HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள்பற்றிய முழுமையான பார்வை

♥ஆண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள்
பற்றிய முழுமையான பார்வை

♥ஆண் பிறப்புறுப்பு உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் அமைந்துள்ளன.

#வெளிப்புற_உறுப்புகள்

#ஆண்குறி
#விதைப்பை

#உட்புற உறுப்புகள்

#விதைநாளம்
#விரைகள்
#விந்துசுரப்பி
#புரோஸ்ட்ரேட்சுரப்பி
#சிறுநீர்தாரை

#ஆண்குறி
♥ஆண்குறி என்பது ஆணின் உறுப்பு. இது உருளையான நீள வடிவத்தில் உள்ளது. சில நேரங்களில் இது கடினமாகவும் விரைப்பாகவும் இருக்கும். சில நேரங்களில் இது தளர்வாக இருக்கும். ஆண் குறியில் எலும்புகள் இல்லை. இதில் பஞ்சு போன்ற குழாய் திசுக்கள் அதிக அளவில் இருக்கும். ஆண்களின் பாலுணர்வு தூண்டப்படும் போது இக்குழாய்களில் இரத்தம் நிரப்பப்படும். இதனால் ஆண்குறி விரைப்படைகிறது. விரைப்புத்தன்மை குறையும் போது இரத்தம் இரத்தக்குழாய்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. சிறுநீர்த்தாரை ஆண்குறியின் வழியாக வெளியே திறக்கிறது. இதன் மூலம் சிறுநீர் மற்றும் விந்து நீர் வெளிப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் வெளியேறுவதில்லை.

♥ஆண்குறியின் முகப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது ஆண்குறி மொட்டு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அதிக நரம்புகள் முடிவடைவதால் இது மிகவும் உணர்ச்சியை தூண்டக்கூடிய பகுதியாக உள்ளது. இதை மூடியுள்ள தோல் மிக மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். இதற்கு மொட்டு உறை அல்லது நுனித்தோல் என்று பெயர். இதை எளிதாக பின்புறம் தள்ள முடியும். இந்த தோல் அகற்றப்படுவதற்கு தோல் நுனியிதழ் அகற்றுதல் சுன்னத் அல்லது விருத்த சேதனம் என்ற பெயர். ஆண்குறி ஆண்களின் மகிழ்ச்சியை தூண்டும் உறுப்பாகும். இதுவே உடலுறவு கொள்ளும்போது பெண் குறியினுள்ளோ ஆசனவாய் உள்ளோ செலுத்தப்படுகிறது.

#_விதைப்பை
♥இது ஆண்குறிக்கு பின்னால் தொங்கியபடி இருக்கும் சிறிய பை ஆகும். இதனுள் விரைகள் உள்ளன. விதைப்பை விரைகளை பாதுகாப்பதோடு விந்தணுக்கள் உருவாவதற்கு தேவையான வெப்ப நிலையில் அவை இருப்பதற்கு உதவியாக உள்ளன.

#_விரைகள்
♥இரண்டு விதைப்பைகளுக்குள்ளும் இரண்டு விரைகள் உள்ளன அவைநீள் வட்ட வடிவத்தில் சிறியதாக இருக்கும். விரைகளில் விந்தணுக்களும் ஆண் இயக்கு நீரான டெஸ்டோஸ்டிரோனும் உருவாக்கப்படுகிறது. விரைகள் தொடுதல் மற்றும் அழுத்தத்துக்கு உணர்ச்சி வசப்படக்கூடியது. இதில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவை சுமாராக பனிரண்டு வயதில் ஆரம்பமாகி ஆயுள் முழுவதும் தொடர்ந்து உருவாகின்றன. இவையே குழந்தை உருவாக தேவையான விதைகள் ஆகும். டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி நீர் பாலுணர்வு தூண்டப்படவும், இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்களான மீசை முளைத்தல் ஆகியவை நிகழவும் காரணமாக உள்ளன.

#_விதை_நாளம்
♥ஆண் குறிக்கு இரண்டு பக்கமும் உடலின் உட்புறத்தில் இரண்டு குழாய்கள் உள்ளன இவை  விந்தணுக்களை விரைப்பையிலிருந்து சிறுநீர் தாரைக்கு அனுப்புகின்றன. ஆண் குடும்ப நல அறுவை சிகிச்சையின் போது இந்த குழாய்களைத்தான் துண்டிக்கிறார்கள். இவற்றை விந்துக்குழாய் என்றும் அழைக்கிறார்கள்.

#_விந்து_சுரப்பிகள்
♥இரண்டு விந்து சுரப்பிகள் உள்ளன. பை போன்ற அமைப்புகளான இவை 60 சதவீத நீர்மத்தை வழங்கி விந்தணுக்கள் இவற்றில் நீந்திச்செல்ல உதவுகின்றன. இந்த வெள்ளை நிற திரவம் விந்தணுக்களுக்கு தேவையான உணவை வழங்குகின்றது. விந்தணுக்கள் மற்றும் விந்து நீர்அடங்கிய விந்து சிறுநீர்த்தாரை வழியாக வெளியே தள்ளப்படுகின்றது. சிறுநீர்த்தாரை சிறுநீர் அல்லது விந்து மட்டுமே ஒரு நேரத்தில் வெளியே வருமாறு அமைந்துள்ளது.

#புரோஸ்ட்ரேட்_சுரப்பி
♥புரோஸ்ட்ரேட் சுரப்பி சிறுநீர்பைக்கு சற்று கீழே வால்நட் அளவில் இருக்கும். இது விந்துவில் உள்ள 30 சதவீத திரவத்தை சுரக்கிறது. இந்த திரவம் காரத்தன்மை உள்ளதாக இருப்பதால் இது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க பாதையில் நிலவும் அமிலத்தன்மையை சமன்படுத்த உதவுகிறது. புரோஸ்ட்ரேட் சுரப்பி தூண்டப்படும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது (குறிப்பாக ஆசனவாய்வழி உடலுறவு கொள்ளும்போது) பாலியல் மகிழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக அமைகிறது.

#சிறுநீர்த்தாரை
♥சிறுநீர்த்தாரை ஒரு பொதுவான திறவமாகும். ஆண்குறியில் அமைந்துள்ள இது சிறு நீர் மற்றும் விந்து வெளியேறும் வழியாகும். ஆனால் ஒரு நேரத்தில் சிறுநீர் அல்லது விந்து ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே வெளிவரும்

Post a Comment

0 Comments