HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காதலுக்காக ----சிறுகதை .

காதலுக்காக ----சிறுகதை .

இந்த பதிவு நான் அதிகமாக சிரிச்சு நிறைய ரசுச்சு கேட்ட ஒரு குழப்பத்தின் கதை இது.

இந்த கதையோட ஹீரோ நான் தாங்க.என் பேரு பிரேம் .எம் பீ ஏ படிச்சிட்டு வேலை தேடுற லட்சத்தில் ஒருவன் .என் அப்பா என்கிட்ட பேசி அஞ்சு வருஷம் ஆச்சு .அவருக்கு புடிச்சத நான் படிக்கல.நான் படிச்சதும் எனக்கு கை கொடுக்கல .அவர்கிட்ட பேச சங்கட்டமா இருக்கு.வேலை கிடச்சதும் பேசலாம்னு நினைச்சேன் .ஆனா வருஷம் தான் ஓடிட்டு இருக்கு.

இன்னைக்கு ஒரு இன்டர்யூக்கு தான் போயிட்டு இருக்கேன் .தேனீக்களாய் மக்களின் பரபரப்பு வாழ்க்கை ஆரம்பிக்குற நேரம் இது.அப்ப தான் என் பக்கத்துல அவள கவனிச்சேன் ."அப்பாடா இப்படி ஒரு அழகி இது வரைக்கும் அந்த கடவுள் காட்டாம சதி பண்ணிட்டானே"என்று புலம்பி கொண்டு இருந்தேன் .நிமிஷத்துக்கு ஒரு முறை அவள பாக்காம இருக்க முடியல .அந்த நிமிஷத்துல பஸ்ல இருந்து இன்னோரு பொண்ணு வேகமா இறங்கிட்டு இருந்தாள் .அப்ப அவ முந்தானை முனை படிக்கட்டின் தகரத்தில் மாட்டி கொள்ள பஸ் கிளம்ப ஆரம்பிக்க நான் வேகமாய் ஓடி அவளை வேகமாய் சுத்த அவள் தடுமாறாமல் சேலை மட்டும் பஸ்ஸில் சென்றது .சட்டேன என் சட்டைய கழட்டி அவகிட்ட கொடுத்து ஆட்டோ புடிச்சு அனுப்பி வச்சேன் .பதட்டத்தில் அவ ஒரு நன்றி கூட சொல்லல .

பனியனோட நிக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சு .என் பர்ஸ் என் சட்டை பாக்கெட்ல வச்சிருந்தேன்.இனி இன்டர்யூக்கு எப்படி போறது?ஒண்ணுமே புரியல.என் எதிரே இவ்வளவு ரசிச்சுட்டு இருந்த அந்த தேவதை என்கிட்ட வந்து"என்ன ஹீரோ சார் என்ன யோசிக்குறீங்க?பயப்படாதீங்க.அவுங்க எனக்கு தெரிஞ்சவங்க தான்.நாளைக்கு இதே டையத்துக்கு இங்க வந்து உங்க சட்டைய வாங்கிகங்க "என்றதும் நான் அவளிடம் "சட்டை யாருக்கு வேணும்.இன்னைக்கு இன்டர்யூ போகனும்.பணம் அவுங்ககிட்ட இருக்கு"என்றதும் சிரித்துக்கொண்டே சட்டை வாங்கவும் இன்டர்யூ போகவும் பணம் தந்தாள்.ரொம்ப சந்தோசமாய் இன்டர்யூ அட்டண்ட் பண்ணி வேலையும் கிடச்சது .உண்மையில் அவ ஒரு தேவதை தான்.மறுநாள் என் சட்டை பர்ஸ் எல்லாமே கொண்டு வந்து தந்தாள்.அவ பணத்த திருப்பி தந்தேன் .அவ வாங்க மறுத்துட்டா.நானும் ரோம்ப வற்புறுத்தல.

