயவிட்டு தான் பேசுறாங்க..  ரயில்வே ஸ்டேசன் பஸ் ஸ்டாப்... ஷேர் ஆட்டோ என எங்குமே கண்களை பார்த்து பேசமாட்டேங்குறாங்க... உடலை தான் மேயுறாங்க... அது எப்படியுங்க எல்லா ஆண்களும் ஒரு பெண்ணை பார்த்த உடனேயே அடையனும் என நினைக்கிறாங்க.... சா..... எவ்வளவு கேவளமான புத்தி இது. 

♥இப்ப ஏன் டென்சன் ஆகிறாய்.... எல்லா ஆண்களும் என பேசாதம்மா... எல்லா ஆண்களும் என்றா ஒரு பெண் கூட வீதியில் இறங்க முடியாது.. ஏன் குன்றத்தூர் அபிராமி முதல் எவ்வளவோ பெண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக பெற்ற குழந்தைகளை கூட கொலை செய்யலயா.....  பாலியல் உணர்வு என்பது ஆண்பால் பெண்பால் இருபாலருக்கும் பொதுவானது.  அதைநாம சரியா கடைப்பிடிக்கனும்...

♥என சிவராமன் பேசிக்கொண்டிருக்க ... விடுங்க... விடுங்க...  என நிறுத்தியவள் காப்பி சாப்பிட ஆரம்பித்தாள்.
பெயருக்கு தான் கார்த்திகா மனைவி.. ஆனால் சாப்பாடு முதல் உடுப்புகளை அலசுவது முதல் சிவராமனின் எல்லா வேலைகளையும் செய்வது சாரதா தான்.

♥சாப்பாடு முடிந்து கார்த்திகா தூங்க சென்றுவிட.. சாராதா பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள்... சாரதாவின் அருகே சென்ற சிவராமன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்யும் சாரதாவை ஏக்கத்துடன் பார்த்தவர்.. சாரதா முடிச்சிட்டு கிழம்பு. நான் தூங்கபோறன் .. என கூறி படுக்கை அறைக்கு சென்றவர்... அங்கு கார்த்திகா மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து.. 

♥இந்தாபாரு தைலம் ... இடுப்பு வலி என்றாயே எங்க உன் இடுப்பை கொஞ்சம் காட்டு நல்லா பூசி உருவி விட்டா கொஞ்சம் சரியாடும்...ஒரே நாட்காலியில் காலை முதல் மாலை வரை உடகாந்து வேலை பார்த்தா எல்லா வலியும் வரத்தான் செய்யும் என்றார்..

♥இப்பவா தைலம் பூச..பேசாம படுங்க அப்புறம் பார்க்கலாம் ... காலையில் நேரத்தோட.போகனும்...  என கூறியவாறு  மொபைலை வைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தாள் ...  மெதுவாக அவளின் மேல் கைவைத்த சிவராமன்.. கார்த்தி.. என மெதுவா கூப்பிட ..
முடியலிங்க.. ரொம்ப கஸ்ரம் உடம்புக்கு ... பேசாம படுத்து தூங்குங்க... என்றவள்.. தூங்க ஆரம்பிக்க... அவளை  வழமையான ஏக்கத்தோடு பார்த்தவாறு சிவராமனும் தூங்கிவிட்டார்.

♥இதுதான் கடந்த 15 வருடமாக சிவராமன் கார்த்திகா தம்பதிகளிற்கு இடையில் நடக்கிறது. பையன் பிறந்த பின் வேலையில் அவள் மீண்டும் சேர்ந்ததில் இருந்து இந்த இடைவெளி ஆரம்பமாகி விட்டது...

♥காலையில் செல்வது இரவில் வருவது என்ற பணம் ஒன்றை மட்டும் தேடும் ஒரு வாழ்க்கை முறையை நாள் தவறாது  வாழ்கிறார்கள்..

♥ஒவ்வொரு இரவும் மனைவியை நெருங்குவதும்.. அவளின் உடல் அசதியால் அவள் தூங்கிவிடுவதும் என இது நிரந்தரமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது...

♥மறுநாள் காலை . கார்த்தி நீ பேசாம வேலையை விட்டிரு... வீட்ல இரு.. நான் மட்டும் வேலைக்கு போறன்... என்றார் ..
என்னங்க பேசுறீங்க... பையன் படிப்புக்கு மாசம் மாசம் அனுப்பனும்.. நம்ம போரூர் அப்பாட்மெண்ட் லோன் இன்னும் ஐந்து வருசம் கட்டவேண்டி இருக்கு இதில நான் வேற வேலைய விட்டா .. நீங்க எப்படி இதை சமாளிப்பீங்க... விளையாடுறீங்களா...என்றாள்.

