HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் என்ன

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பு


🎁 கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

🎁 இவ்விழாவானது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் துவக்க நாளாகும்.

🎁 இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.

🎁 மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு வீடுகளில் குடில்கள் வைக்கும் பழக்கம் முக்கியமாக இருக்கும். நிறைய மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் ஒவ்வொரு மாதிரியான குடில் வைக்க விரும்புவார்கள்.

🎁 டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறிஸ்துவ ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர்.

🎁 கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.

🎁 விண்மீன்க்கு அடையாளமாக காகிதத்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர். வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர்.

🎁 நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும்.

🎁 கிறிஸ்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

குடில் அமைக்கும் முறை



 🎁 சாதாரணமாக தரையில் புற்களை பரப்பி, குடில் அமைத்து, அதில் பலவண்ண பல்புகளை பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.


🎁 வீட்டில் நிறைய தொட்டிச் செடிகள் இருந்தால், அவற்றை ஒன்றாக வைத்து, அதன் மேல் குடில் போன்று அமைக்கலாம். இது உண்மையில் வித்தியாசமாக இருக்கும்.


🎁 எளிமையான முறையில் குடில் அமைக்க நினைத்தால், மண் கொண்டும் செய்யலாம்.


🎁 இன்னும் வித்தியாசமாக செய்ய நினைத்தால், வைக்கோல் பரப்பி, தென்னங்கீற்றை கூரையாக வைத்து குடில் அமைக்கலாம்.


🎁 இருப்பதிலேயே மிகவும் சூப்பரான ஒரு வழி என்றால், அது களிமண் பயன்படுத்தி குடில் அமைப்பது தான். இப்படி செய்வதால், அதிகமாக செலவு ஆகாமல் இருப்பதோடு, இயற்கையான தோற்றத்தையும் கொடுக்கும்.


🎁 குடில் அமைக்க இடம் இல்லாவிட்டால், உங்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தால், சார்ட் பேப்பரில் அழகாக குடில் இருப்பது போன்று ஓவியம் வரைந்து வைத்து, அதில் குட்டியான பலவண்ண பல்புகளால் அலங்கரிக்கலாம்.


🎁 இன்னும் வித்தியாசமாக செய்ய நினைத்தால், ஐஸ் க்ரீம் குச்சிகளைப் பயன்படுத்தி குடில் அமைக்கலாம்.


🎁 இந்த முறையில் வைக்கோல் மற்றும் குச்சி இருந்தால் போதும். இதனைக் கொண்டு அருமையான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கலாம்.


🎁 லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்றால், அது மரக்குடில் தான். அதற்கு மரத்துண்டுகளால் குடில் அமைத்து, அதில் புற்கள், வைக்கோல் மற்றும் பல்புகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



🎁 நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் மிக முக்கியமான, முதன்மையான அடையாளமாகத் திகழ்கிறது. கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துவின் பிறப்பை அடையாளப்படுத்துகிறது. இனம், மொழி, நாகரீகங்களைக் கடந்து, கிறிஸ்து உலக மக்கள் அனைவருக்காகவும் பிறந்திருக்கிறார் என்னும் நற்செய்தியை இந்நட்சத்திரம் அடையாளப்படுத்துகிறது. இவ்வாறு நட்சத்திரங்கள், கிறிஸ்து பிறப்பின் அடையாளங்களாக, வீடுகளிலும், கிறிஸ்துமஸ் குடில்களிலும், கிறிஸ்துமஸ் மரங்களிலும் இடம் பெற்றன.


🎁 பண்டைய ஜெர்மானிய நாகரீகத்தில் பிற இனத்தவர் பசுமையான மரங்களை முடிவில்லா வாழ்வின் அடையாளங்களாக வழிபட்டு வந்தனர். தீய சக்திகளைத் துரத்துவதற்கு இவ்வழிபாடு பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, சாக்சன் என்ற இனத்தைச் சார்ந்தவர்கள், தங்களின் முக்கியமான கொண்டாட்டங்களில், பசுமையான மரங்களை வழிபடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் காட்டில் உள்ள மரங்களை வழிபட்டதாகவும், பிறகு அவைகளை வெட்டி வந்து, வீடுகளில் அலங்கரித்து வைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. 


🎁 கிறிஸ்துமஸ் கேக் என்று பிரபலமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் இனிப்பு ஆங்கிலேயர்களின் பண்பாட்டு வழக்கமாக இருந்தது. கிறிஸ்து பிறப்பு காலத்தில் அக்கொண்டாடத்தின் தயாரிப்பாக, அவர்கள் நாள் முழுவதும் நோன்பு இருப்பதும் அந்நாளின் இறுதியில், பழச் சாறைக் (Plum Porridge) குடித்து நோன்பை முடித்துக்கொள்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த பழச் சாறோடு, உலர்ந்த பழங்களும் வாசனைத் திரவியங்களும், தேனும் சேர்க்கப்பட்டபோது அது கிறிஸ்துமஸ் புட்டிங் (Christmas pudding) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற மிருதுவான ஒரு பண்டமாக உருவெடுத்தது.


🎁 கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்புதல் என்பது, இக்கொண்டாட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக இருந்து வருகிறது. பெருவாரியாக இந்த அட்டைகள், குழந்தை இயேசு, புனித யோசேப்பு, அன்னை மரியாள், இடையர்கள், ஆடுமாடுகள் ஆகியவற்றை கொண்டதாக வடிவமைக்கப்பட்டன.


🎁 கிறிஸ்துமஸ் தாத்தாவையும் பரிசுப்பொருட்களையும் ஒருபோதும் வெவ்வேறாக பிரித்துப் பார்ப்பது இயலாத ஒன்று. கிறிஸ்துமஸ் தாத்தாவின் அடையாளமே பரிசுப் பொருட்கள்தான். புனித நிக்கோலஸ்தான், கிறிஸ்துமஸ் தாத்தாவாக அறியப்பட்டவர். புனித நிக்கோலஸ் ஏழைகளுக்கு வாரி வழங்கும் குணம் படைத்தவராக இருந்தார். ஆனால், உனது வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும் என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், அவர் முகம் தெரியாத மனிதராகவே, தனது தாராள குணத்தை வெளிப்படுத்தி வந்தார். இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்துமஸ் காலத்தில், சிவப்பு நிற ஆடை அணிந்து பரிசு கொடுப்பவராக உலகெங்கும் அறியப்படுகிறார்.


🎁 பரிசுப் பொருட்கள் வழங்குதல் என்பது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவுக்கு பரிசுகளாக, பொன், தூபம், வெள்ளைப்போளம் போன்றவற்றை வழங்கினார்கள். பொன், "கிறிஸ்து அரசர்" என்பதையும், தூபம், "கிறிஸ்து இறைமகன்" என்பதையும், வெள்ளைப்போளம், "கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு" ஆகியவற்றையும் குறிக்கின்றன. இதுவே தொடக்கமாக அமைகின்றது. 

Post a Comment

0 Comments