ஒரு அவளோட அட்ரஸ் கண்டுபுடிக்க அவளுக்கே தெரியாமல் அவள பின்த்தொடர்ந்து போனேன் .அவ ஒரு வீட்டுகுள்ள போனா .ஆனா திரும்பி வரவே இல்லை.இது அவ வீடு தான்.மறுநாளும் அதே வீட்டுகுள்ள தான் போனாள் .அப்ப தான் அந்த வீட்டுல இருந்து புரோக்கர் ஆறுமுகம் வெளிய வந்தாரு.என் தங்கச்சிக்கும் அவரு தான் மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காரு .அவர புடுச்சு நேரா ஒரு ஹோட்டல்க்கு கூட்டிட்டு போய் நல்லா சாப்பாடு வாங்கி தந்து அவள பத்தி விசாரிச்சேன் .அவ பேரு அகல்யா.பெரிய ஐ. டி .கம்பெனில வேலை பாக்குறா.மத்த விவரங்கள் எதுவும் தெரிஞ்சுக்கல.வீட்டுக்கு போனதும் என் அம்மாகிட்ட மெதுவாக விஷயத்தை சொன்னேன் .அம்மா ஒண்ணுமே பதில் சொல்லல .ஒரு வாரம் கழிச்சு அம்மா என்கிட்ட வந்து "நாளைக்கு நல்ல நாளா இருக்கு.ஆறுமுகத்துக்கிட்ட சொல்லியாச்சு.நாளைக்கு பொண்ணு பாக்க வர்றோம்னு.நீயும் லீவ் சொல்லிரு."என்றதும் என் முகம் வாடுவதை பார்த்து "பொண்ணு உனக்கு புடுச்ச அதே பொண்ணு தான்பா"என்றதும் அம்மாவை கட்டி புடுச்சுக்கிட்டேன்.ஆனா பாருங்க எனக்கு தான் லீவு கிடைக்கல .என் குடும்பத்த அனுப்பி வச்சுட்டு நான் வேலைக்கு போயிட்டேன் .திரும்பி வரும்போது என் குடும்பமே அமைதியா எனக்காக காத்திருப்பது புரிந்தது .எங்கப்பா என்கிட்ட வந்து நின்னதும் பெருசா ஏதோ நடந்திருச்சு.திட்டி தீக்க போறார்னு பாத்தா என்ன கட்டி புடுச்சு "பெருமைபடுறேன் பிரேம்.உன் அப்பாவா இன்னைக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கேன் .ஆல் த பெஸ்ட் "என்று கை குலுக்கினார்.

எனக்கு எங்கப்பாவ ரொம்ப புடிக்கும் .அவரு கூட பேசாமல் நான் அனுபவிச்ச வேதனை இன்னைக்கு தீர்ந்து போச்சு இதுவும் என் தேவதையின் வருகையால் தான்.நிச்சியதார்த்த வேலைகள் வேகமா நடந்து முடுஞ்சு .அன்னைக்கு என் உறவுகள் சூழ அவளுக்கு என் சம்பளத்துல ஐ போன் அதோட ஒரு வைர மோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்.ஆர்வமா இருக்கேன் என் தேவதைய சேல கட்டி பாக்க .அவ வர போறாங்குறத என் இதய துடிப்பே உணர்த்துச்சு.மெதுவாய் நிமிர்ந்து பாத்தேன் .அதிர்ந்துபோனேன் .ஒண்ணுமே புரியல.என்னடா நடக்குது இங்க .நான் பாத்த பொண்ணு சுடிதார் போட்டுருந்தாள்.அவ பக்கத்துல பட்டு புடவையில் வேற பொண்ணு வர்றா அவளயும் ஏற்கனவே பாத்திருக்கேன்.நான் பஸ்ல சட்டைய கொடுத்து அனுப்புன அதே பொண்ணு தான் அவ.ரொம்ப குழம்பி போயிட்டேன் .நான் யோசிட்டு இருந்தேன் .அப்ப கல்யாண பொண்ணோட அப்பா அங்க இருந்த எல்லோரையும் எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சாரு .அப்ப என் தேவதைய காட்டி "மாப்ள .இது எங்க பக்கத்து வீட்டு பொண்ணு.அவ பேரும் அகல்யா தான்.சின்ன வயசுல இருந்தே இரண்டு பேரும் சிஸ்டர்ஸ் மாதிரி .எப்பவும் இங்க தான் இருப்பா.அவளும் என் பொண்ணு மாதிரி தான்."என்றதும் எனக்கு நல்லா புரிஞ்சது .அவசரத்தால நான் தான் குழப்பிட்டேன்.கல்யாண பொண்ணுகிட்ட சொல்லி என் நிலைமைய புரிய வைக்கலாம்னு நினைச்சேன் .அப்ப கல்யாண பொண்ணு என்கிட்ட பேசனும்னு சொல்றதா சொன்னாங்க .நல்ல சான்ஸ்னு கிளம்பி அவ ரூம்குள்ள போனேன் .