♥அதில்ல.. நமக்கு இருக்கிறது ஒரே பையன் நமக்கு எதுக்கு இரண்டு வீடு... அந்த அப்பாட்மெண்டை கைமாத்தி விட்டா பத்துவருஷமா நாம கட்டின லோன் பணம் நமக்கு வந்துடும்...  அதில பையன் படிப்பு செலவ பாக்கலாம்.. மீதிய பாங்ல போட்டிரலாம். நீ கூட நின்மதியா வீட்ல இருக்கலாம்... இடுப்புவலி.. அசதி என கஸ்ரபட தேவலை  நீ கூட 20 வயசில இருந்து இயந்திரமாய் வாழ்றாய்... நாம ஒரு மணிநேரம் கூட. சந்தோசமாய் இருக்கமுடியாத வாழ்க்கை வாழ்றதில என்ன இருக்கு ... என்று பேசி முடிக்க முதல்..

♥சிவராமனை பார்த்தவள்... ஓ.. புரிகிறது. .. உங்களுக்கு அதான் பிரச்சனையா இப்ப.. அதுக்காக வீடு பணம் வேலை எல்லாம் தூக்கி வீசனுமா ..  என்றாள்...

♥அதில்ல கார்த்தி நம்ம வாழ்க்கையை நாம வாழனும்... எனக்கு நீ உனக்கு நான் தான் .. நான் உங்கிட்ட தான் வருவன்.. வேறு யார்கிட்ட போவன்... நீ எப்ப பாரு முடியல முடியல என்றா ... நான் என்ன செய்ய என கத்தனும் போல இருந்து சிவராமனுக்கு... ஆனா மேலும் அசிங்கபடனும் என அமைதியாக இருந்துவிட்டார்.

♥காலையில் வேலைக்கு வந்த சாரதா மழையில் நனைந்து ஈரமாக வாசலில் நிற்க சிவராமன் ரவல் எடுத்து குடுத்து அவள் உடலை ஏக்கத்தோடு பார்த்தார்..  
துடைத்தவள் நேராக சென்று விறு விறு என சமயைலறையில் உக்காந்து காய்கறி நறுக்கியவாறு இருந்தாள்.. சிவராமன் மெதுவாக சமயறைக்கு செல்ல.. அங்கு சாரதா முழங்கால் வரை சேலையை உயர்த்தி கட்டியவாறு அருவாவால் காய்கறிகளை நறுக்குவதை பார்து பெருமூச்சுவிட்டார்...  சிவராமன் வருவதை கண்ட சாரதா.. விறுவிறுவென எந்திரிச்சு.. ஐயா ஆபீஸ் நேரமாச்சே போகலயா... என்றவள் .. 

♥இல்ல சாரதா இன்னிக்கு போகல .. மனசும் உடம்பும் சரியில்ல... தலைவலி... காப்பி ஒன்னு தா... என்றவாறு ஹாலில் சென்று அமர்ந்து கொண்டார்...
நிமிடத்தில் சாரதா காப்பி கொடுத்தாள்.. மாத்திரை ஏதும் இருக்காய்யா... என கேட்டவளை ஏற இறங்க பார்த்தவர்... ம்... நீ கூட மாத்திரைதான் என மனசிற்குள் கூறியவர்...   மீண்டும் பெருமூச்சை விட்டவர்... சாரதா அந்த தைலத்தை எடுத்தா என்றார்...

♥தைலைத்தை எடுத்துவந்து நீட்டியவளிடம்.. நீயே கொஞ்சம் நெற்றியில   பூசிவிடு... என்றார்... 
அவளும் விரலால் தைலத்தை தொட்டு நெற்றியில் பூச... 15 வருட வேலைக்கார வாழ்க்கையில் முதல் முதல் சாரதாவின் கை சிவராமன் மீது பட சாரதா கொஞ்சம் நெருக்கமாக நின்று தைலத்தை பூச... சிவராமன் மூச்சு சற்று சூடாகவே வேகமாக வந்தது... சிவராமனுக்கும் இத்தனை வருட வாழ்க்கையில் மனைவியை தவிர வேறு ஒரு பெண் மிக அருகில் வந்த நேரமும் இது.
திடீரென சாரதா என கூறியவாறு அவளின் இடையில் கைவைக்க...

♥அவள்.. ஐயா... என திடுக்கிட்டு ஓரடி பின்வாங்கி... நீங்களா ..ஐயா... தப்பு ஐயா என பட படத்தாள். சேலையை உருவி இடை மார்பு என எல்லாத்தையும் சரியாக மூடியவள்...மேலும் ஒரு அடி பின் நோக்கி சென்று நின்றாள்.

