♥வெள்ளி பாத்திரம், கொலுசு, பூஜை சாமான்கள் அனைத்தும் புதுசு போல் மின்ன இந்த 1 பொருள் மட்டும் போதும்! வேற ஒன்றும் தேவையே இல்லை.
♥நாம் பற்களுக்கு உபயோகிக்கும் கோல்கேட் டூத் பவுடர் அல்லது வேறு ஏதேனும் டூத் பவுடராக இருந்தாலும் பரவாயில்லை. பற்களுக்கு உபயோகிக்கும் பற்பசையை விட அதாவது பேஷ்டை விட டூத் பவுடர் வெள்ளியின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல் புரியும். அதனால் பற்பசையை உபயோகிக்க வேண்டாம்.
♥பற்பொடியை தண்ணீர் படாமல் வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், பூஜை சாமான்கள் என்று எந்த பொருளாக இருந்தாலும் அதில் நன்கு தேய்த்து விட்டால் நொடியில் பளபளன்னு மின்னும். சுலபமாக இருக்கும் இடங்களில் சுத்தமான வெள்ளை காட்டன் துணியை கொண்டு பற்பொடியை எடுத்து வெள்ளி பொருள் மீது தடவி நன்கு துடைத்துவிட வேண்டும்.
♥சற்று வேலைப்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் துணியால் தேய்த்தாலும் உள்ளுக்குள் இருக்கும் கருமை நீங்காது அல்லவா? இதனால் அதற்கு டூத் பிரஷ் உபயோகப்படுத்தலாம். ஆனால் தண்ணீர் படாமல் நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். ஒரு ஒரு பக்கமாக, சிறிது சிறிதாக தேய்த்து விட்டால் வெள்ளி பொருளில் இருக்கும் கருமை அந்த பவுடரில் கலந்து பவுடர் கருப்பாக மாறி விடுவதை பார்க்கலாம்.
♥கருமை முழுவதும் பற்பொடியானது கிரகித்துக் கொள்ளும். இதனால் வெள்ளிப் பொருட்கள் நொடியில் பளபளன்னு புதிதாக கடையில் வாங்கியது போல் ஜொலிக்கும். பொதுவாக வெள்ளி பொருட்களை சுத்தம் செய்ய எலுமிச்சை, பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் உபயோகப்படுத்துவது உண்டு. இது எதுவுமே தேவையில்லை வெறும் பற்பொடியை கொண்டு ஐந்து நிமிடம் தேய்த்தால் உங்களுடைய வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் புத்தம் புதியதாக மாறிவிடும்.
♥பற்பொடி பல்லை பளிச்சென்று ஆக்குதோ இல்லையோ வெள்ளியை நிச்சயம் ஆக்கும். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பயன் அடையுங்கள்
0 Comments
Thank you