தாய்மை
இறைவனும்
பெண்மையை நேசிக்கிறான்
எப்படி தெரியுமா
தாய்மையை
பெண்ணினத்துக்கு
தன் சீதனமாக தந்து
பெண்மையை உலகம் போற்ற
உயர செய்தான்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பாக்கியம்! தாய்மை
ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!
குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!
நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!
அழகான கவிதை
அம்மா..
.
பெண்மையின் சிகரம் தாய்மை
தாய்மையே
உனக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்
நீ வாழ்க வாழ்க
அன்புடன்
உங்கள் நண்பன் சேர்மக்கனி 🙏🙏🙏
0 Comments
Thank you