♥அவசர அவசரமாக உணவு உண்பவரா நீங்கள்?
வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் :
♥ஒருவர் வேகமாக உணவை விழுங்கினால், இரத்த சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். இன்சுலின் எதிர்ப்பு இரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை உண்டாக்கும்.
♥இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சிதை மாற்ற நோயுடன் தொடர்புடையதாகும். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய் போன்ற பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
♥வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் ர்னுடு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
♥வேகமாக உணவை உண்பவர்கள் பொதுவாக அதிகளவு உணவை ஒரே நேரத்தில் வாயில் வைத்து, சரியாக மெல்லாமல் அப்படியே விழுங்குவார்கள். இதனால் அஜீரண கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசத்தால் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
♥வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எப்படி சாப்பிட வேண்டும்?
♥உங்களின் தினசரி அட்டவணையில் உணவிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கவும். உங்களின் ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது 20 நிமிடமாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
♥சாப்பிட தொடங்குவதற்கு முன் உங்களின் உணவினை ரசிக்க பழகுங்கள். உங்கள் உணவின் வாசனை, தோற்றம் என அனைத்தையும் நன்கு உணருங்கள். இவற்றை உணர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக நீங்கள் சாப்பிட நீண்ட நேரம் எடுத்து கொள்வீர்கள்.
♥டிவி, தொலைக்காட்சி மற்றும் கம்பியூட்டர் முன் அமர்ந்து சாப்பிடாதீர்கள். மின் சாதனங்கள் முன் உட்கார்ந்து சாப்பிடும்போது உங்கள் மனதை திசை திருப்பி வேகமாக அல்லது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவு தெரியாமல் வைத்துவிடும்.
♥சிறிய துண்டுகளாக எடுத்து நன்கு மென்று சாப்பிடுங்கள். இது நீங்கள் சாப்பிடும் வேகத்தை குறைப்பதுடன் உணவு செரிக்கும் வேகத்தை அதிகரிப்பதுடன் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாகுவதையும் தடுக்கிறது.
♥உணவு உண்பதை ஒரு வேலையாக கருதாமல், நம் உடலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் ஒரு முக்கிய செயலாக நினையுங்கள்.
0 Comments
Thank you