♥கொஞ்சம் புரிஞ்சு நட சாரதா.. ஒரே ஒரு தடவ.மாத்திரம் என்றவரை பார்த்த சாரதா. .. ஐயா. நீங்க எங்களுக்கு சாப்பாடு போடுற தெய்வம்...  உங்களுக்காக நான் உயிரை கூட குடு்ப்பன் ஐயா... ஆனா இது வேற ஐயா...

♥நீங்க பணக்காரங்க பணத்தை தேடி ஓடுவீங்க.. வாழ்க்கையை தொலைச்சுடுவீங்க. கடைசியில தான் வாழ்க்கையை தேடுவீங்க...
நாங்க எழைங்க நாங்க என்ன செய்தாலும் நீங்க மணிக்கணக்கா அட்வைஸ் சொல்லுவீங்க.. நாம தலை குனிஞ்சு கேட்பம்...  ஆனா இன்னிக்கு நீங்க தலை குனிஞ்சு நிக்கிறீங்க... இதுதான்யா  வாழ்க்கை.

♥சிவராமன் சாரதாவை  பார்த்தார்.... மன்னிச்சிரு சாரதா... என் மனைவி எனக்கு இந்த விசயதில ஒத்துவரல... என்னால இத அடக்கவும் முடியல என்ன செய்ய என தலையில் கைவைத்தார்..

♥புரிகிறது எனக்கு இந்த 20 வருசமா உங்கவீட்ல வேலை செய்றன்... ஒரு நிமிடம் கூட நீங்க என்னை தப்பா பார்த்தது இல்லை..ஆனா இந்த ஒரு சில நாட்கள் நீங்கள் தடுமாறுவதை நான் பார்த்தன். ஐயா நீங்க தப்பா நினைக்கல என்றா நான் சில விசயங்கள் கூறுகிறேன்... நான் அழகா இருக்கிறன் சுறுசுறுப்பா இருக்கிறன் என என்மேல ஆசைப்படுறீங்க...  அந்த அழகுக்கு நாங்க வாழ்ற வழ்க்கை தான் காரணம்.

♥நீங்க காலைமுதல் மாலை வரை ஏசியில  உட்காந்து வேலை பாக்கிறிங்க... மனசுக்கும் மூலைக்கும் தான் வேலை ஆனால் உடம்பு அப்படியே தூங்க ஆரம்பிக்கிது. வியர்வை கூட வராது. இது பின்னாடி நிறைய பிரச்சனைகளை தருது.

♥ஆனா நாம ஓடியாடி மூச்சு வாங்கி வியர்வை சிந்தி வேலை செய்றம்...
உடம்பும் தூங்காது அழகா வரும்.
நீங்க வீடு வந்ததும் சோர்வா இருக்கு என மெத்தைல படுத்துருவீங்க.. 
ஆனா நாங்க வீடு போனதும் என்னய மாதிரி உடலால் கஸ்ரப்பட்ட என் கணவர் வருவார்... இருவரும் நல்லா சாப்பிட்டு அன்றைய கதைகளை பேசி சந்தோசமா ஒன்னா தூங்குவோம்.. குறைஞ்சது வாரம் நாலுவாட்டி சரி சந்தோசமா இருப்பம்.

♥காமம் உறவு என்கிறது ஒன்னும் கெட்டது கிடையாது.. நாம அதை கெட்டது தப்பு அசிங்கம் என நாம தான் ஓரங்கட்டி வைச்சிட்டம். பசி தூக்கம் போல காமமும் மனிதனின் முக்கிய உணர்வு. பசி எடுத்தா சாப்டுறம்.. தூக்கம் வந்தா தூங்கிறம். . அதே மாதிரி தான் உடல் உணர்வு வரும்போது நம்ம துணையோட பகிர்ந்துக்கிறம். ஆனா உங்கள மாதிரி பணம் பணம் என ஓடும் கணவன் மனைவிகள் ஒழுங்கா சாப்டுறதும் இல்ல. ஒழுங்கா தூங்றதும் இல்ல. ஒழுங்கா உடலுறவ வைக்கிறதும் இல்ல.

♥மனைவி விரும்பும்போது கணவனுக்கு முடியாமல் இருக்கும்... கணவன் விரும்பும் போது மனைவிக்கு முடியாமல் இருக்கும்..
உடல் உறவு இல்லாதவங்க மனரீதியா இறுக்கமடையுறாங்க... கோபப்படுறாங்க. வாட்டமாகவே இருப்பாங்க...

♥ஒரு வாரம் லீவு போட்டு வெளியூர் ரூர் போங்க.. ஹோட்டல்ல ரூம் போட்டு தங்குங்க... அம்மா மனசு மாறும். 
அம்மாக்கு ஆசை இல்லாம இருக்காது.. ஆனா அவங்க வேலை அவங்கள விடுதில்லை... அதால லீவூ போட்டு வெளியூர் போங்க.. சரியாடும். என்றாள்.

