♥#இளைஞர்களே_யோசியுங்கள்!
♥சில ஆண்டுகளுக்கு முன், விடுதியில் தங்கி பணி புரிந்த போது, என்னுடன் தங்கியிருந்த அறைத் தோழி ஒருத்தி, சமீபத்தில் எனக்கு போன் செய்து, தனக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கும் விஷயத்தை கூறினாள். நானும் சந்தோஷத்துடன், 'உங்கள் காதல் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துகள்...' என்றேன்.
♥'இல்ல; எனக்கு வேற இடத்துல நிச்சயம் ஆகியிருக்கு; மாப்பிள்ளை பெங்களூருல வேலை பாக்கிறார்...' என்றாள். 'என்னாச்சுடி... அவ்வளவு சின்சியரா காதலிச்சீங்களே...' என்ற போது, 'அதவிடு; அது ஒரு பிச்சக்கார குடும்பம்; அவங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றாங்க; கூரை வீடு. அவன எப்படி கல்யாணம் செய்துக்கிறது... அதான் கழட்டி விட்டுட்டேன்...' என்றாள் கூலாக!
♥எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், இருவருமே கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவன் தன் வீட்டுக்கு கூட பணம் அனுப்பாமல், இவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பான். ஹாஸ்டல் பீஸ் முதல், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் வரை எல்லாவற்றிற்கும் அவன் தான் பணம் தருவான்.
♥சிலசமயம், இவள் அறையில் இருந்து கொண்டு, தனக்கு வேண்டியதை வாங்கி வரச் சொல்லி, மொபைல் போனில் அவனிடம் ஆர்டர் போடுவாள். அவன் மெனக்கெட்டு வாங்கி வந்து, ஹாஸ்டல் வாசலில் காத்திருந்து கொடுத்து விட்டு செல்வான். இவளோ, தன் சம்பளத்தில் ஐந்து பைசா தொடாமல், அப்படியே வீட்டுக்கு அனுப்பி விடுவாள்.
♥இருவரும் சுத்தாத இடமில்லை. பேசும் போது கூட, 'புருஷா... பொண்டாட்டி...' என்று தான் பேசுவர். இன்று, அதையெல்லாம் மறந்து, அவன் குடும்பத்தை பிச்சைக்கார குடும்பம் என்கிறாள். காதலிக்கும் போதும், அவனிடம் யாசகம் பெற்று அனுபவிக்கும் போதும், அவன் குடும்பத்தை அறியவில்லையா இவள்!
♥தன் குடும்ப சூழல் மற்றும் பெற்றோரின் கஷ்டம் புரியாமல், தன் உணர்ச்சிகளுக்கு மட்டும் மதிப்பு கொடுத்து, சுயநலத்துடன் செயல்பட்ட அந்த இளைஞனுக்கு இது சரியான பாடம் தான்!
♥இளைஞர்களே... நீங்கள் காதலிக்கும் பெண், உங்களை உண்மையிலேயே காதலித்தால், அவளுக்கு உங்கள் அன்பைத் தவிர வேறு எதுவும் தேவையிருக்காது; உங்கள் பர்சை காதலிப்பவர்களுக்கு, தேவைகள் தீரவே தீராது என்பதை புரிந்து, சுதாரித்து, வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!
0 Comments
Thank you