ரூம்ல பெரிய சைஸ் போட்டோல ஒரு ஆர்மி ஆபிஸர் சிரிச்சபடி இருந்தார் .இன்னோரு போட்டோல அகல்யாவும் அவரும் காஷ்மீர் பனிமலையில் நெருங்கி நின்னு போட்டோ எடுத்திருந்தாங்க.எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருந்தது .அவ பெட்ல உக்காந்தேன்.அவ வந்து என் முன்னாடி நின்னு "எனக்கு ஆர்மி மேன கல்யாணம் பண்ணிக்கனும்னு ரொம்ப ஆசை.அம்மா அப்பாவும் தேடி அலைஞ்சு தருண கல்யாணம் பண்ணி வச்சாங்க .ரொம்ப நல்லவன்.ஆனா முப்பது நாள் கூட அவன் கூட வாழ முடியல .தீவிரவாதிகள் கூட நடந்த சண்டையில இறந்துட்டான்.அவன் இறந்ததுக்கு அப்புறம் ஆபிஸ் அதுவிட்டா வீடுன்னு வாழ்ந்துட்டு இருந்தேன் .அப்ப தான் அன்னைக்கு உன்ன பஸ்ல பாத்தேன் .அத்தனை பேர் இருந்த இடத்துல நீ ஒரு பொண்ணுக்கு பிரச்சினைன்னு வந்ததும் ஓடி வந்த பாரு அப்ப ஒரு நிமிஷம் நான் உன்னை பத்தி யோசிச்சேன் .ஒரு பொண்ணு மனசுல இடம் புடிக்க அதவிட ஒரு சம்பவம் வேணுமா?ஏதோ சினிமா சீன் மாதிரி இருந்தது.ஒரு பொண்ணோட மானத்த காப்பாத்துற ஒவ்வொருவரும் பத்து ராணுவ வீரனுக்கு சமம் .என்ன பொருத்தவரை.அப்புறம் உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு உங்க வீட்ல பொண்ணு கேட்டு வந்தாங்க .ஒரு நிமிஷம் கூட யோசிக்கல.உடனே சரின்னு சொல்லிட்டேன் .உனக்கு உண்மையிலேயே என்ன பிடிச்சிருக்கா ?"என்றதும் நான் எழுந்து நின்று "உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் இந்த வாழ்க்கையே புடிச்சிருக்கு "என்ற வார்த்தையின் முடிவில் அவள் அஞ்சு விரலும் என் விரல்களுக்குள் இணைஞ்சிருச்சு.ஒரு குழப்பு குழப்பிருந்தாலும் இப்ப என் தேவதை யாருன்னு கண்டு புடுச்சுட்டேன்.அவகிட்ட தான் வாழணும்னு ஆசை இருக்கு.வாழ்ந்து பாக்க தயார் ஆகிட்டேன் நானும் .

(படிச்சவங்க மறக்காம கமண்ட் போடுங்க )

(முற்றும்)

நன்றி !

Post a Comment

0 Comments