HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சூப்பரான சில குறிப்புகள்.

♥சூப்பரான சில குறிப்புகள்.
♥பழைய சாதம், ரவை, மைதா கலந்து
மிக்ஸியில் சிறிது அரைத்து கடுகு, வெங்காயம் மிளகாய் தாளித்து சேர்த்து தோசை வார்க்க சுவையான தோசை ரெடி.

♥முறுக்கு வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும் என்றால் அரிசி ஒருபடி என்றால் கால்படி அளவு உளுத்தம் பருப்பு போட வேண்டும். உளுத்தம் பருப்பை வறுத்துப் போட வேண்டும்
- ஆர்.அஜிதா, கம்பம்.

♥அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
- கே.ராகவி, காஞ்சிபுரம்.

♥முட்டைகளை வேகவைத்த பிறகும் உரிக்க கஷ்டமாக உள்ளதா? இதனை சமாளிக்க ஒரு கண்ணாடி டம்ளரில் முட்டையை போட்டு, நீரை நிரப்பி, கையால் மூடி, 10 வினாடிகள் நன்றாக குலுக்கவும், பிறகு முட்டையை எடுத்து உரித்தால் எளிதாக உரிக்க வரும்.
- ராஜி ராதா, பெங்களூரூ.

♥வெய்யில் காலத்தில் முந்தின இரவே நீரிலோ அல்லது மோரிலோ ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை வெந்தயம் குறைக்கும்.
- பத்மஜா, ஸ்ரீரங்கம்.

♥எலுமிச்சை பழச்சாற்றை காலையில் வெந்நீரிலும், மதியம் மோரிலும் மாலையில் சர்க்கரை சேர்த்து சர்பத்தாக சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும்.
- ஆர்.சங்கவி, செய்யாறு.

♥அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர், தேன், பால் மூன்றில் ஏதேனும் ஒன்றில் நெருஞ்சி முள் பொடியை ஒரு டீஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால், வெயில் காலத்தில் ஏற்படும் நீர் எரிச்சல், நீர்கட்டு போன்ற சிறுநீரகக் கோளாறு நீங்கும். இதே போல் பொன்னாங்கண்ணி இலைப் பொடியை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
- எஸ்.கெஜலட்சுமி சிவானந்தம், லால்குடி.

♥சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.

♥இறைச்சியை வேக வைக்கும் போது ஒரு கொட்டை பாக்கு சேர்த்து வேகவைத்தால் விரைவில் வெந்திடும், மிருதுவாகவும் இருக்கும்.
- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

♥கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் எளிதில் வெந்திடும்.

♥பூண்டில் தேங்காய் எண்ணை தடவி ஐந்து நிமிடம் வெயிலில் வைத்து விட்டு தோல் நீக்கினால் எளிதாக உரிந்திடும்.

♥தேங்காய்க்கு பதில் வேர்க்கடலை மற்றும் முந்திரி போட்டு சட்னி அரைத்தால் சுவையாக இருக்கும், வித்தியாச சுவையுடன் இருக்கும்.
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.

♥சர்க்கரை பொங்கல் செய்யும் போது இரண்டு ஸ்பூன் பழ எசன்ஸ் கலந்து செய்தால் பொங்கல் பழ வாசத்துடன் இருக்கும்.

♥புளியை பீங்கான் ஜாடியில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கறுத்து போகாமல் இருக்கும்

Post a Comment

0 Comments