♥மறுநாள் . கார்த்தி.. நமக்கு என்னோட ஆபீஸ்ல  ஒரு வாரம் இலவச மலேசியா சுற்றுளா பயணம் கொடுத்திருக்காங்க... ஹோட்டல் மற்றும் சுத்தி பாக்கிற ஏற்பாடு பிளைட் டிக்கட் எல்லாம் இலவசம்.  நீ ஆபீசில வாரவாரம்  லீவு போடு. என்றார் சிவராமன்.
அப்படியா.. மலேசியாவா..  சூப்பர் சரி என்ற கார்த்திகாவை ஆச்சரியமாக பார்த்தார்....

♥புறப்படும்போது வாசலில் நின்ற சாரதாவை பார்த்தார் சிவராமன்... ஏதும் தெரியாத அப்பாவி போல் வெள்ளந்தியாக புன்னகைத்தவாறு ஹப்பியா போய் வாங்க என்று கையசைத்தாள்.....

♥இதே சாரதாவின் இடத்தில் வேறு பெண் யாராவது இருந்திருந்தாள்.. தான் தப்பாக நடக்க முயன்றதை பெரிதாக்கி குடும்பம் பிரியிறவரை கொண்டு சென்று இருப்பார்கள்... ஆனால் ஏழையாக இருந்தாலும் தாம்பத்ய வாழ்க்கை என்றா என்ன என நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாள் சாரதா....  படிப்பை விட அனுபவவே சிறந்தது என சாரதா நிரூபித்திருக்கிறாள்... என மனதிற்கள் அசைபோட்டவாறு எயார்போர்ட் நோக்கி சென்றார்..... 

♥மலேசியா ஹோட்டல் ரூமில் ... என்னங்க ரூம் நல்லா இருக்கெல்ல...  
ம்... ரூம் மட்டுமா நீ கூட தான் நல்லா இருக்கியே இன்று.. நம்ம திருமணமான முதலிரவு ஞாபகம் வருது .. உன் முகத்தில் புத்துணர்ச்சி அழகு சிரிப்பு எல்லாமே தெரிகிறதே. என சிவராமன் கூற...

♥சீ..போங்க....  பழச எல்லாம் பேசீட்டு... .
என தன் கால் நகங்களுக்கு பூச்சு பூச ஆரம்பித்தாள்.. இரு... இரு... அவள் அருகில் கட்டிலில் சென்று உட்கார்ந்தவர் அவளின் கால்களை தூக்கி தன் மடியில் வைத்து நகப்பூச்சை அவர் பூசிவிட ஆரம்பித்தார்....  என்னங்க இது.. நீங்க சரியா பூச மாட்டீங்க.... என கூறியவள்
என்னங்க தைலம் கொண்டா வந்தீங்க... 
என்று வெட்கத்தோட கேட்டாள் கார்த்திகா..

♥தைலம் என்ன தைலம் இன்னிக்கு நான் தான் உனக்கு தைலம்....  லைட் ஆப்...

♥நாட்கள் ஓடியது ஐந்து நாட்கள் ...ஓடியது இப்ப சிவராமனும் கார்த்திகாவும் கைகோர்த்து தான் வெளியே சுற்றி பார்க்க கிளம்புகிறார்கள். மிக நெருக்கமாகவே ஒன்றாகவே அமருவது நடப்பது என அவர்களின் இடைவெளி குறைய ஆரம்பித்தது...

♥பயணம் முடிந்து வீடு திரும்பிய சிவராமன் கார்த்திகாவை பார்த்து ஆச்சரியப்பட்டாள் சாரதா... என்னங்க என்னங்க என்று சிவராமன் பின்னாடியே சுற்றியதை சிரிப்போடு பார்த்தாள். 

♥என்னங்க ராஜினாம லெட்டரை ஆபீசுக்கு அனுப்பிட்டன்... இனி நான் வீட்லதான் இருக்கப்போறன்... நம்ம அப்பார்ட்மெண்டை வித்துடுங்க... என்றாள்...

♥சிவராமன் திரும்பி சாரதாவை பார்த்தார்... நீ படிக்காத மேதையம்மா.... என்று  மனசிற்குள் கூற...

♥என்னங்க அந்த தைல போத்தலை எடுத்து வாங்க.. சரியான இடுப்பு வலி... என படுக்கை.அறையில் இருந்து சத்தம் வர..

♥இதோ தைலம் ரெடி.... 
என சிவராமன் ஓட
சமையலறையி்ல் தன்  இளம் சிரிப்புடன் வேலையை தொடர்ந்தாள் சாரதா...


Post a Comment

0 Comments