♥ கணவன் மனைவிக்கிடையில் எவ்வளவு பாசம், அன்பு என்பது வெளியில் யாருக்கும் தெரியாது. பார்த்தால் பாசம் தெரியலாம். எவ்வளவு என்பது எப்படி தெரியும்? அதுபோல் தான் சண்டையும் தெரியும், எதனால்… ஏன்… எப்படி… என்பது இருவருக்கு மட்டுமே தெரியும். அந்த சண்டைக்கான தீர்வும் இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
♥ தன் கணவனிடம் எதிர்பார்க்கும் அன்பையும், பாசத்தையும், பாதுகாப்பையும் முதலில் தான் தருவதற்கு தயாராக இருக்கணும் என்றில்லை . ஆனால் இது ஆண்களை விட, பெண்களுக்கு கை வந்தக் கலை.
♥ஒருத்தரை ஒருத்தர் குறை கூறுவதை விடுத்து, உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அதை திருத்துவதற்கு முயற்சி செய்தால், இணையும் திருந்தி விடுவர்;
♥மன்னிக்கும் பக்குவம் வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.
0 Comments
Thank you